ஜெய மோகன் மருதையப்பாட்டா என்றதும், அவர் கணையாழியில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.
வெளியான இதழ்: மே, 1987
இந்த வழியாகத்தான்
எங்கள் பழைய நதி ஓடியதாம்
முன்பு
ரொம்ப காலத்துக்கு முன்பு.
பெரிய நதி அது.
எங்கள் தாத்தா அதில்தான்
குளிப்பாராம்
அவரோடு பெரிய யானையும்.
அப்புறம் எப்படியோ
நதி நின்று போச்சாம்.
அந்த இடமெல்லாம் மணலாச்சு.
மணல் மேலே
எங்கப்பா வீடுகட்டிக் குடிவந்தார்.
இப்பக்கூட
எங்க கொல்லைப்புறத்தைத்
தோண்டி பார்த்தால்
மீன் முட்கள்
கிடைக்கின்றன.
எங்கள் பெரிய நதியோட
நினைவாகத்தான்
நாங்கள்
சனிக்கிழமைதோறும்
குளிக்கறதில்லை.
//கவிதை நினைவுக்கு வந்தது//
பிரமிப்பாக இருக்கிறது- இருபத்தைந்து ஆண்டுகால நினைவுத் திறன்!
பட்சிகளுக்கான பாடம் – வி.அமலன் ஸ்டேன்லி
“அடுத்த இளம்பனிக்காலத்தில்
கட்டிடங்கள் கொண்டுவிடும்
பழம்பெரும் வறண்ட குளம்
பெருநகர் கூளங்களும்
மண்ணும் சரளையுமென
கொட்டி நிரம்புகிறது
போக்கிடமற்று ஒழிந்துபோகலாம்
கொக்கும் நாரைகளும்
சுவரிடுக்குகளில் வாழ
புறாக்களிடமும்
எச்சில்களை ஜீரணிக்க
காக்கைகளிடமும்
கற்றுக் கொள்ளட்டும்
சீக்கிரமே அவை
மனிதரைப் போல…”