முந்தைய பதிவு
- தமிழ் சிற்றிதழ்கள்
- என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்
இணையமெங்கும் சிறுபத்திரிகைகளின் துவக்கம், பல புத்தகங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஆங்காங்கே வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்த பதிவாக்கப்பட்ட கவனிக்கத்தக்க மாற்றம், சரித்திரம், வரலாறு என்று பல இடங்களில் கண்டைதையும், படித்ததையும் தொகுக்கும் முயற்சி. அவ்வப்போது சேர்க்கப்படும்.
மேற்கோள் முத்து
1. சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.
2. புதுமைப்பித்தன்: “நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”
3. க.நா.சு.: ‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’
தகவல், பின்னணி, வரலாறு
♦ எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.
♦ க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.
♦ சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .
♦ ந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .
♦ எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.
♦ க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.
பெயர்கள், பட்டியல்
- ஏப்ரல் 2004: பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.
- மே 2004: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.
- ஜூன் 2004: பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.
- கசடதபற
- கணையாழி
- மனிதன்
- சுபமங்களா
- சரஸ்வதி
- மணிக்கொடி
- சக்தி
- சாந்தி (தொ.மு.சி ரகுநாதன்)
- தாமரை(ப.ஜீவானந்தம்)
- சரஸ்வதி (விஜயபாஸ்கரன்)
கருத்து, வம்பு, கிசுகிசு
உசாத்துணை, இணையத்துக் கட்டுரைகள்
1. மரவண்டின் ரீங்காரம்: எழுத்து சிற்றிதழ்
2. ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் “எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை” என்ற கட்டுரையில் சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
3. ஆறாம் திணை – இலக்கியம் :: சிற்றிதழ் வரிசை
தொடர்புள்ள புத்தகங்கள்
1. தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்
2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்
3. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – ந. வானமாமலை
4. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்
5. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி
6. இலக்கிய முன்னோடி வரிசை – ஜெயமோகன்
7. இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) – அசோகமித்திரன்
8. இந்திய இலக்கியம் – க.நா.சு.
9. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) – பெருமாள்முருகன்
ரொம்ப நல்ல விவரங்கள். timeglider.com போன்ற இணைய கால இயந்திரத்தில் இந்த விவரங்களை ஏற்ற முடியுமா?
நான் தென்னிந்திய இசை/தமிழ் வரலாற்றை இதன் மூலம் தொகுக்க முயற்சி செய்து வருகின்றேன்.(http://beyondwords.typepad.com/beyond-words/timeglider/)
இந்த விவரங்களை அங்கே தந்தால் வருங்கால சந்ததியினருக்கு உபயோகமாக இருக்கும் (கவுண்டர் வரியாக இருந்தாலும், சத்தியமா தமாஷ் பண்ணவில்லை). மேலும் விவரம் வேண்டுமானால் ஜெமோ, தமிழினி போன்றவர்களிடமிருந்து தொகுக்கலாம்.
முயற்சி செய்கிறீர்களா?
பிங்குபாக்: தயிர் வடை தரமணி | Snap Judgment
பிங்குபாக்: கனலி – சில எண்ணங்கள் | Snap Judgment