ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாக சரித்திரம் உண்டா?
உண்மையான ஜனநாயகத்தில் சாத்தியமில்லை. அதுவும் வறுமை தாண்டவமாடும், வேலையில்லாத் திண்டாட்டம் கொடிகட்டி பறக்கும் நாட்டில் தம்பிடிக் காசு கூட பெட்டு கட்ட முடியாது.
இரண்டாண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. கேள்வி கேட்டார்; குற்றஞ்சாட்டினார்.
இன்றோ ஆளுங்கட்சி. காங்கிரஸ், செனேட், ஜனாதிபதி… சகலமும் டெமோக்ராட் வசம். மார்தா கோக்லி ஒரு பதம் என்றால், முழு வெண்கலப் பானையும் நாளை பொங்குகிறது.
அதிபர் ஆகிய பிறகு எதிர்கொள்ளும் முதல் தேர்தலை பில் க்ளின்டன் முதற்கொண்டு பெரும்பாலானோர் தோற்றே துவங்கியுள்ளனர். ஒபாமாவும் படுதோல்வியுடன் துவங்குவார்.
அதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
- சேமநலம், உடல்நலம் என்று எல்லோரின் செலவையும் இன்ஷூரன்ஸ் நிறுவன நலனுக்காக கூட்டி கொடுத்தது
- கடைநிலை ஊழியர்களுக்கு வேண்டிய கட்டுமானத் தொழில் தலைநிமிராதது
- வருமான வரி அதிகமாகிப் போகும் அபாயம்
இதனால் ஒபாமாவிற்கு கிடைக்கப் போகும் முக்கிய நன்மைகள் என்ன?
- ஆப்கானிஸ்தானில் இருந்து போர்படைகளை விலக்குவதை தாமதிக்க ஆர்வம் காட்டும் மேல்சபை + சட்டசபை
- தீவிர இடதுசாரி கொள்கை கொண்ட நிதிக் கொளகை & தொழிற்துறை சார்புநிலையைத் தளர்த்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதாக காட்டிக் கொள்ளுதல்
- அதன் மூலம் சாரா பேலின் போன்ற ஒப்புக்கு சப்பாணியை தன் போட்டியாளராக 2012 தேர்தலில் நியமிக்க வைத்தல்
அதெல்லாம் இருக்கட்டும். உள்ளூர் அரசியலுக்கு வருவோம்.
மாசசூஸெட்ஸ்
சென்றமுறையே தெவால் பேட்ரிக் மெதுவாகத்தான் துவங்கினார். இந்த முறையும் செம ஆமை ஆரம்பம். ஆனால், முயல்களை விட முன்னிலையில் இருக்கிறார்.
விஜயகாந்த் போல் ரெண்டுங்கெட்டான் கஹில். குடியரசு வாக்குகளை சிதறடிப்பதில் சுதந்திரக் கட்சியின் பொருளாளர் கஹில் பெரும்பங்கு வகிக்கிறார்.
வாக்குச்சீட்டில் மூன்று கேள்விகளில் இரு கேள்விகள் ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.
1. சாராயத்திற்கு வரிவிலக்கு தரலாமா? வேண்டாமா?
2. உங்கள் வருமான வரியை குறைக்கலாமா? வேண்டாமா?
இந்தக் கேள்விகளை Jeopardy போல் தலையைச் சுற்றி வினா எழுப்பியுள்ளனர்.
கலிஃபோர்னியா
மாசசூஸட்ஸ் எல்லாம் ‘ஐயோ… பாவம்’ ரகம். கலிபோர்னியாவில் கஞ்சாவை சட்டபூர்வமாக வளர்க்கலாமா/ வேண்டாமா என்று வினவுகிறார்கள்.
சட்டத்திற்கு அப்பால் போதைப் பொருள் ஏற்றுமதி (கடத்தல் என்று கூட இதற்கு சங்ககாலத்தில் பெயர் நிலவியது) செய்யும் நாடுகளான மெக்சிகோ, கொலம்பியா, கார்சாய் போன்றவை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
பல்கலை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சட்டவரைவுக்கான பதிலை நாலை அறியலாம்.
கலிபோர்னியாவில் கஞ்சா தவிர இன்னும் இரு முக்கிய போட்டிகள்.
1. ஹியுலெட் – பக்கர்ட் முன்னாள் தலைவி கார்லி ஃபியோரினா
2. ‘பொருட்கள் எலத்தில் விற்க/வாங்க’ உலகப் புகழ்பெற்ற வலைத்தளமான ‘ஈ பே‘ தலைவி மெக் விட்மன்.
செமொக்ரட் கட்சித் தலைவர் ஹாரி ரீட் :: செனேட்
ஆறு வருடத்திற்கொரு முறைதான் செனேட்டருக்கு மறுதேர்தல் நடக்கிறது. (அமெரிக்க காங்கிரசுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை). போயும் போயும் இந்தாண்டுதானா அந்தப் போதாத காலம் வரவேண்டும்?
அந்த ஆறாண்டு காலம் நிறைந்து, இந்த முறை இன்னொரு வாய்ப்பு கோருகிறார் ஆளுங்கட்சி தலைவர் ஹாரி ரீட்.
கட்டிடங்கட்டுவோர், சாலை போடுவோர் என்று தினகூலிக்கு சொற்ப சம்பளம் பெறுவோர் தெருவில் தள்ளப்பட்ட நிலை. அப்படி தள்ளாடும் அமெரிக்கருக்கு போட்டியாக, பக்கத்து நாடான மெக்ஸிகோவில் இருந்து மிகக் குறைந்த ஊழியத்திற்கு கள்ளத்தோணியில் குடிபுகல்வோர்களை கண்டு கொள்ளாத சுதந்திர கட்சி சீட்டை தக்கவைத்துக் கொள்ளுமா?
கதாநாயகி கிறிஸ்டின் ஓடானல்
சென்ற தேர்தலில் நாயகி அந்தஸ்தை சாரா பலின் பெற்றார். இந்தாண்டு அந்தப் பெருமை டெலாவேர் மாகாண செனட்டராக போட்டியிடும் க்ரிஸ்டீன் ஒடானலைச் சேரும்.
ஜோ பைடன் துணை ஜனாதிபதி ஆனதால் காலியான இடத்திற்கான போட்டி என்பது கூடுதல் மகிமை.
கிரிஸ்டீன் ஒடானல் பொன்மொழிகளில் சில:
- “பிறன்மனை நோக்குவது தவறு; அதனினும் தவறென்பது கையடித்தல். கைவேலை செய்வது முறை பிழற்ந்த செய்கை.”
- “கிறித்துவத்தை பள்ளிப் பாடநூல் திட்டத்தில் இருந்து எடுத்துவிட்டோம்; அதன் செய்வினையால்தான் வாரந்தோறும் வகுப்பறைகளில் துப்பாக்கிச்சூடு நடக்கிறது.”
- “தீராநோயை இறைவன் தீற்று வைக்கிறார். புற்றுநோயை கடவுள் குணம் செய்வித்தலை கருத்தில் கொள்ளாமல், பணங்கட்ட சொல்லுகிறார்கள்.”
- “எனக்கு நீங்கள் வாக்களிக்க, காரணஞ்சொல்ல தேவையில்லை.” (கேள்வி: நீச்சலுடை புகைப்படத்தைக் காண்பித்து வாக்கு சேகரிப்பீர்களா?)
- “பரிணாம வளர்ச்சி என்னும் அறிவியல் கொள்கை வெறும் பம்மாத்து. அது மட்டும் உண்மையென்றால் குரங்குகளெல்லாம் மனிதர்களாகி இருக்குமே?”
- 1999ல்: ‘நான் பில்லி, சூனியம் வைக்க முயன்றேன்.’
- இன்று: “நான் சூனியக்காரி அல்ல!”
அமெரிக்க காங்கிரஸ் – சட்டசபை
மொத்த இடங்களான 435- இல் நூறு இடங்களில் சரியான போட்டி. நூறு இடங்கள் கொண்ட செனேட்டில் 37க்கு தேர்தல் நடக்கிறது.
ஒபாமாவிடம் எப்பொழுதுமே பணப்புழக்கம் அதிகம். இப்பொழுது ஆளுங்கட்சி வேறு! டெமொகிரேட் கட்சி 145 மில்லியன் டாலர்கள் செலவழித்திருக்கிறது.
அதற்கு சற்றும் சளைக்காத ரிபப்ளிகன் கட்சி 121 மில்லியன் கரைத்திருக்கிறது. அதற்கான வருவாயாக குறைந்தபட்சம் நாற்பது இடங்களாவது கைமாறும் என்று எதிர்பார்க்கிறது.
சீனாவும் கேபிடலிசமும்
இது தவிர கார்ல் ரோவ் போன்ற சுப்பிரமணிய சாமிகள் கைங்கர்யமும் இந்தத் தேர்தலில் நிறையவே உண்டு. இந்த மாதிரி அறுபது மில்லியன் குடியரசுக் கட்சிக்கு கிடைத்திருக்கிறது. அதற்கான அமைப்பாக U.S. Chamber of Commerce செயல்படுகிறது. சீனா போன்ற வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களின் உபயத்தில் வளர்கிறது.
சைனாவின் பணத்தை மதிப்பீடு செய்வதில் சுணக்கம் ஏற்படுத்துவது, டாலருக்கும் மற்ற நாணயங்களுக்கும் நிலவும் ஏற்றத்தாழ்வை அப்படியே விட்டுவைப்பதன் மூலம் ஏற்றுமதியின் லாபவிகிதத்தை மெயின்டெயின் செய்வது போன்றவை சீன அரசின் விருப்பம்.
ஜார்ஜ் புஷ் செய்ததை குடியரசு கட்சி தொடருமென்னும் நம்பிக்கையில் அயநாட்டு செல்வாணியும் உள்நாட்டுத் தேர்தலில் விளையாடுகிறது.
ஆளுநர் – கவர்னர் பதவி
37 இடங்களில் ஆளுநருக்கான போட்டியும் நாளை தேர்தலில் இடம்பிடித்துள்ளது.
இதில் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பாளராக அமெரிக்க இந்தியப் பெண்ணான நிக்கி ஹேலி முன்னணியில் இருக்கிறார்.
ஆர்னால்ட் ஸ்வார்ஸனீகர் கட்சியை சேர்ந்த மெக் விட்மேன் வெல்வாரா? நிரந்தரமாக டெமோக்ரட் வெல்லும் மாநிலத்தில் முன்னாள் கவர்னர் ஜெரி பிரவுன் வெல்வாரா?
எவர் வென்றாலும் கஞ்சாவில் மட்டுமே அகில உலகமும் கவனம் செலுத்தும்.
மேலும்:
- Key House Races in the 2010 Elections – Interactive Feature – NYTimes.com
- A Banner Year for Political Spending – Interactive Graphic – NYTimes.com
- Campaigns: Campaign and Election News & Analysis – washingtonpost.com
- Basics about Midterm Election – Election Center 2010 – Elections & Politics from CNN.com
>>1. சாராயத்திற்கு வரிவிலக்கு தரலாமா? வேண்டாமா?
Not exactly correct.
Question is about removing the sales tax on alcohol, which was slapped over excise tax. The said products are double-taxed now. There is no difference between
Deval’s taxing system and “Kandhu Vatti”.
>>ஆனால், முயல்களை விட முன்னிலையில் இருக்கிறார்.
Let us see in a few hours.
4 years ago, Deval said.
“Read my lips. No More taxes” and raised taxes in almost everything.
முப்பது டாலர் கொடுத்து சிவாஸ் ரீகல் வாங்குபவர், இன்னுமொரு ஒண்ணரையணா கொடுக்க சுணங்கலாமா?
>>இன்னுமொரு ஒண்ணரையணா கொடுக்க சுணங்கலாமா?
Would that apply for the folks who voted for this additional tax?
http://www.thebostonchannel.com/r/20684438/detail.html
It is just not about a few more quarters.
You pay a few more quarters for “everything” and it does add up.
இன்னும் ஒரு ஒண்ணரையணா வாங்காமல் இருந்தால் அரசாங்கம் இயங்காதோ?
🙂