அணு உலைகளை ஏன் அமெரிக்கா உதயகுமார் எதிர்க்கிறார்?


வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி – 1.8.5)
உட்பொருள்
அயல் மனைகளில் தினமும் புகுந்து, மிகுந்த விருப்போடு தன் கைகளால் கிடைத்ததை அளைந்து, கைகளில் அகப்பட்டதை மகிழ்ச்சியுடன் உண்ட அமெரிக்கா, சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இன்று நம்மில் கலந்தான்.
அராபியர் கடைந்த எண்ணெய் எவ்வளவு விருப்பமோ அதே அளவிற்கு உலகின் அணுகலன்களும் அமெரிக்காவிற்கு விருப்பமானதாயிற்று என்பது உரை.

அமெரிக்காவிற்கு மூன்று கவலைகள்:

1. தங்களை விட பராக்கிரமத்துடன் இன்னொரு இடம் வளர்ந்துவிட்டதாக உலகம் நினைக்கத் துவங்கிவிடுமோ?

2. தங்களுக்கான காரியங்களை சாதிக்கக் கூடிய குறைவான செலவில் நிறைவான லாபம் தரும் ஸ்தலங்கள் குறைந்துவிடுமோ!

3. தங்களின் முதல் மரியாதையான இந்திர பதவி போன்ற ஸ்திரதன்மைக்கு இந்தியா போன்ற குடியரசு வல்லரசு கோருமோ?

இந்த அச்சங்களை நீக்க அமெரிக்கா பல உபாயங்களைக் கையாளுகிறது. அதில் ஒரு அஸ்திரம் திரு உதயக்குமார்.

உலகெங்கும் உள்ள அணு உலைகள் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பங்கம் விளைவிக்கிறது. முன்னும் ஒரு காலத்தில் இரண்டே இரண்டு நாடுகள் மட்டுமே அணு உலை வைத்திருந்தது. ஒன்று அமெரிக்கா; இன்னொன்று ருசியா.

கொஞ்ச நாள்போக்கில் நட்பு நாடுகளான இங்கிலாந்திற்கும் பிரான்ஸிற்கும் அமெரிக்கா அணுப் பொருட்களைக் கொடுத்தது. சீனாவும் அணுகுண்டு வெடிக்கும் நாடாக வளர்ந்தது.

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இந்தியா அணு சோதனை செய்து பறைசாற்ற, இராவோடு ராவாக பாகிஸ்தானும் இந்த ஐவரோடு இணைந்து எழுவரானது.

இன்றைய அளவில் இஸ்ரேல் – நம்பர் எட்டு.

வட கொரியாவால் தம்மாத்துண்டு வெடியாவது போட முடியும் – ஒன்பது.

இரான் கடும் பிரயத்தனத்தில் இருப்பதால் – #10.

இப்படியே போனால், சங்கரன்கோவில் வாக்காளர் எல்லோருக்கும் யுரேனியம் தருவதாக ஜெயலலிதா அறிவிக்கும் நாள் தூரத்தில் இல்லை.

இந்த மாதிரி உலகெங்கும் அதிகாரமும் அணுவும் சிதறி இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இருப்பதை எல்லாம் தன்னிடம் கொண்டு வரவேண்டும். இனிமேல் எவருக்கும் தாரை வார்க்கக் கூடாது என்பது ஒபாமா சித்தாந்தம்.

இதில் பையன் ஜார்ஜ் புஷ் வேறு ரகம். நல்ல நாடாக இருந்தால் அவர்களிடமும் கொஞ்சம் கொடுத்து வைப்பதில் தவறில்லை என்று பார்ப்பது ரிபப்ளிகன் கட்சி. உற்ற தோழனாக இருந்தாலும், நாம் படியளந்தால் மட்டுமே பாக்கெட் மணி என்று கெட்டியாக இருப்பது டெமொக்ரடிக் கட்சி.

அமெரிக்க அரசியல் நினைவுக்கு வந்தது.

அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குழுவை அமெரிக்காவில் டெமொக்ரட்ஸ் என்கிறார்கள். ஒபாமா கட்சி. மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாது என்று எண்ணுபவர்கள் இவர்கள் பக்கம். மக்களிடமே நல்லது கெட்டதை விட்டுவிட்டால், சுயநலமாக இருப்பார்கள்; எனவே, அதிகாரம்தான் பொதுவுடைமையாக இயங்க வேண்டும் என்று கருதுபவர்களும் இவர்கள் பக்கம்.

பொறுப்பைக் கையில் எடுக்கும் குழுவை ரிபப்ளிகன் கட்சி என்கிறார்கள். மிட் ராம்னியின் கட்சி. இன்னொருத்தருக்கு என்னுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரியாது என்று நினைப்பவர்கள் இவர்கள் பக்கம். தூண்டி விட வேண்டிய திரியாக இருப்பதை விட மெழுகுவர்த்தியாக எரிய விரும்புபவர்கள்.

இந்தியாவில் தன்னிறைவு வரக்கூடாது. மின் உற்பத்தி இடைஞ்சல் செய்ய வேண்டும். இதனால் அயல் முதலீட்டாளர்களுக்கும் கவலை பிறக்கும். எவனோ, எவளோ…. எப்போது பார்த்தாலும் எதற்காவது செங்கொடி தூக்கி வேலை நிறுத்த போராட்டம் செய்யும் நாடு என்னும் பிம்பம் எழும்…

இது பங்குச்சந்தையைக் கவிழ்ப்பதற்கு நல்லது.

அணு மின்சாரம் என்றால் ஏதோ நாக பாணம் போல் சயனைட் குப்பி பயம் எழுப்புவதால் உள் கட்டுமானங்களில் சுணக்கம் விழும். நம்பகமான நாடு அல்ல என்னும் பிம்பத்தை சுமத்தலாம்.

டாலர் கீழே படுத்திருக்கும் இந்த நிலையில் இது பேஷ்.

கிடைத்தார் உதயகுமார். குருஷேத்திரமாகிறது கூடங்குளம்.

Situation Hopeless… But Not Serious

தொடர்புள்ள சுட்டிகள்:

1. NNSA HEU removal featured on The Rachel Maddow Show | National Nuclear Security Administration

2. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar

3. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

4. பத்ரி சேஷாத்ரி: எந்த மின்சாரம் ‘நல்லது’?

5. பத்ரி சேஷாத்ரி: கூடங்குளம் போராட்டம்

6. கூடங்குளமும் தி.நகரும் « நேசமுடன்

7. கூடு :: இலக்கியம் :: குறும்படம்: “குமுதம் தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல் – சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.”

8. தமிழ்ஹிந்து – கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1 & விஸ்வாமித்ரா

9. அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை | ஆர்.பாலாஜி

10. எஸ்.குருமூர்த்தி  » கூடங்குளம் போராட்டம்- திரைக்குப் பின்னால் யார்?

8 responses to “அணு உலைகளை ஏன் அமெரிக்கா உதயகுமார் எதிர்க்கிறார்?

 1. சுயநலமில்லாமல் பத்தாண்டு கால அமெரிக்க வேலையையும் வாழ்க்கையையும் உதறித்தள்ளிவிட்டு வந்து பஸ்சிலும் இரண்டாம் வகுப்பு ரயிலிலும் பயணம் செய்துகொண்டு மக்களுக்காக பணியாற்றும் உதயகுமார் மீது அவதூறு செய்யச் வெட்கமில்லையா உங்களுக்கு ? அமெரிக்காவை அண்டிப் பிழைத்துக் கொண்டிருப்பவர் நீங்கள். அவர் அமெரிக்கவை உதறிவிட்டு வந்தவர்.. முழு தகவல்கள் தெரியாமல் இப்படி உளற வேண்டாம். தயவுசெய்து அணு உலை எதிர்ப்பு தொடர்பாக இந்தியாவில் நடக்கும் இயக்கங்களின் 40 வருட வரலாற்றின் முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். முடிந்தால் இடிந்தகரைக்கு வந்து மக்களுடன் பேசுங்கள். ஆர்.எஸ்.எஸ் பிரசாரத்தை இங்கே வாந்தி எடுக்க வேண்டாம். உங்கள் நிலையை நினைத்து வெட்கப்படுகிறேன். ஞாநி

 2. இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை உயர்ந்துவிட்டதால் , அமெரிக்கா அஞ்சுகிறது . பெசன்ட் நகர் பிச்சைக்காரர் கூட கைல முப்பது ரூபா வச்சிருக்கார் / இனி அணு உலை வேற வந்துருச்சுனா … முன்னேற்றம் எண்ணிலடங்காமல் , 2019 லேயே அப்துல் கலாமுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்தியா அமோகமான வெற்றி பெற்று வல்லரசாகிவிடும் . அமெரிக்கா பாவம் , அவர்களின் ஜேம்ஸ் பாண்ட் ‘ உதய குமார் கொடுத்த ப்ராஜெக்ட்’ஐ ஒழுங்கா பண்ணாததால் பின்தள்ளபட்டுவிட்டது . திடீரென உதயகுமார் அவர்களின் அமெரிக்கா ஏ டி எம் கார்டு ஒரு நாள் வேலை செய்யவில்ல , அப்போதான் ஜெர்மனி நாடு அவர்களின் ரகசிய உளவாளியை அனுப்பி உதயகுமாருக்கு காசு கொடுத்தது , இந்தியாவின் அபார வளர்ச்சி மீது ஜெர்மனிக்கும் ஒரு கண்ணு தான் . அவங்க எல்லா அணு உலையையும் மூடுவதற்கு காரணம் அங்கு மின்சாரம் ரொம்ப அதிகமாகி பல்பு இல்லாமலே வெளிச்சம் பரவ ஆரம்பிச்சிருச்சு . ஆனா நம்மள இருளில் தவிக்கவிடுவது தான் அவர்களின் சதி திட்டம் , இந்தியாவ தவற மத்த எல்லா நாடுகளும் கொடூர வஞ்சகர்கள் , ஆம் . ஆனா நல்ல வேளை , நம்ம இந்தியன் சூப்பர் போலீஸ் அந்த உளவாளியை பிடிச்சிருச்சு . ஆனா பாருங்க நம்ம நல்ல மனசு , எவ்வளவு பெரிய உளவாளியா இருந்தாலும் பொழச்சு போ என்று அடுத்த விமானத்துல அனுப்பி வச்சிட்டோம் . எதுக்கு அவன விசாரண பண்ணி நம்ம டைம்’ அ வேஸ்ட் பண்ணிட்டு .
  புகுஷிமா’ல வந்த சுனாமி நம்ம ஊருக்கு வர வாய்ப்பு இல்ல . பூம்புகார் நகரம் அழிந்த போதே , கடல் மாதாவிடம் .. எதுக்கு இப்படி பண்ணின என்று
  நாம் கண்டபடி கேட்டு மிரட்டிடோம் , இனி வராது , அதுவும் இல்லாமல் இப்ப நம்ம தலைவர்கள் என்ன கடல் அலை வந்தாலும் கட்டு மரமா மாறி அணு உலையை சுமப்பார்கள் .
  என்ன தான் நம்ம கூடங்குளம் வந்தாலும் , இந்த அமெரிக்கா ஒரு சவால் தான் , அவன் கடந்த 20 வருடங்களில் புதுசா எந்த உலையும் கட்டலீனாலும் , பழைய உலைகளின் அணு கழிவை பத்திரமா அண்டாவுல போட்டு வச்சிருக்கான் . இந்த மாதிரி பல அண்டா உள்ளது . அத ஏன் அப்படி வச்சிருக்கான்னு தெரியல . அணு உலையிலருந்து வரும் எல்லாமே ஒரு வர ப்ரஸாதம் . ஒரு வேளை அவர்கள் அதை விவசாயத்துக்கு உரமாக பயன்படுத்தலாம் . அந்த தொழில் நுட்பத்தை நமது நாராயணசுவாமி கூடிய விரைவில் நமக்கு தொலைக்காட்சி பெட்டியில் தெரிவிப்பார் .. அதை அம்மா , தேர்தல் தொந்தரவு எதுவும் இல்லாத பட்சத்தில் உடனே ஆதரிப்பார் . தேர்தல் வந்தால் … கொஞ்சம் நாடகம் நடிப்புடன் இந்த தொழில்நுட்பத்தை சிறிது தள்ளி போட்டு பின் தேர்தல் முடிந்ததும் மக்கள் மண்டையில் நங்கென்று அடித்தாற்போல் உடனே காவலர் கைக்கூலி உதவியுடன் அணைத்து வயல் வரப்பிலும் 144 தடை சட்டம் போட்டு விவசாயமும் செய்வார் , இத்தகைய வளர்ச்சியை ஆதரித்து நாம் நம் தேச கடமையை செய்வோமாக .
  – இப்படிக்கு – அப்துல் கலாம் சொன்னால் விஷத்தையும் குடிப்போர் சங்கம் .

 3. மிக மிக வருத்தமாக இருக்கிறது தோழர்.. நீவிர் கம்யூனிஸ்ட்டாக இருப்பதற்கு முன்னால் மனிதராக இருக்க ஏன் தவறினீர்? மனிதர்களின் மரணத்தை வெறும் எண்ணிகையாகப் பார்க்கும் தினமலருக்கும் உங்களுக்கும் சற்றும் வித்தியாசம் இல்லை.. கனத்த மனத்தோடு இப்போதுதான் திரு. சின்னையா காசியை unfriend செய்தேன்.. மானுடத்துக்கு எதிரான உங்களை மாதிரி ஆட்கள் எனக்கு தேவையே இல்லை.. நீங்கள் பாரதியையும் வள்ளுவரையும் மதித்து ஒரு பயனும் இல்லை தோழர்.. அடிப்படையில் கட்சி என்ன சொல்கிறதோ அதை கேட்டு கொடிபிடிக்கிற சாதாரண விசிலடிச்சான் குஞ்சுதான் நீங்களும் என நிரூபிக்கிறீர்கள்.. இவ்வளவு மட்டமான ஜென்மங்களை எனது ஹீரோக்கள் என எப்படி நான் இத்தனை நாள் மதித்திருந்தேன் என புரியவில்லை.. good bye தோழர்..

 4. பிங்குபாக்: 7 Questions for America’s Udhayakumar supporters and Infrastructure critics | Snap Judgment

 5. I support KKNP ! Much needed for development of southern districts of Tamil Nadu

 6. I do not understand the logic that America is blocking our Atomic power Plants, especially with the on going Koodankulam. Please understand that i America, there are various groups which acts independently for various issues. Be it in Nuclear, Human rights issues, religious freedom etc, these groups take a stand, which in no way can be construed as the official position of America. There is a poor imagination or tendency among our people that, they see a sinister design behind every action of America, which is truly not. America has signed Civil Nuclear deal and surely it needs public as well as Government support. They are not fools to block Russia’s deal with India, as they know, it will boomerang, when they commence their power plant work. With regard to the comment of Mr.Gyani, well, little said is better, as he always take anti-US stand, but send his son to America for higher studies, or, he himself will go for medical treatment. He can be ignored. But please try to write articles which should have a in depth study and must enlighten your readers, of course, with your trade mark sarcasm. Thank you.

 7. பிங்குபாக்: அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா? | Snap Judgment

 8. பிங்குபாக்: நீயா, நானா – முகங்கள்: 2012: நண்பர்களுக்கு விருது வழங்குவது எப்படி? | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.