இந்தப் பத்தி என் கவனத்தை ஈர்த்தவை:
* அத்திரி ரிஷி போன்றோர் பெரிய மகானாக நிறுவப்பட்டிருக்கிறார். மும்மூர்த்திகளையே பச்சிளம் பாலகராக்கிய அனுசூயாவின் கணவர் என்பதால் முக்கியமான ஆளாக சொல்லப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்டவரே பிறப்பை இழிவாக்கி வாதங்களில் வென்றது
* ஏகாதசி விரதம் என்றால் ருக்மாங்கதன் ராஜா கதை நினைவிற்கு வரும். அவருக்கு இப்படி ஒரு பின்னணி
* கிருச்சமதர் என்றால் ஏதோ கிறித்துவ போதகரின் பெயர் போல் தோன்றுகிறதே!
முதலில் அகலிகை… அப்புறம் முகுந்தையா? இந்திர லீலைகளில் இன்னும் எத்தனையோ? ‘இந்திர பதவி’க்கு இன்னும் ஏன் அத்தனை பேர் ஆசைப்பட்டனர் என்பது புரிகிறது. ஆனால் ஒரே ஒரு விஷயம் உதைக்கிறது. தாயைச் சபித்த கிருச்சமதர், தந்தை இந்திரனை ஏன் சபிக்கவில்லை? ஆணாதிக்க மனோபாவமா அல்லது…. ’இந்திரன் மகன்’ என்பதால் விட்டு விட்டாரா? புரியவில்லை…
ருக்மாங்கதன் ராஜாவின் நடவடிக்கை மிக உயர்ந்த ஒன்று. உண்மையான பாரத க்ஷத்ரியப் பண்பைக் காட்டுகிறது.
கிருச்சமதரின் மகன் யார் எனத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்:-)
சபிக்க முடிந்தவர்களைத்தானே சபிக்க முடியும். இந்திரனோ எங்கோ இருக்கிறான். அம்மா அருகில் இருக்கிறாள். முன்பே உண்மையையும் சொல்லவில்லை. எனவே, கோபம் ஆகியிருக்கும்.
கிருச்சமதரின் மகள்/ன் குறித்து கேட்கிறேன்
உண்மைதான். இந்த மாதிரி கதைகளை இளைய தலைமுறைக்குச் சொல்ல அம்மாவைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்..