கலைஞரைக் குறித்து எழுதினால், அம்மாவை அடுத்து சொல்ல வேண்டும்.
‘தகதிமிதா’ நடன நிகழ்ச்சி. சமீபத்தில் பார்க்கத் துவங்கியுள்ளேன் இப்போதைக்குப் பிடித்திருக்கிறது.
முதல் சுற்றில் தமிழ்ப்பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடுகிறார்கள். இரண்டாவது சுற்றில் கையில் எதையாவது வைத்து அபிநயம் காண்பிக்கிறார்கள். இறுதியாக, தெலுங்கு அல்லது பிறமொழிப் பாடலுக்கு ஆட்டம்.
நடுவே சுதா சந்திரன் கொஞ்சம் ஆடுகிறார். நடுவரும் அரங்கேறி தன் வித்தையை காண்பிக்கிறார்.
இருப்பதற்குள் இரண்டாம் சுற்றுதான் அலுப்பு தட்டுகிறது. ஒரே விதமான பாவனை வாராவாரம் மறு ஒளிபரப்பு ஆகிறது.
ஏன் இவரைத் தேர்ந்தெடுத்தோம் என்பதை நடுவர் சொல்வதில்லை. நாமே புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், சூப்பர் சிங்கர், நாளைய இயக்குநர் மாதிரி போங்கடிப்பதில்லை. ஓரளவு உருப்படியாக பெர்ஃபார்ம் செய்பவரே வெல்கிறார். தயாரிப்பாளரின் ஒன்று விட்ட அத்தை பையன், புகழ்பெற்றவருக்கு தெரிந்தவர் எல்லாம் முதல் பரிசைத் தட்டி செல்வதில்லை போலத் தெரிகிறது.
தொடர்வது தொகுப்பு:
இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான
- பானுப்பிரியா,
- ஷோபனா,
- சுகன்யா,
- விமலா,
- இந்திரஜா,
- `அண்ணி’ மாளவிகா,
- மோகினி
ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.
சாஸ்திரிய நடனக்கலையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 400-வது எபிசோடை எட்டியிருக்கிறது.
“கலையை நம் வாழ்வில் தினம் பிரதிபலிக்கும் நிகழ்வாகப் பார்க்க வேண்டும்” – பரத கலைஞர் ராதிகா சுரஜித்
திரைப்பட நடன இயக்குனர், ஜெயா டிவியில் ‘தகதிமிதா’ நிகழ்ச்சியின் இயக்குனர், ‘த்ரயி’ என்ற நாட்டியப் பள்ளியின் நிறுவனர்.
வெறும் போட்டி நிகழ்ச்சியா இல்லாம அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் கற்றுக் கொள்ளவும் செய்ய வைத்தோம். அது எங்களுக்கு நல்ல ஸ்கோர் வாங்கிக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சியை நான் செய்ய நினைத்த போது நிறைய பேர் டிவியில் பரத கலையைக் கொண்டு வருவது என்பது சரியா வருமா, எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்று பேசினார்கள். ஆனால் நான் ரொம்ப உறுதியாக இருந்தேன். இதை வித்தியாசமாகக் கொடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் என்று நம்பினேன். அதே நேரத்தில் ஜெயா டிவிக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன். ஜெயலலிதா ஒரு பரதக் கலைஞர் என்பதால் இந்த நிகழ்ச்சியை நான் பண்ணனும்னு சொன்ன போது உடனே ஓகே சொன்னார். ஜெயா டிவி இதை பிசினஸாகப் பார்க்காமல் ஒரு கலையை வளர்க்கும் முயற்சியாகப் பார்த்தது மற்றொரு பிளஸ்.
முதன் முதலில் இந்திரா படத்தில் ‘நிலா காய்கிறது’ பாட்டுக்கு சுஹாசினி நடனம் அமைக்கக் கூப்பிட்டாங்க.
தங்கர்பச்சானுக்கு என் நாட்டியத்தின் மீது மதிப்பு உண்டு. அதனால் அழகி படத்தில் ‘பாட்டுச் சொல்லி’ பாட்டு பண்ணச் சொன்னார். ஒரு பொண்ணோட மன உணர்வுகளை அப்படியே பிரேமுக்குள்ள கொண்டு வரணும்னு சொன்னார்.
அந்த மாதிரி அமைந்ததுதான் பாரதி படத்தில வந்த ‘மயில் போல’ பாட்டும்.
‘இவன்’ படத்தில கம்பியூட்டர் கிராபிக்ஸ்ல பரத நாட்டியம் ஆட வச்சதும் ஒரு வித்தியாசமான முயற்சி.