சென்ற மாதத்தின் கடைசி சனிக்கிழமை எனக்குத் தெரிந்த ஸீக்வல் நுட்பங்களை விளக்கிச் சொல்ல மேடையும் அரங்கம் நிறைந்த ஆடியன்சும் வாய்த்தனர். அவை குறித்த பவர்பாயின்டுகள் அங்கே கிடைக்கும்.
நீங்களும் இவ்வாறு உங்களுக்குத் தெரிந்த வித்தையை உள்ளூர் கேம்ப்பில் பகிர்ந்து மகிழ வேண்டும்.
ஏன்?
1. பணம் முதலீடு செய்தால் பெருகலாம். கல்வி சொல்லிக் கொடுத்தால் நிச்சயம் உங்களுக்கு பெருகும். ஒழுங்காய்ப் புரியும்.
2. லிங்க்ட் இன் போன்ற சோஷியல் நெட்வொர்கிங் தளங்களில், உங்களின் ப்ரசன்டேஷன் பேசப்பட வேண்டும். விஷயம் தெரிந்தவர் என்ற கெத்து கிடைக்கும்.
3. சொல்லிக் கொடுப்பதற்காக அமேசான் போன்ற நிறுவனங்களின் அன்பளிப்பு வரப்பெறுவோம்.
4. கோர்வையாக விளக்குவதும், சுவாரசியமாக நகைச்சுவை தெளித்துப் பேசவும், கடினமான டெக்னாலஜியை சுளுவாக எடுத்து வைக்கவும், இதை விட வசதியான இடம் கிடைக்காது.
இனி… எப்படி தயார் செய்வது?
1. உங்களுக்குத் தெரிந்து நுட்பமாக இருக்கட்டும். நீங்கள் வேலை செய்த மொழியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். லேட்டஸ்ட் என்பதை விட அகலமும், ஆழமும் அறிந்த தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுங்கள்.
2. அடுத்தது: இந்த நுட்பத்தை மற்றவர் அறிவதால் என்ன பயன்? எவருக்கு இது கவர்ச்சியாக அமையும்? யாருக்கு சொல்லித் தந்தால் முக்கியம்?
3. இனிமேல் ஈஸி. ஸ்லைடுகள் ஏற்கனவே எவராவது போட்டிருப்பார். அதை கூகிள் கொண்டு எடுக்கவும். எட்டு டெக்குகள் எடுத்து, அவற்றுள் அலசி, ஆராய்ந்து, ஒருங்கிணைத்து உங்களுடையதை தயார் செய்யவும் – ஒரு நாள் வேலை இது.
4. முக்கிய கட்டம்: டெமோ காட்டுவது. இதற்கான மென்பொருளை உங்கள் மடிக்கணினியில் நிறுவவும். சாம்பிள் நிரலிகளை பொறுத்தவும். எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று தலை முதல் வால் வரை நடத்திப் பார்க்கவும். அவற்றை எழுதி வைத்துக் கொள்ளவும் – அடுத்த நாளுக்கான வேலை.
5. கடைசி கட்டம்: பவர்பாயிண்ட்டை முழுக்க சொல்லி பார்க்கவும். ஒரு மணி நேர வகுப்பு என்றால், முக்கால் மணி நேரமாவது உங்கள் பேச்சு இருக்க வேண்டும். – எட்டு மணி நேர உழைப்பு தேவை
6. கட்டாங்கடைசி: உங்களின் பயிற்சி முழுக்க கேட்டும் பார்வையாளருக்கு எதுவும் புரியவில்லை என்றால், எதை மட்டும் முக்கியமாகக் கருதி, மனதில் இருத்த வேண்டும்? தடாலடியான முன்னேற்றம் காண்பது எப்படி? உங்களை எப்படி அணுகுவது (மின்னஞ்சல் முகவரி இன்ன பிற).
என்னுடைய டேட்டா கேம்ப் அனுபவங்கள்:
1. உள்ளூர்காரர்களுக்கு ஜோக் கொண்ட விவரிப்பு முக்கியம். இந்தியாகாரங்களுக்கு (அதாவது… காரியஸ்தர்களுக்கு) விஷயம் முக்கியம். இரண்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள முயன்றேன். (எ-டு: ‘நீங்க இப்ப கத்துண்டது எல்லாமே ரத்திக்குப் போயாச்சு. எல்லாரும் க்ளௌடுக்கு மாறிட்டாங்க! இனிமே ஸீக்குவல் வெறுங்குப்பையாக்கும்.)
2. ஒரு நாளைக்கு ஒரு வகுப்பு மட்டுமே வைத்துக் கொள்ளவும். இரண்டு வகுப்புகள் என்றால் காலையில் ஒன்று; மாலையில் ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக வேண்டவே வேண்டாம்.
3. கேள்விகளை தைரியமாக எதிர்கொள்ளவும். எதிராளிக்கு விஷயம் தெரியாது. கூகிள் எல்லாம் கையில் கிடையாது. மைக்கோ உங்கள் பிடியில். நீங்கள் சொல்லும் பதில்தான் அதாரிட்டி. எனவே, நிச்சயம் அதிரடியாக வேதவாக்கு அருளுங்கள்.
4. நன்றாக எடுத்தால், நிறைய சந்தேகங்கள் வரும். எளிமையாக வைத்துக் கொண்டேன். கேள்வி நிறைய வந்தது.
5. பதிவுக்கு காமென்ட் வருவது போல், ‘ரொம்ப நன்றாக இருந்தது’ என்று நாலு பேர் நடைபாதையில் நிறுத்தி நன்றி சொன்னபோது, சும்மா… ஜிவ்வென்றிருந்தது.
//(எ-டு: ‘நீங்க இப்ப கத்துண்டது எல்லாமே ரத்திக்குப் போயாச்சு. எல்லாரும் க்ளௌடுக்கு மாறிட்டாங்க! இனிமே ஸீக்குவல் வெறுங்குப்பையாக்கும்.)//
100% true. People are moving to Index based search ( Lucene, google search) with EC2, Hadoop for Information retrieval for faster presentation. Even though they use DB still people prefer Index based search rather than SQL queries.
unga kavithai enakku romba pudikkum
unga acting kooda romba nalla irukku