காலச்சுவடு க்ளாசிக் வரிசை வருகிறது. Vanity publishing எனப்படும் தனக்குத் தானே திட்டத்தினால் கூட உயிர்மை போன்ற பதிப்பகங்களின், பிரான்ட் வேல்யூ குறைந்ததாக தெரியாத காலம். கிழக்கு, உயிர்மை, தமிழினி மூலம் வெளியாகும் கதைகள் பரவலான கவனிப்பு பெறுபவையாக இருக்கின்றன.
முக்கியமோ/முகாந்திரமில்லையோ… தெரியாது; எனினும் சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் புனைவுகள் பெருமளவில் விற்கின்றன.
அப்படி பரவலான கவனிப்பைப் பெறாத, ஆனால் நான் மதிக்கும் சிலரால் (புத்தக விமர்சனங்கள், திண்ணையில் பாவண்ணன், நேசமுடன் வெங்கடேஷ் மின் மடல், தனி அரட்டையில் மெத்தப் படிக்கும் நண்பர்கள்) பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நாவல்களின் தொகுப்பு இது.
மூன்றாக லிஸ்ட்டை பிரிக்கலாம்.
1) நான் படித்தவை – நிச்சயம் முக்கியமானவை; விருது கோரும் ஆக்கம்: முழுநேரப் பதிவராய் பரபரப்பை கிளப்பாததால் மட்டுமே அதிகம் கவனிப்பு கிட்டாத புனைவுகள்.
2) நான் புரட்டியவை – வாசித்து முடிக்கவில்லை (சுவாரசியம் கிடைக்காததாலோ, பக்க அளவினாலோ அல்லது நண்பராக இல்லாததாலோ); இலக்கியத்தரமானவை
3) விஷ்லிஸ்ட்
படித்ததில் முக்கியமானவை
- மரகதத் தீவு – காஞ்சனா தாமோதரன் – உயிர்மை
- வெட்டுப் புலி – தமிழ்மகன் – உயிர்மை
- காக்டெயில் & ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
- கொசு – பா ராகவன்
- அலகிலா விளையாட்டு – பா ராகவன்
- அவன் – அது = அவள் :: யெஸ் பாலபாரதி
- மனப்பிரிகை :: ஜெயந்தி சங்கர்
- சல்மா – இரண்டாம் ஜாமங்களின் கதை
- உமா மகேஸ்வரி – யாரும் யாருடனும் இல்லை
புரட்டியதில் தரமானவை
- கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா
- நட்டுமை – ஆர்.எம்.நெளஸாத் – காலச்சுவடு
- கீரனூர் ஜாகிர்ராஜா – துருக்கித்தொப்பி & வடக்கேமுறி அலிமா
- வளவ. துரையன் – மலைச்சாமி – மருதா
- வட்டத்துள்:வத்சலா
- பாபுஜியின் மரணம்: நிஜந்தன்
- நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த்
- அம்மன் நெசவு: சூத்ரதாரி
- வா.மு.கோமுவின் – கள்ளி
- க.சீ. சிவக்குமார் – நாற்று
- சோ. தருமன் – வலைகள்
- பாலமுருகன் – சோளகர் தொட்டி
ரிடையர்மென்ட் விஷ்லிஸ்ட்
- காதில் மெல்ல காதல் சொல்ல – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – சந்தியா
- குவியம் – ஜெயந்தி சங்கர்
- நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி – தமிழினி
- தலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரி – தமிழினி
- மூன்றாம் சிலுவை – உமா வரதராஜன் – காலச்சுவடு
- கானல் வரி – தமிழ்நதி – உயிர்மை
- சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா.மு.கோமு – உயிர்மை
- அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது – வ.ஐ.ச.ஜெயபாலன் – உயிர்மை
- கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை
- க.வை.பழனிசாமி – ஆதிரை
- மனோஜ்குமார் – பால்
- எஸ். செந்திகுமாரின் – ஜீ. செளந்தர ராஜனின் கதை
- நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம்
- பாலிதீன் பைகள் – இரா நடராசன்
- லங்காட் நதிக்கரை – அ. ரெங்கசாமி; தமிழினி
- சிறீதர கணேசன் – சந்தி
- தளவாய் சுந்தரம் – ஹிம்சை
- கோகுலக்கண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
- பவா செல்லத்துரை – வேட்டை
- லட்சுமிமணிவண்ணன் – பூனை
- குமாரசெல்வா – உக்கிலு
- பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
- சி.எம். முத்து – வேரடி மண்
- செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு
- மில் :: ம காமுத்துரை
தூக்கம் வர சிரமதசை சாய்ஸ்
- பா. வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
- காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)
- மஞ்சள் வெயில் : யூமா.வாசுகி
- மாயினி – எஸ்.பொன்னுத்துரை
- எம்.ஜி. சுரேஷ் – 37
முந்தைய பதிவு: தமிழ் நூல் பரிந்துரை – 2010