உயிரோசை: மாமிக்கு ஏன் மீசை? ஊன வகைமாதிரியின் அபத்தங்கள் – அபிலாஷ். ஆர்
ஓட்டிசம் (autism) எனும் மூளைச்சிதைவு (mental impairment) பிறவி நோயாளிகளில் மிகச் சிலர் சாவண்ட் (Savant) எனும்
- அதிநினைவுத்திறனுடன், கணிதத்திறனுடன் இருப்பர் (ஒருவர் ஐன்ஸ்டனின் சூத்திரத்தில் கணிதப்பிழை கண்டுபிடித்தார்).
- படித்த புத்தகத்தை ஒரு வார்த்தை விடாமல் அவர்களால் ஒப்பிக்க முடியும்.
- இந்த நாள் 2080-இல் என்ன கிழமை என்றால் நொடியில் சொல்வார்கள்.
ஹாலிவுட்டில் ஓட்டிச சாவண்டை (savant syndrome have autistic disorder) முக்கிய பாத்திரமாய் பயன்படுத்தின குறிப்பிடும்படியான ஆரம்ப கால படம் மழைமனிதன் (Rain Man). டஸ்டின் ஹாப்மேன் (Dustin Hoffman) தான் சாவண்டு.
ஒரு நாள் படிக்க புத்தகம் இல்லாமல் போக தொலைபேசி டைரக்டரியை உட்கார்ந்து படிக்கிறார். மறுநாள் உணவகப் பணிப்பெண்ணின் மார்புப் பட்டையில் பெயர் பார்த்து உடனே டஸ்டின் அவளது தொலைபேசி எண்ணை ஒப்பிக்க அவள் கலவரமாகிறாள்.
மற்றொரு விபரீதத் திறமையாக கலைந்த சீட்டுக்களை பார்த்தால் ஆட்டத்தின் போது யாரிடம் எதுவென துல்லியமாய் சொல்கிறார். இதை பயன்படுத்தி இவரது தம்பி (டாம் குறூஸ் – Tom Cruise) ஒரு ஆட்டத்தில் கோடிகள் சம்பாதிக்க ஒருங்கிணைப்பாளர்கள் குழம்புகிறார்கள்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் ஓட்டிச நபர்கள் பிரபலமானார்கள். ஆனால் ஊடகங்கள் சுவாரஸ்யத்துக்காக அனைத்து குறைவளர்ச்சி மூளைக்காரர்களையும் (Mental disorders aka psychiatric or psychosocial disability) (சாவண்டுகளாகக் காட்ட ஆரம்பித்தன.
1998-இல் வெளியான “பாதரசம் உயருது” (Mercury Rising) படத்தில் இரண்டு அதிகணினிகளால் கண்டுபிடிக்க முடியாத 2 பில்லியன் மதிப்பு ரகசிய சேதி சங்கேதக் குறியை சிமன் எனும் ஒரு 8 வயதுப் பையன் கண்டுபிடித்து விடுவான்.
எப்படி?
அவன் ஒரு சாவண்டு என்பதால். இந்த உண்மைக்கு புறம்பான விபரீத சித்தரிப்புகளால் இந்த குறைமூளை மனிதர்கள் பற்றி ஒரு மிகை எதிர்பார்ப்பு அமெரிக்காவில் உருவாகி உள்ளது.
ஸ்டுவார்ட் முரேய் எனும் ஒரு ஓட்டிச குழந்தையின் தகப்பன் சொல்கிறார்: “என் குழந்தையை பார்த்தால் எல்லோரும் கேட்பது ‘அவன் சாவண்டா’ என்றே. ‘இல்லை’ என்றால் முகம் சுளிக்கிறார்கள்.”
City Journal: Autism, Non-Hollywood Version – Stefan Kanfer
- அமெரிக்காவில் பிறக்கும் 150ல் குறைந்தது ஒரு குழந்தைக்கு — ஏதாவது ஒரு விதமான ஆட்டிசம் தாக்குகிறது.
- ‘ரெயின் மேன்’ திரைப்படம் என்பது மிகை நாடும் கலையின் உதாரணம் என்பதை நிஜ வாழ்வு சம்பவங்களை புத்தகமாக்கும் அனுபவப் பகிர்வு.
- பெற்றோரின் கவனிப்பு முழுக்க பாதிக்கப்பட்ட குழந்தையிடமே போவதால், சகோதரர்களிடையே உருவாகும் பிளவு; மன உளைச்சல் போன்ற ஆத்ம சிக்கல்களைப் பேசுகிறது.
புத்தகம்: Boy Alone: A Brother’s Memoir, by Karl Greenfeld (Harper, 368 pp., $25.99)
//நடுத்தர சம்பளத்துக்கு நாற்காலி தேய்க்கும் குமஸ்தாவாக அல்லது தோசை மாவுக்கடை வைத்திருப்பவராக இவர்கள் ஏன் வருவதில்லை? //
மின்சாரக்கனவில் நாசரின் கதாப்பாத்திரம் ஒரு நல்ல இயல்பான சித்தரிப்பு. மற்றபடி (தமிழில்) எதுவும் நினைவில்லை!
நானும் மூளையை கசக்கினேன். எதுவும் கிடைக்கவில்லை.
சொல்லப்போனால், 90களுக்கு முன்பு சாதாரணமான கதாபாத்திரம் என்று எவரையுமே சொல்லமுடியாது. ஒன்று ஏழை+நல்லவர் அல்லது கெட்டவர் என்றுதானே சித்தரிப்பு இருந்திருக்கும் 😐
From P.S. 176X, kids with autism get joyful launch – CNN.com:
“* Story Highlights
* P.S. 176X could be world’s largest largest school for kids with autism
* 560 students range in age from 3 to 21
* Size allows an extraordinary range of services: chorus, band, arts, job internships
* Best way to educate growing, diverse population of kids with autism is debate topic”
Claudia Wallis on Autism