அறிவியல் நிகழ்வு
2007ஆம் வருடம். அண்டவெளியில் பச்சையாக பெரியதாக மிதப்பதை கண்டுபிடிக்கிறார்கள். என்னது, ஏது எதுவும் தெரியவில்லை.
கிட்டத்தட்ட பூமியின் பால் வீதி அளவு கொண்டது. டட்ச் மொழியில் ‘ஹானியின் பொருள்’ அர்த்தம் வருமாறு பெயர் வைத்தார்கள்: ஹானியின் வூர்வெர்ப். இது விண்மீன் மண்டலம் கிடையாது. வெறும் வாயு மட்டுமே.
அப்படியானால் எங்கிருந்து அந்தப் பச்சை நிறம் வருகிறது?
ஹானியின் பொருளுக்கு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தன் ஒளியை, குவாசார் அனுப்பி விட்டிருக்கிறது.
“நூறு மில்லியன் ஆண்டுகளுக்கொரு முறை முறை குவாசார் (quasar) கண் சிமிட்டும் என்று இதுவரை நினைத்திருந்தோம். ஆனால், இதன் மூலம் மில்லியன் ஆண்டுகளுக்கொரு தடவை என்று தெரிகிறது”, என்கிறார் கீல்.
புராணக் கதை
மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற சண்டைவந்தது. இருவரும் சிவபெருமான் முன்பு போய் நின்றனர். “உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் ஜெயிப்பவர்களே.. சிறந்தவர்கள்..” என்றார் சிவன்.
மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமான் போடும் பந்தயத்திற்காக காத்திருந்தனர். சிவன் திடீரென ஆதியும், அந்தமும் இல்லா அருட் பெருஞ்ஜோதியாக விஸ்வரூபம் எடுத்தார்.
“உங்கள் இருவரில் யார் என்னுடைய முடியையோ, அடியையோ முதலில் காண்கிறீர்களோ, அவரே எல்லோரையும் விட பெரியவர்” என்று கூறினார் சிவன்.
பிரம்மாவும், விஷ்ணுவும் போட்டிக்குத் தயாரானார்கள்.
“நான் சிவனின் திருவடியைக் காண்கிறேன்” என்று பெருமாள் பன்றியாக (வராகம்) உருமாறி பூமியைத் தோண்டி, உள்ளே சென்றார்.
சிவனின் திருவடிகள் பாதாளம் ஏழுக்கும் கீழே சென்று கொண்டிருந்தது. கோவிந்தர் ஒவ்வொரு பாதாளமாக போய் கொண்டிருந்தார்.
பிரும்மா?
சிவபெருமானின் திருமுடியைக் காண்பதற்காக பிரம்மா வானுலகில் பறந்து, பறந்து சென்றார். சிவனின் திருமுடியோ அகண்ட முகடுகளைப் பிளந்து மேலே சென்று கொண்டே இருந்தது. எவ்வளவு உயரம் போயும் பிரம்மாவால் சிவனின் முடியைக் காண முடியவில்லை.
ஒருவேளை, இந்நேரம் மகாவிஷ்ணு சிவனின் அடியைக் கண்டிருப்பாரோ என்று அச்சம் வேறு. அப்போது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.
பிரம்மன் அதை தாவிப் பிடித்து,”எங்கேயிருந்து வருகிறாய்? என்று கேட்டார்.
தாழம்பூ பதில் சொன்னது. “நான் சிவனின் தலைமுடியில் இருந்து தவறி விழுந்து பல யுகங்கள் ஆகிவிட்டன. கீழேவிழுந்து கொண்டிருக்கிறேன்.”
பிரம்மா சோர்ந்து போனார். தந்திரமாய் ஒரு வேலை செய்தார். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. அதனால் தாழம்பூவுடன் ஓர் ஒப்பந்தம் போட்டார்.
அதன்படி தான் சிவனின் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு (பொய்) சாட்சி சொல்லும் படியும் தாழம்பூவிடம் கேட்டார். தாழம்பூ ஒப்புக்கொள்ள, சந்தோஷமாய் கீழே இறங்கினார் பிரம்மா.
மிக்ஸிங் ஞானம்
பிரும்மா தலையைத் தேடிப் போனது ரஜோ குணம். விஷ்ணு அடக்கமாக கீழே சென்றது – தமோ குணம்
ரஜோ குணத்தில் பேராசைப் பெருக்கம்; தமோ குணத்தில் அறிவின்மை, பித்தம், மயக்கம் போன்றவை உண்டாகின்றன. இந்த இரண்டிலும் கடவுளின் தரிசனம் நமக்கு கிடைப்பதில்லை.
ஆனால் சத்வ குணத்தில் ஞானம் விருத்தி. சத்வ குண்ம் என்றால் அன்பு. அடி முடி தேடுவது என்பது இயற்கையில் பல ரகசியங்கள் புதைந்துக் கிடக்கின்றன. அவற்றை விஞ்ஞான பூர்வமாக அலச அலச பல புது விதமாக பிரச்சினைகள் முளைக்கின்றன. இதுவே இயற்கையின் சூட்சுமம்.
நபநபாபா.
சித்ரன் __/\__ 🙂
இதில் ஒரு சின்ன ஐயம் ஐயா…
““பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!”
என்ற அடிகளை வைத்துப் பார்த்தால் ஹானியின் வூர்வெர்ப் திருமாலின் திருவுருவைக் குறிக்கும் என்றுதானே பொருள் பட வேண்டும்?
அது ஈஸ்வரனின் திருமேனி என்று எப்படி நீங்கள் முடிவு செய்கிறீர்கள்?
என்னதான் மிக்ஸிங் ஞானமாக இருந்தாலும் அதில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மிக்ஸ் அப் ஆகக் கூடாதில்லையா?
//பச்சைமா மலைபோல் மேனி//
கடவுளைக் கண்டுணர வைத்தவரே!!! 🙂 நன்றி