முந்தைய பதிவுகள்:
1. Unnai Pol Oruvan: Music Reviews: Twitter, Tamil Blogs
2. உன்னைப் போல் ஒருவன் :: முன்னோட்டம்
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்த விமர்சனம் எழுதுவதற்கு மூன்று காரணம்.
- வாரிசு: இரா முருகனோ மனுஷ்யபுத்திரனோ இன்னாரின் மகன் என்பதால் வசனம் எழுதும் வாய்ப்பையோ, தயாரிப்பாளரின் வழித்தோன்றல் என்பதால் பாடலை கவிதையாக்கும் இடத்தையோ அடையவில்லை. கார்த்திக்ராஜாவால் கூட முடியலியே!
- சுரேஷ் கண்ணன்: ரகுமானின் ‘ரோஜா’ திரைப்படத்தின் பாடல்களை கேட்ட போது எனக்குள் எழுந்த அதே மாதிரியான ஒரு புத்துணர்ச்சியான இசையைக் கேட்கும் உணர்வு இந்த ஆல்பத்தைக் கேட்கும் போது எனக்குள் எழுந்தது. அப்படியா 😯
- முதன்முதலாக: ஹிந்தியில் நாயகி வேடம். தமிழ் & தெலுங்கில் இசையமைப்பாளர் என்று அறிமுகமாகும் சுருதிஹாசனுக்கு வரவேற்பு.
Recession காரணமா என்று தெரியல. இந்த ஆல்பம் மனநிலையை சோகமுறச் செய்கிறது. இளையராஜாவிற்குப் பிறகு ஏ ஆர் ரெஹ்மானின் மலரோடு மலரின்று மரித்தாளும் (அல்லது மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாளும் போது – மணி ரத்னத்தின் மும்பை) போன்றவற்றிற்கு பிறகு நெகிழ்ச்சியுற மட்டும் வைக்காமல், யூத்துக்குப் பிடித்த புத்திசையாக வந்திருக்கிறது.
டைட்டில் சாங்கான ‘உன்னைப் போல் ஒருவன்’ எல்லாம் இசைத்தட்டு கொண்டு நல்ல 50,000 டாலர் ஸ்பீக்கர்+ஆம்ப் சங்கதி கொண்ட சவுண்ட்ப்ரூஃப் வீட்டில் கேட்கவேண்டும். கணினியில் மின்னஞ்சலுக்கு ஒரு காது, காதில் கேட்கும் கமல் குரலுக்கு இன்னொரு காது என்பது ஆகாது. ஆனால், அப்படிக் கேட்டால் போரடிக்கிறது.
சோறு தின்ற பிறகு ஊக்கமுற கடைசியாக ரிப்பீட்டில் ஓட்டியது ‘ஜெகடம் ஜெகடம் ஜெகடம் ஜெகட ஜெகட ஜெகட ஜெகடம்’. நாடோடிகள் அலுத்த பிறகு கமலின் ‘அல்லா ஜானே’ இப்போது கை கொடுக்கிறார். அதுவும் பாடலின் இறுதில் ஓலமிட்டு அழும் குரல்களின் சங்கமிப்பில், புரியாத ஸ்பெக்கை நாலு முறை திட்டிக் கொண்டே, உரத்தப் படித்தால் மண்டையில் ஏறுவது சிறப்பம்சம். மொத்தத்தில் எது #1 என்றால், அது கமல்தான்.
கம்பேர் செய்தே பழக்கமாகியதால் பெண்குரலில் வரும் அல்லா ஜானே காதிலேயே விழமாட்டேங்குது. இருவத்திமூன்று முறை முழுக்க பாடியதாக playcount சொன்னாலும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் பழுதோ என்று யோசிக்க வைக்கிறது.
வரிகள் எல்லாம் தனித்து, துருத்தி நிற்காதவாறு இசை மேலோங்கியிருப்பது மேற்கத்திய நாகரிகம். சொல்லப் போனால், பாதி (என்பது பொய்; அனைத்து ஆங்கில) பாப் பாடல்களிலும் கவிதையை இதுகாறும் நான் கவனித்ததில்லை. ஷநாயா ட்வெயினோலானிஸ் மாரிசட்டோ… என்ன மாதிரி ஆடை போட்டிருக்கிறார், ஒரே வரியே மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப வருகிறதா என்பது மட்டுமே என் லட்சியம். இந்த டெக்னிக்கை ஓரளவு விஜய் ஆன்டனி செய்து வருகிறார். அவர் வாழ்க.
மும்பை (இல்லே… பாம்பே) ஜெயஸ்ரீ அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி பாடுகிறார் என்று குற்றம் சொல்லும் தொனியில் சில ‘உன்னைப் போல் ஒருவன்’ திரையிசை விமர்சனம் படித்தேன். அதே போல், கமல்ஹாஸன், நாகூர் ஹனீஃபா மாதிரி தேவையின்றி குரல் மாற்றிப் பாடியிருக்கிறார் என்று ‘ஏன் இந்த வீண் ஆசை? எவ்வாறு இன்னொரு ஸ்டைலில் போடலாம்?’ என்னும் வேறு இசை ரிவ்யூக்களும் கண்ணில் பட்டது.
ஒரே மாதிரி பாடுவது ரொம்ப சிரமம். இப்போ சம்பந்தமில்லாம உவமை போட்டுக்கலாம். டென்டுல்கர் அதே சென்சுரியத்தான் ஒவ்வொரு தடவையும் அடிக்கிறார். அதற்காக, போன சதம் மாதிரியே எதற்கு மீண்டும் சதம்? இந்த வாட்டி திலீப் தோஷி மாதிரி சூனியம் போடுங்க என்றா சொல்ல முடியும்?
டூயட் இல்லை. ஆதவனின் ‘டமக்கு தமக்கு’, நினைத்தாலே இனிக்கும் ‘அல்லா’, கண்டேன் காதலை ‘சுத்துது சுத்துது’ போன்ற குத்து கூட மிஸ்ஸிங். ஆனால், ராப் உண்டு. சுருதியை ‘வானம் எல்லை என்பது இன்று இல்லை’ இனிமையை நினைத்து மகிழ, ப்ளேஸி நடுவே புகுந்து கலாய்க்கிறார்.
அந்தக் காலத்தில் பாடல் திருடு போயிடுமோ என்று பயந்து குருகுக போன்ற முத்திரைப் பெயர்களை உள்ளே போட்டு பாடல் எழுதினார்கள். ப்லேசியும் அந்தப் பாரம்பரியத்தில் நாலு வார்த்தையில் மூன்று வார்த்தை தன் பெயர்ச்சொல்லை ஏற்ற இறக்கமில்லாமல் உச்சரித்து நிலை நாட்டுகிறார். வேண்டிய பாடலை மட்டும் தரவிறக்குவது வசதி. வேண்டிய பாட்டில் வேண்டாத இடங்களை எடிட் செய்யும் வசதியும் நாளடைவில் சுளுவானால் அதை விட வசதி.
ப்ளேசியைக் கேட்பதற்கு மனத்தடை உள்ளவர்களுக்காக பம்பாய் ஜெயஸ்ரீயுடன் கமல். ‘நிலை வருமா’ ரொம்ப நாளுக்கு டிஸ்டர்ப் செய்யக்கூடியது. எது என்றும் இனியது என்றால், அது இதுதான்.
சாரு நிவேதிதாவின் ‘ராஸ லீலா‘வை விமர்சிக்க வேண்டுமென்றால் கூட காசு கொடுத்து புத்தகம் வாங்கித்தான் குப்பை என்றோ, புரியலை பட்டயமோ தரவேண்டும் என்பது திண்ணம். அப்படியிருக்க ஓரளவு மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய பாடல் கொடுத்தவருக்கு பாராட்டுகள் மட்டுமே சொல்லி செல்ல வேண்டும்.
தொடர்புடைய பதிவு: Song of the Day: allah jaanE from unnai pol oruvan.
பாடல்கள் சுமார்தான். ரோஜாவின் மேஜிக் புது பாணியை உருவாக்கிய அளவு இது செய்யாது என்பது நிச்சயம்.
Charu Nivethitha: கண்ணதாசன் : வைரமுத்து : மனுஷ்ய புத்திரன் : என்.ஸி.வசந்த கோகிலம் : ஷ்ருதி ஹாசன்
‘கமல் தீர்க்கதரிசி. இல்லையென்றால், அவரது குழனதைக்கு ஸ்ருதி என்று அப்போதே பெயர் வைத்திருப்பாரா?’ Literal quote from Gowthami in Vikadan #Film
http://www.vikatan.com/av/2009/sep/16092009/av0210.asp
பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot