
President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.
- ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேர்தல் நடக்கப் போகிறது.
- தாலிபானிடமிருந்து விடுதலையாகி ஏழு வருடங்கள் கழிந்துவிட்டது; 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கரைந்துவிட்டது.
- நான்கு டஜன் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். இரு பெண்கள், முன்னாள் கேபினட் அமைச்சர்கள், புத்தம்புதிய அமெரிக்க அடிவருடிகள், கம்யூனிஸ்ட்கள், நமது ஊர் சகுந்தலா தேவி போல் குழந்தை ஜீனியஸ் எல்லாரும் நிற்கிறார்கள்.
- Simple majority போதாது. 20 சதவிகிதம் வாக்குப் பெற்றுவிட்டு, “தனிப் பெரும்பான்மை எமக்கே! ஆட்சி நமதே!” என்று முழங்க முடியாது. குறைந்தபட்சம் 50% வாக்குகளுக்கு மேல் பெற்றால்தான் வெற்றி. இல்லையென்றால், முதல் இரண்டு இடங்களை வென்ரவர்களுக்குள், மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு நடக்கும்.
- அங்கும் ஜாதி/இன வாரியாகத்தான் வோட்டு விழுகிறது. பெரும்பான்மை சமூகமான பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர் அமீது கர்சாய்.
- பதினாறு மில்லியன் பேர் ஏழாயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப் போகிறார்கள்.
- வாக்காளருக்கான அடையாள அட்டைப் பதிவை தாலிபான்கள் தடுக்கவில்லை. கடந்த 2004, 2005 தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் தாலிபானால், தேர்தலுக்கு பிரச்சினை வராது என்கிறார்கள்.
- எனினும், ஒரு லட்சம் போலீஸ், அதன் மேல் இன்னொரு லட்சம் இராணுவ வீரர்கள், அவர்களின் பாதுகாப்புக்கு மேலும் இன்னொரு லட்சம் வெளிநாட்டு படைவீரர்கள் போட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்கர்கள்.
வேட்பாளர்கள்
- ஹமீத் கார்சாய்க்கு துணையாக இரு உதவி ஜனாதிபதிகள் உறுதுணையாக களத்தில் நிற்கிறார்கள்.
- மில்லியன் கணக்கில் ரூபாய் நோட்டை அச்சிட்டு சொந்தப் புழக்கத்திற்கு பதுக்கிக் கொண்டதால், மந்திரிசபையை விட்டு கல்தா கொடுக்கப்பட்ட மொஹம்மது காசிம் Mohammed Qasim Fahim.
- முன்னாள் முஜாஹிதீன் முகமது கரீம் Muhammad Karim Khalili
- அமீது கர்சாயிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அப்துல்லா, அவரிடமிருந்து விலகி சரியான போட்டியாக விளங்குகிறார். எனினும், கர்சாயை தோற்கடிப்பது துர்லபம்.
- முன்னாள் நிதியமைச்சர் அஷ்ரஃப் கனி (Ashraf Ghani)யும் போட்டியிடுகிறார்.
- தற்போதைக்கு ரமஜான் பஷர்தோஸ்த் (Ramazan Bashardost) மக்கள் மனதை ஒவ்வொரு வோட்டாக சேமித்து, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
- தென் சென்னை சிட்டி பாபு மாதிரி மெத்த படித்தவர்.
- முனைவர்.
- பிரான்சில் குப்பை கொட்டியவர்.
- அல் க்வெய்தாவை வீழ்த்திய அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாக இருந்துகொண்டு, அரசை மொத்தமாக குத்தகை எடுத்து, லஞ்சத்தை அனாயசமாக நிறைவேற்றும் கர்ஸாயின் ஊழல் ராஜாங்கத்தை ஒழிக்கிறேன் என்கிறார்.
- காந்தியை மேற்கோள் காட்டுகிறார்.
- புத்தகப் புழு.
- இணைய தளம் வைத்திருக்கிறார்.
- 15% சதவிகித மக்களைக் கொண்ட ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்.
- முன்னாள் மந்திரிசபையில், திட்டத்துறை அமைச்சராக இருந்தபோது தனது சம்பளத்தை தானமாக, தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கியவர்.
- கறை படிந்த தொண்டு நிறுவனங்களைத் தடை செய்கிறேன் என்று 2000க்கும் மேற்பட்ட ஊழல் என்.ஜி.ஓ.க்களை தடை செய்து, லஞ்ச ஒழிப்பில் அக்கறை காட்டியதால், அமைச்சரவையை விட்டு நீக்கப்பட்டவர்.
அமெரிக்கா
- தன்னுடைய எதிரிகளை ஹமீது கர்சாய் போட்டுத் தள்ளிவிட்டு, “அமெரிக்கா குண்டு போட்டுச்சு! அதான் செத்துட்டாங்க!” என்று திருட்டுப் பட்டம் கட்டிவிட்டதாக அமெரிக்கா நினைக்கிறது.
- அமெரிக்காவிற்கு புதிய முகம் தேவை. ஏழாண்டுகளாக கர்சாயைப் பார்த்து ஆப்கானிஸ்தர்களுக்கும் அலுத்துவிட்டது.
- தொடரும் தாக்குதல்களில், சில அப்பாவிகளும், பல உள்ளூர்வாசிகளும் துர்மரணம் அடைந்த கோபத்தில், தாலிபான் மீண்டும் எழுச்சியடைவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சமயத்தில், பழைய பெருச்சாளிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சாமர்த்தியசாலி மீது அச்சம் கலந்த பயம் எழுந்துள்ளது.
அசைக்க முடியாத உப ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு + பணபலம் + பெரும்பான்மை சமூகத்தின் சின்னம் + கடைசி நிமிட அரசியல் பேர வித்தகர் என்பன எல்லாவற்றுக்கும் மேல் சர்வ அதிகாரமும் கொண்டவர் என்பதால் அடுத்த ஐந்தாண்டுக்கு கர்சாயைப் பொறுத்துக்கொள்ள அமெரிக்கா தயார். இந்தத் தேர்தல் அவருக்கு எச்சரிக்கை மணி மட்டுமே.
//20 சதவிகிதம் வாக்குப் பெற்றுவிட்டு, “தனிப் பெரும்பான்மை எமக்கே! ஆட்சி நமதே!” என்று முழங்க முடியாது//
nenggal soniavai thannay sonninggal :::)))
பிங்குபாக்: அமெரிக்க அரசியல் :: இடைத்தேர்தல் | Snap Judgment