இதற்குப் பெயர் சீமான் ஜோக்காம்.
எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த குறிப்புகளை இயக்குநர் சீமானின் நகைச்சுவையைக் கொண்டு துவங்க வேண்டாம்தான். இருந்தாலும் எங்கேயாவது ஆரம்பிக்க வேண்டுமே!
இன்னொன்றும் இருக்கிறது. ஜெமோ சொன்னதில், என் மனதில் என்ன ஏறி நிலைத்து நிற்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது இப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஜெமோவிற்கு ஆளை எடைபோட்டு எவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் எனலாம்.
ஏதோ ஒன்று… சங்கதிக்குப் போயிடலாம்.
இது இஞ்சினீயரிங் முடித்துவிட்டு மணிரத்னத்திற்கு அசிஸ்டென்ட் டைரக்டராக போக விரும்பியவனின் கதை. விதி விளையாட, இராம நாராயணனின் உதவி இயக்குநராகிறான்.
பாம்பு சேஸ்.
ஜிகுஜிகுவென்ற பச்சை சட்டைக்காரனை பாம்பு துரத்தோ துரத்தென்று ஓட்டுகிறது. புல் தடுக்கி சகதியில் விழுந்து விடுகிறான். இது திரைக்கதையில் இல்லை. அம்மன் கோவில் வரை சென்றடைய வேண்டும்.
சட்டை மாற்ற அனுப்பி வைக்கிறார் நெறியாளுநர்.
பார்த்தால், இன்னொரு பச்சை சட்டையைக் காணோம். க்ரூப் டான்சுக்கு வாங்கிய மஞ்சள் இராமராஜன் மட்டுமே நிறைய இருக்கிறது. காஸ்ட்யூம்காரருக்கு இயக்குநர் டெக்னிக் தெரியும். பச்சைக்கு பதிலாக மஞ்சள் போட்டு அனுப்பிவிடுகிறார்.
நம்ம அசிஸ்டென்ட் மணிக்கு இராவணன் ஆக வேண்டியவர். விடுவாரா! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா! சுலேகா!! ஷிமோகா!!!’ என்று கத்தி முறையிடுகிறார்.
இராமநாராயணன் அவரை ஆற்றுப்படுத்தி, கடகடவென்று காட்சியை சுட்டு முடிக்கிறார்.
“என்னங்க இது… இப்படி பண்ணிட்டீங்க? ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே! திரும்ப இன்னொரு நாள் ஷூட்டிங் செஞ்சரணும்”
“அதெல்லாம் டப்பிங்கில பார்த்துப்பேன்”. இது இயக்குநர் சொன்னதாக சீமான் சகபாடிகளிடம் சொல்வது.
வெறுத்துப் போன அசிஸ்டென்ட் தன் வேலையைத் துறந்து இமயமலைக்கு செல்லும் வழியில் அக்ஷர்தாமில் ஐமேக்ஸ் பார்த்துவிட்டு, பட ரிலீஸன்று சென்னை திரும்பி விடுகிறார்.
அந்தக் காட்சியில் டைரக்டர் எப்படி சமாளித்தார் என்னும் ஆவல். பார்க்கிறார். அந்த சேஸிங் சீனும் வருகிறது.
பச்சை சட்டை. துரத்தல்.
“டேய்… நீ சட்டை மாத்தினேனா எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறியா!? பச்சசட்டக்காரந்தானே நீயு!” பாம்பு பேசிவிட்டது. மஞ்சள் சட்டை துரத்தல் தொடர்கிறது.
இதுதான் சீமானின் ராமநாராயணன் ஜோக் என்று ஜெயமோகனால் சொல்லப்பட்டதின் பாபாக்கம்.
பிங்குபாக்: ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள் « Snap Judgment
பாபாஜி, இப்படி உதிரி உதிரியாக எழுதாமல் ஒரு புத்தகமாக எழுதிவிடலாமே, புகைப்படங்களையும் போட்டால் பக்கங்களை நிரப்பிவிடலாம் :). சாரு
வந்தால் அவருடன் ஊர்சுற்றி
இன்னொரு புத்தகம் எழுதிவிடுங்கள் :).
வெளியிட இருக்கவே இருக்கிறது உயிர்மை அல்லது தமிழினி :).
ஐ எம் நாட் காட், 🙂
‘என் இலக்கிய நண்பர்கள்’ என்று போடலாமா? உங்களை சந்திப்பதுதான் பாக்கி 😀
ஜெமோவிற்கு மட்டும் என்றால் ‘பதிவின் பாதையில்…’ தலைப்பு பிடித்திருக்கிறதா 😛
ஜெ.மோ – வை கூப்பிட என்ன கலர் சட்டை போட்டுப் போனிங்க????
ச.ரா.கு.,
நல்ல பளிச்சுன்னு தெரியட்டும்னு பேஸ்புக்கில் போட்ட சிவப்பு சொக்கா