பார்த்தால் கிறுக்கல் மாதிரிதான் தெரிகிறது.
சுருள் சுருளாக…
கோழிக் கிண்டல்களாக…
அவிழ்க்காத முடிச்சாக…
புதிர் ஒளிந்திருக்கும் சாதனமாக…
புரியாத கவிதையாக…
எகிப்திய, மெசொபெடேமிய நாகரிக குறியீடுகளாக…
டாம்ப்ளியின் ஓவியங்களைப் பார்த்தால் எந்தக் கலைஞருக்கும் நம்பிக்கை பிறக்கும். `நானும் ஓவியனாகலாம்; மாடர்ன் ஆர்ட் போடலாம்’ என்று சிறுவருக்கும் சிரிப்பு கலந்த ஏளனம் உண்டாகலாம்.
பாஸ்டன் மீன்-காட்சியகத்தில் நீர் யானைகள் வரைந்த ஓவியத்தைக் கண்டதுண்டு. அசப்பில் அப்படித்தான் இருக்கிறது.
ஆனால், எழுத்தாளர் சுஜாதா மாதிரி ஆகிருதி கொண்டவர். எவரையும் எளிதில் அண்ட விடாதவர். எழுத்தில் பாயாமல், வரைகலை பாயட்டும் என்று விட்டு விட்டவர். எம் எஃப் ஹுசேன் கூட இவரை மாதிரி சரஸ்வதியை அம்மணமாக்கி இருக்கலாம். நபிகள் நாயகத்தைக் கூட இப்படி சித்தரிக்கலாம்.
Cy Twombly: Comprehensive collection of more than 200 images of artist’s works with biography, articles and exhibition information – இல் இருந்து சில பார்வைக்கு: