பதிவுகள்:
அ) துவக்கம் இங்கே: புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள் – கோபால் ராஜாராம்
1. புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை – எம் வேதசகாய குமார்
2. புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும் :: கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்)
3. ‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை :: ஆ. இரா. வேங்கடாசலபதி
4. ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 | ஜெயமோகன்.in
ஜெயகாந்தன் மீதான இன்றைய நவீனத்துவ நோக்கை சுந்தர ராமசாமியை முன் ஏராகக் கண்டு வேதசகாய குமார் உருவாக்கினார் என்றால் அது மிகை அல்ல. பலகாலமாக வேதசகாய குமார் எழுதிய கட்டுரைகளுக்கு ஆதாரமாக அமைந்த அவரது [முனைவர்பட்ட ]ஆய்வுநூல் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ [தமிழினி பதிப்பகம் சென்னை] இக்கருத்துக்களை விரிவாக தொகுத்துக் காட்டுகிறது. அது முழுக்க சுந்தர ராமசாமியின் வரிகள் மேற்கோள்களாக நிரபியிருக்கின்றன.
தமிழின் தேர்ந்த விமரிசகர்களில் ஒருவரான எம்.வேதசகாய குமாரின் ஆய்வு நூல் இவ்வகையில் மிக பிழையான பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவித வரலாற்று போதமும் இல்லாமல் அன்று பிரபலமாக இருந்த வடிவ ஆய்வையே அடிப்படையாகக் கொண்டு துரதிருஷ்டவசமான இறுதி முடிவுகளுக்கு வந்து சேர்கிறது.
5. முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும் :: K.ரவி ஸ்ரீநிவாஸ்
வேதசகாய குமாரின் முனைவர் பட்ட ஒட்டு மொத்த ஆய்வில் அவரது சுயமான பங்களிப்பு, அவரது சிந்தனைகளின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.அது எத்தனை சதவீதம் என்ற கேள்விக்கு யார் பதில் தரப்போவது யார் – ஜெயமோகனா இல்லை குமாரா ?
6. புதுமைப்பித்தன் இன்று… | jeyamohan.in
7. வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம் | செயமோகன்.in :: Encyclopedia Tamil Criticism
8. விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள். | [27- 9- 2009 அன்று நாகர்கோயில்வேதசகாயகுமார் 60 கூட்டத்தில் எழுத்தாளர் ஜெய மோகன் ஆற்றிய உரை
9. வேதசகாயகுமார் விழா | ஜெயமோஹன்.in
10. சொல்புதிது பற்றி… | எம்.வேதசகாயகுமார் எழுதிய [எம்.வேதா] நாய்களைப்பற்றிய ஒரு உருவகக் கதை சுந்தர ராமசாமியைப் பற்றியது என்று சொல்லப்பட்டு பெரும் பிரச்சாரம் கிளப்பப்பட்டது. [நாச்சார் மடத்து விவகாரங்கள்]
11. ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும் :: K. ரவி ஸ்ரீநிவாஸ்
12. எம் வேதசகாயகுமார், ஆர்.எம் .சதக்கத்துல்லா / மற்றும் சொல்புதிது ஆசிரியர் குழு
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு ,
எஸ்.வேதா என்பது எஸ்.வேதசகாயகுமார் என்பதன் சுருக்கம். இப்பெயரில் நான் கதைகள் முன்பு எழுதியதுண்டு. இனியும் எழுதலாம் தனிப்பட்ட முறையில் இன்றைய அரசியல் சூழலைப்பற்றிய என் மனச்சோர்வையும் உயரிய மதிப்பீடுகள் என நான் பலகாலமாக நம்பியவற்றின் வீழ்ச்சியையும் சொல்கின்ற கதை ‘நாச்சார் மடவிவகாரங்கள் ‘ . அந்த வீழ்ச்சியை குறிக்க என் முன் தூலமாக உள்ள சொந்த அனுபவம் சார்ந்த உதாரணம் சுந்தர ராமசாமி .
சுந்தர ராமசாமி மீது நான் கொண்ட குருசீட உறவுக்கு நீண்ட முப்பதுகால வரலாறு உண்டு. அவர் கல்வித்துறை மீது வைத்த கடுமையான விமரிசனங்களை உண்மையென நம்பி கல்வித்துறையுடன் கடுமையாக மோதி பலர்வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவன் நான். அதற்காக நான் அடைந்த இழப்புகள் சாதாரணமல்ல . வசந்திதேவியை மாபெரும் கல்வித்துறை சக்தி என்று சித்தரித்து அவர் எழுதிய நூல எனக்கு அதிர்ச்சி அளித்தது . வசந்தி தேவியையும் , சுந்தர ராமசாமி அப்படி எழுதியதற்கான காரணங்களையும் அறிந்த எனக்கு ஏற்பட்டது ஆழமான மனச்சோர்வு .
வசந்தி தேவியே பெரிய கல்வியாளர் என்றால்
- நெ .து .சுந்தரவடிவேலு
- வ .செ குழந்தை சாமி
- வ .சுப மாணிக்கம்
போன்றவர்கள் என்ன குறைந்து விட்டார்கள் ? யாருக்காக இந்த ஆட்டத்தை ஆடினோம் ?
இது ஓர் உதாரணம்தான். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் வெற்றுப்பேச்சுகளால் ஏமாற்றப்பட்டவனாக உணர்கிறேன். அதேபோல நான் நம்பிய அரசியலிலும் என் ஏமாற்றம் பெரிது.
‘நாச்சார் மட விவகாரங்கள் ‘ கதை தொடங்கும் புள்ளி இதுதான். அது ஓர் அங்கதம். அக்கதை கதைகளுக்குரிய வழக்கப்படி வளர்ந்து மேலும் பல இடங்களை தொட்டுசெல்கிறது. இக்கதையை காலச்சுவடு அவர்கள் மீதானவிமரிசனமாக காட்டும் முன்புவரை எவருக்குமே அப்படி படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . திண்ணையில் கூட விமரிசனம் வந்ததை படித்தேன்.
நவீனத்துவ மரபைச்சேர்ந்த கதைகளின் அழகியல் கடுமையும் தீவிரமும் கொண்டதுதான். உதாரணமாக சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதையேகூட ‘வானம் வந்திறங்கியதும் இளைப்பாற ஒரு கட்டில் செய்தேன் ‘ என்ற பசுவய்யா கவிதையின் மறுவடிவம்தான். வந்திறங்கிய வானம் ‘கழிப்பறை எங்கே ? ‘ என்று கேட்பதுதான் அக்கவிதை. என் கதையை வேண்டுமென்றே திரித்து சிக்கல்களை உருவாக்க சிலர் முயல்வது இலக்கியத்துக்கு ஆபத்தானது . அப்படிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய ‘ நடு நிசி நாய்கள் ‘ , ‘நாய்கள் ‘ , ‘ ஆந்தையை பார்த்து நாளாச்சு ‘ போன்ற கவிதைகள் எல்லாம் யாரைப்பற்றியவை என்று நாம் கேட்க வேண்டி வரும். அவை கசடதபற என்ற இலக்கியக் குழுவினரையும் க. நா. சுப்ரமணியத்தையும் குறித்தவை என்று இலக்கிய உலகில் அன்று பேசப்பட்டதுண்டு. ‘ஒரிஜினல் ஆந்தை ‘ என க நா சு பலகாலம் உள்வட்டத்தால் வசைபாடப்பட்டதும் , அவர் மிக மனம் வருந்தி பதினேழு வருடம் சுந்தரராமசாமியின் தொடர்பை துண்டித்திருந்ததும் நடந்தது. இது எனக்கு நன்கு தெரிந்ததே. அப்படி பொருள் கொண்டால் எந்த இலக்கியமும் ஆபத்தானதாக மாறிவிடும்.
படைப்பாளிகள் மீதான வன்முறை பற்றி காலச்சுவடு பேசுகிறது. காலச்சுவடுதான் அவதூறுகளுக்கென்றே ஒரு பகுதியை ஆரம்பித்த முதல் சிற்றிதழ் . அவதூறுகளை தமிழிலேயே அதிகமாக வெளியிட்ட இதழ். நீதிமன்றம் செல்ல வசதியாகவா அதில் அவதூறுகளை வெளியிட்டனர் ? உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி என் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா ? கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் ? விஷத்தை நாசூக்காக உமிழ்ந்தால் அது வன்முறை இல்லையா ?
இலக்கியப் படைப்பு நன்றாக வரலாம், சரியாக வராமலும் போகலாம். அது எழுதுபவனின் திறனைப்பொறுத்த விஷயம். அதை இம்மாதிரி கொச்சைப்படுத்துவது நோய்க்கூறான மனநிலை .
தொடர்ச்சி
நான் எழுதிய ‘ நாச்சார்மடம் ‘ உண்மையில் மிக எளிமையான ஒரு கதை. அதில்பெரிதாக வசை ஏதும் இல்லை. அதன் தொடக்கம் என்னவாக இருந்தாலும் கடைசியில் நான் உத்தேசித்தது ராமர்கோவில் விஷயமும் வாஜ்பாயும்தான்.
சுந்தரராமசாமி எழுதிய வசைக்கவிதைகள் கதைகள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு பேசப்படுகின்றன. புதிய காற்று பத்திரிகையில் சுந்தர ராமசாமி எழுதிய தனிநபர் வசைகளின் ஒரு பட்டியல்தரப்பட்டுள்ளது .
காலச்சுவடு அளித்த கோரிக்கைமனுவுக்கு பதிலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்களை பட்டியலிட்டு எழுதி காலச்சுவடுக்கு அனுப்பி அது பிரசுரிக்க மறுத்த கடிதத்தின் நகலும் எங்கும் கிடைக்கிறது.
புளியமரத்தின் கதையில் வரும் இசக்கி உண்மையில் நாகர்கோவிலில் உள்ள பி எஸ் மணி என்ற சிறு பத்திரிகையாளர்தான் என்ற செய்தியும், இது அக்காலத்தில்பெரிய பிரச்சினையாகி அடிதடி விளிம்புவரை போய் சக்கைபுளிக்கறி பயத்தால் கைவிடப்பட்டது என்பதும் எனக்கே இப்போதுதான் தெரிந்தது.
அதைவிட முக்கியமான விஷயம் எல்லாருமே ‘நாச்சார்மடம் ‘ என்று சாதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். உண்மையில் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் இதை கண்டிப்பாக உத்தேசிக்கவில்லை. காலச்சுவடு பிரசுரித்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு எழுத்தாளரே ஒரு கூட்டத்தில் ‘நாச்சார் மட விமரிசனமுறை ‘ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். நாகர்கோவிலில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில்பல பேச்சாளர்கள் சாதாரணமாக ‘நாச்சார்மடங்களின் பார்வை ‘ என்றெல்லாம் பேசுவதைக் கேட்டேன்.
13. படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை
சொல்புதிது (ஏப்ரல்-ஜூன், 2003) இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற ‘சிறுகதை’ மிக மோசமான தனிமனித அவதூறாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்.
14. இயல் விருது சில விவாதங்கள்
ரோஜா முத்தையாச் செட்டியார் எம்.வேதசகாயகுமாருக்கு நெருக்கமானவர். அவருக்கு பல நூல்களை கொடுத்தவர். தன் முனைவர் ஆய்வுநாட்களில் வேதசகாயகுமார் பெரும்பாலும் செட்டியார் வீட்டில்தங்கி ஆய்வுசெய்திருக்கிறார். கையில் காசு இல்லாத குமாருக்கு செட்டியார் சாப்பாடுபோட்டு உதவியிருக்கிறார். தன்னைத்தேடிவந்தவர்களை எல்லாம் உபசரிப்பவர் அவர்.
ரோஜா முத்தையாச் செட்டியார் வாழ்நாளெல்லாம் சேர்த்த நூல்கள் அவர் மரணத்துக்குப் பின்னர் சிகாகோ பல்கலை உதவியுடன் சென்னையில் ஒரு நூலகமாக அமைக்கப்பட்டது. ஒரு கதைக்காக எனக்கு சில பழைய கிறித்தவ வெளியீடுகள் தேவைப்பட்டன. அவற்றை வேதசகாயகுமார் சேர்த்து செட்டியாருக்குக் கொடுத்ததாகச் சொன்னார். ஆகவே நான் ரோஜா முத்தையா செட்டியார் நூலகத்துக்குச் சென்றேன்.’பொதுமக்களுக்கு’ அனுமதி இல்லை என்றார்கள். அங்கே இருந்த நூலகர் சங்கரலிங்கம் என்பவரைச் சந்தித்தேன். அவர் என் முகம் பார்த்தே பேசவில்லை. ஒரு ·பைலை புரட்டியபடி ஏதாவது கல்வி நிறுவன அடையாள அட்டை தேவை என்றார் அவர். நான் ஓர் எழுத்தாளன் என்றேன் – அப்போது விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ”ஆமா, அப்டி சொல்லிட்டு தினம் ஒருத்தன் வாறான்…”என்று சொல்லி வெளியேபோகும்படி கைகாட்டினார். இந்த ஆசாமி ஒரு புகழ்பெற்ற நூலகர் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன்.
15. பிரமைகளும், பிரகடனங்களும்-2 :: K.ரவி ஸ்ரீநிவாஸ்
16. அரவிந்தன்
அவதூறு என்ற வார்த்தையைச் சிறுமைப்படுத்தும் அநாகரிகத்தின் உச்சமான இந்தக் கதை சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரைப் பெயரிட்டுத் திட்டவில்லை. மற்றபடி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை முற்றாகத் துறந்த அப்பழுக்கற்ற கேவலமான மொழியில் இவர்கள் மூவரையும் திட்டித் தீர்க்கிறது இந்தக் கதை. சுந்தர ராமசாமியின் வீடு, வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உள்பட அவர் சம்பந்தப்பட்ட பல அம்சங்களை, செய்திகளை, நபர்களைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த ‘எழுத்தாளரை ‘ தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சொல் புதிது.
இந்தக் கதை எழுதப்பட்டதன் பின்னணியை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. மு. தளையசிங்கம் குறித்து ‘சொல் புதிது ‘ நடத்திய கருத்தரங்கு பற்றி ராஜநாயஹம் என்பவர் எழுதிய கட்டுரையைக் ‘காலச்சுவடு ‘ சென்ற ஆண்டு பிரசுரித்தது. பலர் அந்தக் கட்டுரையைக் கண்டித்தார்கள். நாஞ்சில் நாடன் போன்ற சிலர் தங்களது கண்டனத்தை எழுத்துபூர்வமாக (காலச்சுவடிலேயே) பதிவு செய்தார்கள். அதையடுத்து அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதன் பின்னணியை விளக்கி காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் ஒரு குறிப்பை எழுதினார். ‘சொல் புதிது ‘ இதழில் ராஜ நாயஹத்தின் கட்டுரையை ஒட்டி ஒரு குறிப்பு வந்திருந்தது. அதில் மனுஷ்ய புத்திரனின் மதத்தைக் குறித்த ஒரு சொற்றொடர் இருந்தது. ‘காலச்சுவடி ‘ன் அடுத்த இதழில் இதற்கான எதிர்வினையை மனுஷ்ய புத்திரன் பதிவுசெய்தார்.
இதுவரையிலும் வெளிப்படையாக நடைபெற்றுவந்த இந்த மோதலை நிழல் யுத்தமாக மாற்ற முயன்றிருக்கிறது ‘சொல் புதிது ‘. எம். வேதா என்ற ‘புத்தம்புதிய ‘ எழுத்தாளர் ஒருவர் ‘காலச்சுவடு ‘, சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், கண்ணன் ஆகிய பெயர்ச்சொற்களை நேரடியாகக் குறிப்பிடாமல் ஆனால் படிப்பவர்களுக்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வந்துவிடாத அளவுக்கு வெளிப்படையான குறிப்புகளுடன் ஒரு கதை எழுதுகிறார்.
ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஈரமும் தார்மீக உணர்வும் சிறிதேனும் அவரிடம் எஞ்சியிருக்குமெனில் ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய் ‘ என்ற தொடரை எழுதியதற்காக அல்லது எழுத அனுமதித்ததற்காக அவர் பல நாள் தூக்கத்தை இழப்பார் என்பதில் சந்தேகமில்லை.
‘நாச்சார் மட விவகாரங்கள்’ சிறுகதையை நான்தான் எழுதினேன் என்கிறார் வே.ச.கு. தனது கூற்றுக்கு வலுசேர்க்க, இதற்கு முன்பும் கதைகள் எழுதியிருக்கிறேன் என்று அறிவிக்கிறார். இனிமேலும் எழுதுவேன் என்று மிரட்டுகிறார். அவர் கூறவது பொய் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கதையில் – அதன் சகல கீழ்மைகளையும் தாண்டி – வெளிப்பட்டிருக்கும் புனைவு அம்சத்தை அவரால் சாதித்திருக்க முடியும் என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரை வெளிப்பட்டதில்லை. இதற்கு முன்பும் கதைகளை எழுதியிருக்கிறேன் என்று அடக்கமாகச் கூறிக்கொள்ளும் வே.ச.கு. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.
- ஜெயமோகன் காலச்சுவடின் ஆரம்ப இதழ் ஒன்றில் எருமை மாட்டை வைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழக அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய சித்திரமாக அதைப் பார்க்க முடியும் என்று அவர் என்னிடம் அப்போது கூறினார்.
- மனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை,
- எஸ். ராமகிருஷ்ணனின் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’ என்ற சிறுகதை,
- சுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’,
- நீல. பத்மநாபனின் ‘தேரோடும் வீதியிலே’,
- சாரு நிவேதிதாவின் ‘ஜீரே டிகிரி’ என்று பல உதாரணங்களை இந்த வகையில் அடுக்கிப் பார்க்கலாம்.
- புற உலகை அழுத்தமாக நினைவுபடுத்தும் இத்தனை பிரதிகளுக்கு மத்தில் ‘தேரோடும் வீதியிலே’ நாவல் மட்டும் சில எழுத்தாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது ஏன் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.
1. சுராவின் கருத்துக்களை நம்பி மோசம்போனேன் என்று சிறு குழந்தை போல அழும் வே.ச.கு., கல்வித்துறையில் அவர் என்ன செய்தார், அதன் விளைவாக என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த முன்வருவாரா?
2. ‘ஒரிஜினல் ஆந்தை’ பற்றி இப்போது எழுதும் வே.ச.கு., சுராவைத் தனது குருவாக வரித்திருந்த 30 ஆண்டுகளில் இந்த ஆந்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது ஏன்? குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா? அல்லது பக்தி விசுவாசம் கையைக் கட்டிப்போட்டு விட்டதா?
3. பு.பி. செம்பதிப்பு தொடர்பாகத் திண்ணை ஆசிரியர் குழு எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணன் முன்வைத்திருந்தார். அதில் அவர் வே.ச.குவுக்கும் சொல்புதிதுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாத கையறு நிலைதான் வன்மமாக வெளிப்படுகிறது என்று நான் எடுத்துக்கொள்வதில் மதிப்பீடுகளின் பிதாமகர் வே.ச.குவுக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா?
சொல்புதிதின் முன்னாள் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமதி எஸ். அருண்மொழி நங்கை (ஜெயமோகனின் மனைவி) சொல்புதிதில் ‘என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ? ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்து சொல்புதிதுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் மரியாதையை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து ஒரு வாக்கியம்: ‘வீட்டுக்கு வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அலுப்பூட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘ (சொல்புதிது 11, பக். 7).
18. சூர்யா
அன்று விஷ்ணுபுரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஓர் வருகை. எம் வேதசகாயகுமாரும் எஸ் ராமகிருஷ்ணனும் நாவலை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.
வேதசகாயகுமார் அன்று காலச்சுவடு அருகில். இருவரும் சொல்லிவைத்தது போல விஷ்ணுபுரத்தை வசைபாடினார்கள். ஜெயமோகனுக்கு இலக்கிய நுண்ணுணர்வே இல்லை என்றார் வேதசகாயகுமார் . எஸ் ராமகிருஷ்ணன் அதை ஓர் ஆர். எஸ் எஸ் பிரச்சாரம், அது ஒரு ஸ்தலபுராணத்தின் உல்டா என்றெல்லாம் சொன்னார்.
அங்கே தேவதேவன் மட்டுமே விஷ்ணுபுரத்தின் காவியத்தன்மையை சுட்டிக்காட்டி பாராட்டிபேசினார்.
19. பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள் :: ஆ. இரா. வேங்கடாசலபதி
எம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தமிழினி, நூலின் பின்னிணைப் பில் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் அட்டவணைக்கும் நான் பின்னிணைப்பு 3இல் கொடுத்துள்ள தகவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை வாசகர்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நான் சேகரித்த மூல ஆவணங்கள் கலைகளுக்கான இந்திய மையத்தின் நல்கையோடு நுண்படச் சுருளிலும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்படு கின்றன. இப்பதிவுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், காலச்சுவடு அறக்கட்டளை அலுவலகத்திலும் ஆர்வ முள்ளவர்கள் பார்ப்பதற்கு 1 ஜுலை 2001 முதல் வைக்கப்படும். யாரு டைய தகவல்கள் ஆதாரபூர்வமானவை என்பதை வாசகர்களே நேரில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.
20. புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள் :: இரா. வேங்கடாசலபதி
இறுதியாக
வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’
(ஆர்வி – புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை :: RV)
உங்களோட இந்த ஆய்வே பெரிய டெர்ரரா இருக்கே!
பாவம் புபி.
r u an pozhuthu pogatha bommu 🙂
இன்னும் வேற சுட்டிகள் இருக்கா இல்லை அவ்வளவுதானா? 🙂
//sources எங்கெல்லாம் இருக்கிறது என்று அடுத்தவர்களுக்கு வழிகாட்டினார், எல்லாவற்றையும் விட முக்கியம் – ஒரு methodology-யை கொண்டு வந்தார்//
ஆய்வு (குறிப்பாக கல்லூரிகளில்) பணியாளர்களுக்கு இந்த டெக்னிக் எல்லாம் கூகிளில் தேடும் நுட்பம் போல் சகஜமாகத் தெரியும். இதே மாதிரி (ஆதவனுக்கு வெங்கடேஷ் என்பது போல்) பல்வேறு ஆதர்ச எழுத்தாளர்களுக்கு அவர்களின் சிஷ்யர்கள் தேடி அலைவதும் கலெக்ட் செய்வதும் இயல்பு.
விக்கிப்பீடியா மாதிரி இருந்திருக்க வேண்டிய ப்ராஜெக்ட். அகநானூறைத் தொகுத்தவர் யார் என்றால் சட்டென்று சொல்லவராது. அந்த மாதிரி நாளடைவில் இந்த பிணக்குகள், பாடல் பெறாமல் போகலாம். நாதமுனி மாதிரி அடையாளமும் பெற்றிருக்கலாம்.
ஆனால், நாதமுனி மட்டும்தான் (அல்லது போட்டி நாதமுனி மட்டும்தான்) நாலாயிரத்தையும் தன்னந்தனியாக தொகுத்தார் என்று நம்பவைக்கும் கட்டமைப்பைக் கண்டு ஏமாற வேண்டாம்.
நல்ல வேளை புதுமைபித்தன் இல்லை.
பாபா எப்போது நாதமுனி ஆக அவதாரம் எடுத்தார்:) அக்க்ப்போர் அய்யாயிரம் என்று தொகுப்பு கொண்டு வாருங்கள்:).