சார்லி ஷீன்: வசைபாடி? தசை நாடி? ஆசை கோடி!


பெயரிலி ட்வீட்:

Charlie Sheen is the best Sufi poet alive today. Why do y’all make fun of him?

சார்லி ஷீன் எப்படி செய்தி ஆனார்?

1. போதைப்பொருள் அதிகமாகியதால் ஜனவரி 27 மருத்துவமனைக்கு சென்றார்.

2. தொலைக்காட்சியில் வாரந்தோறும் வரும் ‘டூ அன்ட் எ ஹாஃப் மென்‘ நகைச்சுவைத் தொடரின் படப்பிடிப்பை சி.பி.எஸ் டிவி தாற்காலிகமாகத் தள்ளிவைக்கிறது.

3. ஒரு வாரத்திற்கு இரண்டு மில்லியன் வீதம் சம்பளம் கிடைத்தாலும், CBS TV தன்னுடைய பெயரினால் மட்டுமே திங்கள்கிழமைகளில் பிழைப்பு நடத்துகிறது என்று பேட்டி கொடுக்கிறார் ஷீன். நான்கு நாளில் நடித்துக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சிக்கான ஊதியத்தை மூன்று மில்லியனாக உயர்த்தாவிட்டால், வெளியேறுவேன் எனவும் மிரட்டுகிறார்.

4. ட்விட்டரில் கணக்குத் துவங்கிய இரு நாளுக்குள் ஒன்றரை மில்லியன் பேரை பின் தொடர வைக்கிறார். கின்னஸ் சாதனை.

5. ஏற்கனவே மூன்று முறை விவாகரத்தாகி இருந்தாலும், விலைமாதருடன் தொடர்பு கொண்டிருந்ததும் பல்பெண்டிர் பாலியல் உறவு பரபரப்பு செய்தி ஆகியதும் சமீபத்திய துணைவியாரின் பிரிவுக்கான காரணமாக சொல்லலாம்.

6. தொலைக்காட்சி கேமிராக்கள் சுழல, பத்திரிகையாளர் படம்பிடிக்க, சார்லியின் இரட்டை மகன்கள் அவரின் வீட்டில் இருந்து கொண்டு செல்லப்படுகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சில் இருந்து

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

மனிதனின் அன்பு கருணை பாசம் தியாகம் அனைத்தையும் திரை விலக்கி நோக்கினால் மனித அகத்தில் நிறைந்திருப்பது அடிப்படை விலங்கியல்புகளே என்ற நம்பிக்கை. மனிதன் சுயநலத்தால், காமத்தால், வன்முறையால், அகங்காரத்தால் ஆனவன் என்ற நம்பிக்கை.
.
.
.
மனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை ‘காம குரோத மோகம்’ என்றது.
.
.
.
இன்பத்திற்காக. ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை.
.
.
.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் கலையின் இலக்கியத்தின் சாரமாகக் கண்டது இதுதான். கலை என்பது ஆனந்தத்தின் வெளிப்பாடு. ஆனந்தத்தை நிகழ்த்துவது.

Two and a Half Men” தொடரும் இதைப் பின்னணியாக வைத்து இயங்குகிறது.

இரு சகோதரர்கள். ஒருவன் வாழ்க்கை மணமுறிவில் முடிந்து, திருமணத்தின் பயனாக இருக்கும் பதின்ம வயது Half Men கொண்டது.

இன்னொரு சகோதரன் கடற்கரையைப் பார்த்த வீட்டில், தினம் ஒரு அழகியோடு சல்லாபமும், காலை எழுந்தவுடன் விஸ்கியும் அருந்தி உல்லாசியாக கழிப்பவன்.

அதாவது ஒருவன் சாதாரண மானிடன். இன்னொருவன் அந்த சாதாரணனின் பார்வையில் பொறாமை கொள்ள வைக்கும் சொகுசுக்காரன்.

நடுத்தரவர்க்க தொலைக்காட்சிப் பார்வையாளனின் வாழ்க்கையில் சார்லி ஷீன் என்பவன், ஹாலிவுட் ஜாலிநாயகன். ஆனந்த தாண்டவன்.

சார்லி ஷீனுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் உள்ள ஒற்றுமை?

‘நான் கடவுள்’ கொள்கையில் ஸ்திர நம்பிக்கை உடையவர்களை சினிமாத் துறையில் நிறைய காணலாம். ‘இளைய தளபதி’ விஜய் அதிரடி வசனம் சொல்வது; சிறார்கள் சூழ உறங்கும் கோலாகலத்தை வர்ணிக்கும் மைக்கேல் ஜாக்சன்; தந்தையுடன் அரை நிர்வாண கவர் ஸ்டோரி போடும் ஹானா மொன்டானா…

எழுத்துலகில் பிறரைப் படிப்பதால் இவ்வகையினர் அரிதே என்றாலும், சாரு நிவேதிதா போல் தன்னைச் சுற்றியே உலகம் சுற்றுகிறது நம்பிக்கையாளர் கிடைக்கின்றனர். அரசியலில் ஆட்சியில் இருக்கும் வரை ஒளிவட்டமும் சாமரம் வீசும் மேடையும் கிடைக்கிறது.

வசைகளை நாடிச் செல்கிறார்களா? கவனத்தில் இருப்பதை மட்டுமே விரும்புகிறார்களா? மிட் லைஃப் குழப்பமா? வாழ்க்கையின் அர்த்தம் தேடும் போராட்டமா? மிஷ்கின் படத்தில் குத்துப் பாடலில் பாண்டியராஜன் ஆகாத சோகமா?

தன்னைக் கவர்ந்த பிரயோகமாக சார்லி சீன் சொன்னது;

Marlon Brando’s character in Apocalypse Now, “You have the right to kill me, but you do not have the right to judge me.”

தொடர்புள்ள சுட்டி:
Charlie Sheen Quotes As New Yorker Cartoons: Pics, Videos, Links, News

3 responses to “சார்லி ஷீன்: வசைபாடி? தசை நாடி? ஆசை கோடி!

  1. //“You have the right to kill me, but you do not have the right to judge me.”//

    இதுவரையில யாரையும் தீர்ப்பு சொல்லாம தூக்குல போட்டதில்ல என்கிற நம்பிக்கையில் இப்படி சொல்றாரு போல…

    ஜட்ஜ் பண்ணாம கொலை செய்ய நாம என்ன காட்டு மிருகங்களா இல்லை வேற ஏதாவதா!!!

    புத்திசாலிகள்!!! :)))

  2. I feel like his managers are playing the game . They forced him to be with drug always and these coterie wont allow him to come out .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.