பத்தாண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் சந்தித்துக் கொண்டால், கோவிலில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். பத்து மாதங்கள் கழித்து சந்திக்கும் சிறுவர்கள் பூங்காவின் விளையாட்டரங்கத்தில் ஆடத் துவங்க வேண்டும். பத்து புத்தகங்களை வாசித்தபிறகு, எழுதியவரை எங்கு சந்திக்க வேண்டும்?
எல்லாவிதமான கேள்விகளுக்கும் உலகப்பொதுவிடை: ‘It depends!’
வருடாவருடம் சென்னைக்கு ஒரு முறை எட்டிப் பார்ப்பதுண்டு. கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டம், ஞாநியின் கேணி, தமிழ் ஸ்டூடியோவின் முழுநிலா இரவுப்படக்காட்சி எல்லாம் நடக்காத சமயமாக தோன்றுவது வழக்கம். பாலபாரதியின் பீச் பதிவர் சந்திப்பு, ரோசா வசந்த்துடன் மேன்ஹட்டன் பார்வை என்று முடிந்து போகும்.
அப்போதெல்லாம் லக்கிலுக், அதிஷா போன்ற சென்ன தாதா பதிவர்களிடம் ‘சாரு நிவேதிதாவோடு ஒரு நைட் அரேஞ்ச் செய்து தர முடியுமா?’ கேட்டதுடன் சரி.
‘ரேட் அதிகம்’ என்பது போல் ஏதோ பதிலொன்றை உதிர்த்து அவர்களும் நழுவி விடுவார்கள்.
நிறைய எழுதுபவர் பேச்சில் கெட்டிக்காரராக இருப்பார். இடையே ஒரு கண்ணாடிச் சுவர் இருக்கும். அதை உடைத்துவிட்டால், சம்பாஷணை சுவாரசியம் அளவிட முடியாதது. சிலர் துவக்கத்திலேயே அவற்றை கிள்ளி எறிவர்; ஆத்மார்த்தமான உரையாடல் நிலையை போதை இல்லாமலேயே ஊட்டுவர். சிலரோ தங்களின் புத்தகங்களின் நீட்சியாக சொற்பொழிவை அமைத்துக் கொள்வர். எப்படியாக இருப்பினும் மாலை நேரத்து மீட்டிங் சுகம் தரும்.
சாருவின் எழுத்தை மேலோட்டமாக படிப்பவருக்கே அவர் மேல் அச்சம் கலந்த குழப்பம் நேரிடும். எந்திரன் விமர்சனம் வாசித்தவுடன் நண்பர் சொன்ன மதிப்பீடு நினைவில் தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.
‘சுஜாதா யாரையாவது திட்டினால், அது அந்தாளுக்கு அழைப்பு விடுவதாக அர்த்தமாக்கும். ஒரே வருடத்தில் ரெண்டு படம் வருது. ஒண்ணு புது வசந்தம்; இன்னொண்ணு அஞ்சலி. எந்தப் படத்த சுஜாதா “ஆஹா… ஓஹோ…”ன்னு பாராட்டினார்? எதத் தாளிச்சு அதகளமாக்கினார்னு நெனக்கிறீங்க? – “அஞ்சலி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் மோசமான மைல்கல்” என்றார் சுஜாதா. விக்ரமன் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அடுத்த வருஷம் மணிரத்தினத்துடன் இணைந்து விட்டார்’.
சாரு நிவேதிதாவும் கமலைத் திட்டுகிறார். இளையராஜாவைத் தாக்குகிறார். ரஜினி, ஷங்கர் படங்களையும் விட்டுவைக்கவில்லை. நாமும் நிறையவே விமர்சித்திருக்கிறோம். ராசலீலாவை கிழிக்கிறோம். சாரு மடலில் தந்த கவிதை கிவிதையாக்குகிறோம். நானும் கூட்டு சேர நிறையவே சங்கேதம் விட்டுப் பார்த்தாகிவிட்டது.
‘உங்கொப்புரான் சத்தியமா நான் குடிகாரன் இல்ல’ என்று சாரு ஆனந்த விகடனிலும் அவரின் பதிவிலும் தொடர்ச்சியாக எழுதி வந்த காலகட்டம் அது. அப்படியானால் சந்திக்க உகந்த இடம் மதுவகமே என முடிவானது. நித்யானந்தா மாதிரியே குடிப்பழக்கத்திற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் என்று தோன்றாமல் போனது வேறு பிரச்சினை.
சாருவிற்கு மின்மடலிட்டேன். தொலைபேசி தந்தார். அழைத்தேன். பேசினோம். ஒரேயொரு சந்தேகம் கேட்டார்.
“பாலா, ஆனந்த விகடன் கட்டுரை எழுதுகிறேன். இந்த பிராமணர்கள் எல்லாம் பூணூல் மாற்றிக் கொள்வார்களே… அந்த நாள் எந்த மாதத்தில் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை; திண்டாடுகிறேன். கூகிள் கைவசம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?”
இதற்கு மேல் சாரு நிவேதிதாவுடன் ஆன சந்திப்பு குறித்து குறிப்பிடத்தக்க விஷயம் எதிவும் கிட்டாததால், இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.
>>பிராமணர்கள் எல்லாம் பூணூல் மாற்றிக் கொள்வார்களே
– நல்ல வாய்ப்பை விட்டு விட்டீர்களே…சாருவை உட்கார வைத்து (?!), வந்தேறி ஆரியர்களையும், அவர்தம் பண்டிகைகளையும் (தீவிளி இன்னும் விசேஷம்), வேதத்தில் சொல்லாதவைகளையும், மனுதர்ம ரீல்களையும் explain செய்து சாருவை ஒரு இரண்டு வாரத்துக்கு எதுவுமே எழுதாமல் செய்திருக்கலாமே.
ராஜேஷ், 🙂 😀
தைப் பூசம் எப்போ வரும்னு கேக்கற மாதிரி இருக்கே!
பதில் சொல்றது கஷ்டம்தான்.
‘செந்தூரப் பூவே பாடலில் என்ன இருக்கிறது, பாஸ்டனுக்கு பல்லாவரத்திற்கும் உள்ள தூரம் எவ்வளவு’ போன்றவை அடுத்து அவர் தொடுத்த வினாக்கள்.
யோவ்! என்னய்யா இப்படி மொட்டையா முடிச்சுட்டீர்! என்னதான் சொல்ல வர்றீங்க! நிற்க
/தைப் பூசம்/ பாஸ்! ஆவணி அவிட்டம் ஆடியிலும் வரும்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
அமெரிக்காவில் ஆவணி மாதம் எப்பொழுது வரும் வெங்கட்?
@venkatramanan //ஆவணி அவிட்டம் ஆடியிலும் வரும்!//- இப்போதுதான் சாரு கேட்டது எவ்வளவு அர்த்தம் பொதிந்த கேள்வி என்பது தெரிகிறது!
அப்படியே ரீடரைத் தாண்டிக் கொண்டு போய் விடுகிற பதிவா இது? வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவு இல்லியா? 😉
நான் இட்ட இமெயிலுக்கு வந்த சாருவிடமிருந்து பதில் இன்னும் வித்தியாசம் (அப்ப இமெயில் அட்ரஸ்ல என் பெயர்; நான் பெண் என்பது தெளிவாகத் தெரியும்).. ஹஹா!
கெபி __/\__ :>
நான் இட்ட இமெயிலுக்கு சாருவிடமிருந்து வந்த பதில்-னு இருக்கணும்…