இது முதல் செய்தி: Water in Moon: India’s Chandrayaan-1 mission :: நீர் நிரம்பிய நிலவு
இரண்டாவது: UN offsets balance CO2 emissions | Marketplace From American Public Media
உலக அதிபர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சந்திப்புக்காக நியு யார்க் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவருக்கும் இரு மந்திரிகள். ஒவ்வொரு மந்திரிக்கும் நான்கு அதிகாரிகள். ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு மனைவி. ஒவ்வொரு மனைவிக்கும் இரு மெய்காப்பாளர்கள்.
இந்த மாதிரி கூட்டிப் பார்த்து, அதற்கான கார்பன் கழிவுகளை இந்தியாவிடம் விற்று விட்டது ஐ.நா.
லிபியாவின் அரசர் கடாஃபி மாதிரி கூடாரம் அடித்தவர்களின் சிக்கன நடவடிக்கையை எடுத்துக் கொண்டதா என்று தெரியவில்லை.
மொத்தமாக வெளியாகும் நச்சுப் பொருள் எவ்வளவு என்று கணக்குப் போட்டார்கள். அவ்வளவுக்கும் ஈடுகட்டும் விதமாக, பயோகாஸ் முறையில் அடுப்புகள் வாங்கிக் கொடுத்து விட்டார்கள். மரங்களை வெட்டி, விறகடுப்பில் சமைக்க வேண்டாம். சிக்கனத்திற்கு சிக்கனம். புகை, கரியமில வாயு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு.
காலங்காலமாக மாட்டுச் சாணத்திலிருந்து வறட்டி, காலைக் கடனாக கழிகளை உரமாக்குவது போன்றவற்றின் பரிணாம மற்றும் அறிவியல் வளர்ச்சி.
2025க்குள் ஒன்பது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாபெரும் தொழில்துறையாக பயோ கேஸ் அமையும். மற்றொரு மாற்று எரிசக்தியான சூரியக்கதிர்கள் மூலம் அமைந்த மின்கலத்துறையில் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள்.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் இந்த வளர்ச்சி அமைந்திருக்கும். அங்கிருக்கும் மைக்ரோ க்ரெடிட் நிறுவனங்களுக்கும், அதன் மூலம் குறுங்கடன் பெறுபவர்களுக்கும் சென்றடைந்து, பெண்களுக்கும் தன்னிறைவு தரும் திட்டம்.
India Together: Compact biogas plant making waves – 10 July 2006: “Biogas plants are not new, but their size, relative unwieldyness and reliance on large quantities of cattle dung have held back their potential attractiveness for the domestic cooking sector. That may change soon, thanks to the ingenuity of Dr Anand Karve. Vinita Deshmukh reports about Karve’s new award-winning compact plant.”