தண்ணியடிக்காத புலம்பல்: கொடுமை சீரீஸ் – 1


மதுரை நியூ காலேஜ் ஹவுசில் கூட மிஞ்சியதை வைத்துதான் கொத்து பரோட்டா போடுவார்கள் என்பதை ஒப்ப சில பதிவுகளைப் பார்க்கும்போது நொந்து நூடுல்ஸ் ஆவதை பதிவு செய்யும் திட்டத்தில் முதல் என்ட்ரி: எழுத்தாளர் தாமரைமணாளன்

இந்தப் பரிந்துரைக்கு உங்கள் பதிவு உரித்தாக ஆறு காரணங்கள்:

  1. ஜெயமோகன், சாரு போன்றோருடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் உங்கள் பக்கமுகப்பில் நேம்ட்ராப் செய்யவேண்டும்
  2. விக்கிப்பீடியா தொகுப்பிற்குக் கூட லாயக்கில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டும்.
  3. முன்னுமொரு காலத்திலே என்று துவங்க வேண்டும்.
  4. ஜெனரலைஸேஷன் நிறைந்திருக்க வேண்டும்.
  5. தற்கால முக்கிய எழுத்தாளர்களின் மோசமான படைப்புகளை அடையாளம் காட்டாமல், எப்பொழுதோ இறந்து, எழுந்து அடிக்க வராத சந்ததியைச் சார்ந்தவரை சாடும் படைப்பாக இருக்க வேண்டும்.
  6. அழகாபுரி அழகப்பன், ஜெகசிற்பியன் என்று டங்குவார் கழன்றவர்களையும் கவனிக்கும் ஆழ்வாசகரின் அடர்த்தியான ஆக்கமாக வேண்டும்.

இந்த மாதிரி பதிவு படித்து அழுது தொலைப்பதற்கு பதிலாக,

  • கேபிள் சங்கரின் சினிமா விமர்சனத்தையோ, எட்ஜ் கருத்துப் பத்தியையோ படிக்கவும் …
  • ஆர்வி ஆலிவ் கிட்டரிட்ஜ் போன்ற ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கவும் …

மைல்கல் மைனர்களைப் பிரார்த்திக்கின்றேன்.

10 responses to “தண்ணியடிக்காத புலம்பல்: கொடுமை சீரீஸ் – 1

  1. இப்படி எத்தனை சீரியல் பல்பு போடப்போவப்போவதாக உத்தேசம்? சொன்னால் கொஞ்சம் அப்பாலிக்கா நிப்பேன்…

  2. //விக்கிப்பீடியா தொகுப்பிற்குக் கூட லாயக்கில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டும்.//

    Haha 🙂

  3. Full form போல் இருக்கிறது 🙂

  4. //6.அழகாபுரி அழகப்பன், ஜெகசிற்பியன் என்று டங்குவார் கழன்றவர்களையும் கவனிக்கும் ஆழ்வாசகரின் அடர்த்தியான ஆக்கமாக வேண்டும்.
    //

    ஆஹா 🙂 🙂

  5. அழகாபுரி அழகப்பன் பத்தி ரொம்ப தெரிஞ்ச மாறி உளறமா சும்மா அறிவு ஜீவி மாறி காமிச்சிகாதே. இயல்பா கதையோட ஒன்ற வைக்கிற அவரோட எழுத்தை விமர்சிக்காதே. எத்தனை கதை படிச்சிருக்கே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.