இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:
- மொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்
- சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.
- ஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.
- ருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.
- மஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.
- நூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்பட்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.
- ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.
- சிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்லீம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.
- அமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.
- சொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது! டும்!! டும்!!! : தீவிரவாதம் / பயங்கரவாதம்.
unique. nice.
Nice observations.
நச்.
மொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்////
செம செம…:))
u r absolutely right:)