தினமலரில் அறிவியல் புனைவுகளை சென்னை தினம் 375 – சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். அது குறித்த பார்வை.
1. “சக்கரம்” – பிரசன்னா
ஒரே கதையில் எக்கச்சக்கமாய் திணித்திருக்கிறார் பிரசன்னா. ஒரு இடத்தில் நிலைக்கும் சூரியன் போல் கதை நகர வேண்டும். இங்கோ மழை போல் மூத்திரம் அடிக்கிறது. தினமலர் என்பதால் இது போதும் என்று முடிவெடுத்து இருப்பார் கதாசிரியர். வாசகனிடம் எந்தவித கருத்துருவாக்கமும் எண்ணவிதைப்பும் உருவாக்காத ஆக்கம். அதைவிட படு பொருத்தமில்லாத ஓவியங்கள் இந்தக் கதையின் நடுவே வருகிறது. கதையில் அறிவியல் என்பதே கிடையாது. வருங்காலத்தில் நடப்பதாக பாவ்லா செய்கிறது. அந்த வருங்காலத்தைக் குறித்தும் கற்பனாசக்தி இல்லாத கதை. புனைவு என்றால் நம்பகத்தன்மை வேண்டும். முக்கிய கதாபாத்திரத்துடன் ஒன்ற வேண்டும். புதியதாக ஏதாச்சும் விஷயம் இருக்க வேண்டும்.
ஒன்றுமே இல்லாமல் அறிபுனை கதை என்கிறார். அதாவது மேஜிகல் ரியலிசமாக வருங்காலமும் இக்காலம் போல்தான் இருக்கும் என்கிறார்.
- ஒரு காப்ஸ்யூல் சோறு – சுதாகர் கஸ்தூரி
- கால இயந்திரக் கைதி – ஜீவ.கரிகாலன்
- சென்னை 2114 – ஆயிஷா இரா.நடராசன்
- போகம் தவிர் – இரா.முருகன்
- 2047 ஆகஸ்ட் 15 – ராஜேஷ்குமார்
- நாளை மற்றுமொரு – தவமணி வசீகரன்
- இன்னும் 5 நிமிடங்களில் – ஜி.பி
கறாரான மதிப்பீடுக்கு நன்றி சார்.. உங்கள் கருத்துக்களுக்கு பதில் போல் அல்லாமல், நான் என்ன உத்தேசித்திருந்தேன் என்பதை சொல்கிறேன்..
கதையின் முக்கிய அம்சம் தற்போதைய உணவு முறை அழிந்து அறிவியல் கண்டுபிடிப்பான ஸ்டெம் செல் முறைப்படி வழக்கில் இருக்கும் ஒரு உணவு முறை.. ஆனால் அந்த அறிவியலை மட்டுமே விலாவாரியாக எழுத விரும்பாமல், அது ஏற்படுத்தும் அதிர்வுகள்/மாற்றங்கள் மட்டுமே கதையில் வருகிறது..
மற்றபடி கதையின் மையமே மறுபடியும் ஆதியில் இருந்து ஆரம்பிக்கும் காலச்சக்கரத்தின் கான்செப்ட்.. மனுவும் மேடமும் அந்த ஆரம்பப்புள்ளியில் நிற்பவர்கள்.. post apocalyptic என்று சொல்ல முடியாவிடினும் கிட்டத்தட்ட அப்படி ஒரு காலத்தில் நடக்கும் கதை. ஆகவே sci-fi கதைகளின் வழக்கமான அம்சங்களான ரோபாட்கள், கால இயந்திரம், சயின்டிஸ்ட், டாக்டர் போன்றவை (அறிவியலே கூட நேரடியாக) வர வாய்ப்புகள் இல்லை..
அறிவியல் புனைவுகளில் அறிவியல் கான்செப்ட்கள் மட்டுமே வரவேண்டுமா என்பது விவாதத்திற்கு உரியதாக கருதுகிறேன்.. மற்றபடி உங்கள் கருத்துக்களில் பெரும்பாலானவற்றில் உடன்படுகிறேன்.. மிக்க நன்றி 🙂
சொல்லப்போனால் கதையை ஆரம்பிக்கும் முன்னமே, sci-fi கதைகளின் வழக்கமான அம்சங்கள் வராத ஒரு அறி-புனை கதை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.. May be it didn’t worked for few..