நாளைய இயக்குநர்: கலைஞர் டிவி


இறுதிப்போட்டி மட்டும் பார்த்தேன். வருங்காலத்தின் முக்கிய இயக்குநராகக் கூடிய ஆறு பேரின் படங்களில் இரண்டுதான் தேறும்.

ஷங்கர், பிரதாப் போத்தனை வழிமொழிந்து மதனும் ‘ஆடு புலி ஆட்டம்‘, ‘நீர்‘ எல்லாம் நன்றாக இருக்கிறது என்றார்கள். Either they have lost their taste buds or their compensation makes them talk like desis behaving at NRI clients.

கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தேங்கார் ஸ்ரீனிவாசன் நாயகனாக வரும் எழுபதுகளை நினைவூட்டியது ‘ஆடு புலி ஆட்டம்‘. இந்த மாதிரி கொடுமை இயக்குநர் நாளை வரப்போகிறார் என்பதே பத்து பியர் அருந்த வைக்கும்.

தெருவெங்கும் கோவிந்தா போட்டு உருள்வது போல் கையில் இலங்கை குண்டுவெடிப்பு அனுதாப உண்டியல் குலுக்கியது ‘நீர்‘. அண்ணனுக்கும் தம்பிக்கும் இருக்கும் சகோதர பாசத்தை பாசமல்ர் பீம்சிங் பாதம் தொட்டு ரீமேக் செய்திருந்தார்.

மிட்டாய் வீடு’ தேவலாம். சரியான சிக் ஃப்ளிக். ஜூனியர் பாலச்சந்தர் மாதிரி மனதைத் தொட்டார். விஜய் பட டைரக்டராவது லட்சியமாகக் கொண்டவர் போல… நடுநடுவே சூப்பர் ஸ்டார் படம் வேறு போடுகிறார்.

முதல் வார விமர்சனங்களை சுரேஷ் கண்ணன் ஒரு கை பார்த்துவிட்டார்.

இந்த வாரம் கச்சத்தீவு கண்ணீர் என்றால், சென்ற வாரம் பார்வையற்றோர் வைத்து சென்டிமென்ட்.

எல்லாப் படங்களையும் ஏற்கனவே பார்த்த மாதிரி வேறு இருந்து தொலைக்கிறது. ‘துரு‘ மிக நன்றாக இருந்தது என்றார்கள். பார்க்க வேண்டும்.

நளன் & பாலாஜி தேவலாம். பின்னவர் ‘மொழி’ மாதிரி பிரகாஷ்ராஜ் காவியங்களும் முன்னவர் கிரேசி மோகன் துணையுடனும் உலா வரவும், மற்றவர்கள் எல்லாம் ‘சென்னை சில்க்’சுக்கும் சந்தூர்க்கும் விளம்பரம் இயக்கப் போகவும் அனுப்பிவைத்து எம்மை இரட்சிக்க எல்லாம் வல்ல கலைஞரிடம் விண்ணப்பிக்கிறேன்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. நந்தவனம்: வருங்கால இயக்குநர்

2. பிச்சைப்பாத்திரம்: நாளைய இயக்குனர்

3. பெட்டி கேஸ் படத்தினைப் பார்க்க : இங்கே. (மூன்றாவது வீடியோவில் மூன்றாவது நிமிடத்திலிருந்து படம் ஆரம்பமாகிறது. நான்காவது வீடியோவிலும் தொடருகிறது.)

4. முகில் / MUGIL » கண்டேன் இயக்குநரை!

5. இந்த நிகழ்ச்சியின் தொகுப்புகளை இந்த தளத்தில் காணலாம்.

5 responses to “நாளைய இயக்குநர்: கலைஞர் டிவி

  1. பிங்குபாக்: தகதிமிதா – ஜெயா டிவி « Snap Judgment

  2. Karthik subbaraj Rocks…I think u even have talent in commenting on flim…Neer was too good..Plz watch properly b4 commenting..

  3. கார்த்திக் சுப்பராஜ் மிக அருமையான டைரக்டர்.பாவம் உங்களுக்கு படத்தை விமர்சனம் செய குட தெரியவில்லை.வருங்கலத்தில் நீங்களே அவர் அருமையான டைரக்டர் என எழுதுவீர்கள் என நம்பிக்கை எனக்கு உன்று.

  4. பிங்குபாக்: நிமித்தகாரன்: குறும்படம் | Snap Judgment

  5. பிங்குபாக்: அப்பாடக்கர்: Tamil Short Film by Ila | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.