மேலும்:
1. நிமித்தகாரன்
2. Short Film of the Day
‘ஒரு மாலைப் பொழுது’
தமிழரசன்
நல்ல வேளை… இவர் இன்னும் தமிழ் சினிமா இயக்குநர் ஆகவில்லை. அதுவே கோடம்பாக்கத்திற்கு பூஸ்ட். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது போல் கருத்து கந்தசாமி படம்.
வொயிட் பேர்ட்
முரளி
இருபத்தியாறு நடிகர்கள்; மூன்று கேமிராக்கள்; ஒரு கிரேன் – என்றெல்லாம் பணத்தை வீணடிக்காத என்.ஆர்.ஐ தேஸி மக்களின் அத்யந்தமே தனி ரகம். இந்தப் படம் அமெரிக்காவில் வாழும் பேச்சிலரின் கதை. Very promising and raw talent.
முட்டாசுபட்டி
ராம் – ICANS
’நாளைய இயக்குநர்’ ரகம். எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத ரகம். சிரித்து வயிறு வலிக்கக் கூடிய ரகம். ஸ்க்ரிப்ட்டும் காஸ்டிங்கும் சரியா இருந்தா, எவ்வளவு சிறுத்தாலும், காரம் குறையாதுனு உணர்த்தற ரகம்.
ப்ராஜெக்ட் ஐஷு
அருண்குமார்
காதலை விட்டால் வேற எதுவுமே இன்றைய விஸ்காம் மாணவர்களுக்கு சிக்கவில்லை என்பது கொடூரம். அதனினும் கொடூரம் ஊடல். எஸ்.ஆர்.எம்., லயோலா போன்ற லட்சக்கணக்கான விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்களின் யூ ட்யூப் காதலில் இது பர்வாயில் வகை.
பண்னையாரும் பத்மினியும்
அருண் குமார்
கடைசியாக கார் நடித்து நான் பார்த்த படம் – ரஜினியின் ‘படிக்காதவன்’. தண்ணியடித்துவிட்டு தொட்டால் லஷ்மி ஓடமாட்டாள். இங்கே பத்மினி. அமர்க்களம்.
இலக்கணப் பிழை
சரத் ஜோதி
இவர் இன்னும் வெள்ளித்திரைக்கு வரவில்லையா? சஸ்பென்ஸ் – உண்டு; பதைபதைப்பு – உண்டு; டிராமா – உண்டு; ஆக்ஷன் – உண்டு; காதல் – உண்டு. எல்லாத்தையும் எப்படி இதற்குள் அடக்கினார்! அட்டகாசம்.
அன்பில் அவன்
ரஷிதா & சுரேகா
டம்ளர் விளிம்பில் எறும்பைப் பார்த்திருப்பீர்கள். குவளையின் ஓரங்களில் இருக்கும் பழரசம் அப்போதுதான் எறும்புக்குக் கிடைக்கும். பேலன்ஸ் தவறினால் ஜூஸுக்குள் சமாதி. இந்தப் பக்கம் விழுந்தால், உணவுக்கு முற்றுப்புள்ளி. சிறுவர்களை நடிக்க வைப்பது அப்படிப்பட்ட காரியம். கொஞ்சம் ஜாஸ்தி போனால் பல்லிளிக்கும்; அடக்கி வாசித்தால், போரடிக்கும். இரண்டுக்கும் நடுவே இங்கே…
’நியூ’ ரூம்மேட் 2303
WTH முரளி
அமெரிக்காவில் அறைத்தோழர் கிடைப்பதற்கு அல்லாடுகிற கதை. நல்ல காமெடியாக வந்திருக்க வேண்டியது. இன்னும் நிறைய சிரமங்களை இயல்பாகக் கொண்டு வந்திருக்கலாம். இவங்க இன்னும் நியூ ஜெர்சியிலா இருக்கிறார்கள்?
துரு
கார்த்திக் சுப்பராஜ்
கலைஞர் டிவி ஆரம்பித்ததிலேயே நடந்த மிக உருப்படியான காரியம். ஓவியர் மதன் + இயக்குநர் பிரதாப் போத்தன் & கீர்த்தி இணைந்து ஒருங்கிணைக்கும் ‘நாளைய இயக்குனர்’. சொல்லப்போனால் விழியங்களின் பொற்காலமாக, குறும்படங்கள், சற்றே பெரிய டிவி படங்கள், சினிமாஸ்கோப்பிற்கு சரிப்படாத களம் கொண்ட லோ பட்ஜெட் படங்கள் என்று சன்/விஜய்/ராஜ்/ஜெயா/மக்கள் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட சமயத்தில் ஒரேயொரு நிகழ்ச்சி மட்டுமே வருவதுதான் ஆச்சரியம் கலந்த குறைப்பாடு.
போஸ்ட் மேன்
மனோகர்
நல்ல கேமிராமேன்; குறும்படத்திற்கு மீறிய பட்ஜெட்; உருக வைக்கும் காட்சிகள்; நம்பக்கூடிய கதை… எல்லாம் இருந்தும் ஒரு படம் ஓடாமல் டப்பாவிற்குள் முடங்குவதற்கு என்ன காரணம்? இந்தப் படமும் ஃபெயில் ஆவதற்கு அதுதான் காரணம்.
தி சவுண்ட் மெஷின்
Prize-Winner: Propeller TV Best Short Film Competition
Shortlisted: Friends of the Earth Short Film Competition
Screened at Hull International Film Festival 2009
மொழியே தேவையில்லாத குறும்படம்
ஸ்னாப்
வெறும் ஐநூறு டாலருக்குள் எடுக்கப்பட்டது. டயலாக் எதுவுமே தேவையில்லாத இன்னொரு காட்சியாக்கம்.
அசல் இந்த நட்சத்திர அனைத்து முக்கியம் போது, அது அவரது எதிர்கால அசல் வண்ணங்களுடைய வகுத்தன என்பதை ஆச்சரியம் இல்லை. எப்படி அசல் பற்றி ரஜினி பேச்சு அனைத்து வேறு மேல் உள்ளன மற்றும் ஒரு வெற்றி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். இந்த குறும்படங்கள் பற்றிய தனது கருத்துகளை பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR
பிங்குபாக்: அப்பாடக்கர்: Tamil Short Film by Ila | Snap Judgment