சன் டிவியில் செய்திகள். சர்வக்ஞர் சிலை திறப்பு விழா. மகள் படித்த புத்தகம் குறித்தும் குமான் குறித்தும் விசாரித்துக் கொண்டே அரைக் கண்ணில் தொலைக்காட்சியிலும் பார்வை. சட்டென்று ‘சூப்பர் ஸ்டார்’ மின்னி மறைகிறார்.
உணர்ச்சி வேகத்தில், ‘அது யாரு தெரியுதா?’ என்று மகளையும் பார்த்தாலே பரவசமாக்குபவரைக் கேட்கிறேன்.
அரை நம்பிக்கையுடன் ‘ரஜினியா?’
‘ஆமாண்டி… ஆமா!’
‘எங்கே?’
DVR இயங்கத் துவங்குகிறது. திரும்ப அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்கிறேன்:
‘இவர்தானே?’ சந்தேகாஸ்பதமாக சுட்டுகிறாள்.
ரஜினிகாந்த் என்று அவள் நினைத்தவர்: (மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன்)
சன் நியூசில் ஏனோ கமல் கலந்துகொண்டதைக் காட்டவில்லை.
பொன்விழா ஆண்டிலும் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க:
சர்வக்ஞர்
1. தினமணி :: சர்வக்ஞர் கூறும் அறம் « தமிழ்ச்செல்வி
2. தமிழ்ஹிந்து :: த்ரிபதி சர்வக்ஞர் & வள்ளுவர் « ஜடாயு » வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: “”
3. புகைப்படங்கள்: என்வழி
கலக்கலான பரீட்சார்த்த பதிவு! 🙂 அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு யார் யாரையோ நினைச்சிட்டிருந்தா கடைசியில் ஜெகத்ரட்சகனா!! :-))
u only a real hero. i love kamal