விவாதிப்பதற்கான விஷயங்கள் உலகெங்கும் எக்கச்சக்கம். ஒரு பட்டியல்.
- அன்னா அசாரே: தேர்தல் சீரமைப்பு – எவர் போட்டியிடலாம்? எவ்வளவு செலவழிக்கலாம்?
- ஆப்கானிஸ்தான் போர்
- ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாமா? சவூதி கிணறுகளே போதுமானதா?
- கார்பன் குறைவாக கக்கும் நாடுகள் கரிமம் அதிகம் உபயோகிப்பவர்களிடமிருந்து பணம் மட்டும் பெற்றுக் கொள்ளலாமா? உலகமே உமிழ்வுகளை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டுமா?
- எச்.ஐ.வி (அ) எயிட்ஸ்
- எல்லையில் சுவரெழுப்பி பாதுகாப்பதா? உலகமே இணையத்தாலும் பொருளாதாரத்தாலும் சுருங்கிய நிலையில் திறந்தவெளியாக குடிபுகலை அனுமதிப்பதா?
- வங்கிகளை திவாலாக்குவதா? மீட்டெடுப்பதா?
- வலைப்பதிவுகள்
- லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆவது: பெரு நிறுவனங்களில் முதன்மையான்வர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரிப்பது
- துப்பாக்கி தோட்டா கட்டுப்படுத்தல்: நுகர்வோர் சந்தையாக அனைவரும் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாமா? காவல்துறைக்கு மட்டுமே சொந்தமா?
- இஸ்ரேலும் இரானும் பாலஸ்தீனமும்
- கல்வியறிவு: வாழ்க்கைக்குத் தேவையான படிப்பும் வருவாய்க்கும் உபயோகமான கல்லூரி வாழ்க்கையும்
- உடல்நல காப்பீடு: எகிறும் மருத்துவ செலவும் ஏறும் வயோதிகர் மக்கள்தொகையும்
- வட கொரியா: போக்கிரி நாடுகளின் கையில் இராணுவ பலம்
- அணு ஆயுதம்: மாற்று சக்தி
- உடல் பருமன்: மாறும் உணவு கலாச்சாரம்
- கடற்கொள்ளையர்: சோமாலியாவை மேற்கத்திய நாடுகள் ஊக்குவிக்கிறதா?
- கலவிக் கல்வி: இந்திய நாகரிகம் காமசூத்ராவை கோவிலிலேயே கொண்டிருந்தாலும், வைய விரிவு வலையெங்கும் மிக அதிகமான பலான தேடல் கொண்டிருப்பதன் சூட்சுமம்
- அறிவியல் ஆராய்ச்சி: எவாஞ்சலிகல் கிறித்துவத்தின் கட்டுப்பெட்டித் தன்மைகளை எவ்வாறு தடுத்து, ஸ்டெம் செல் போன்ற துறைகளில் மருத்துவத்தை முன்னேற்றலாம்?
- தீவிரவாதம்: போரிட்டு அடக்க முடியுமா?
- உலக வெம்மையாக்கம்
- பள்ளிக்கூட மாணவர் பிரச்சினைகள்: சோசியல் மீடியா அச்சுற்றுத்தல்
- மாற்று எரிசக்தி
- பொக்கீடுகள்: வரிச்சுமை, பட்ஜெட்
- அரிதாகிப் போன ஜீவராசிகள் குறித்து அஞ்ச வேண்டுமா? டைனோசார் போல் போனால் போட்டுமா?
நீயா? நானா 🙂