இட்லி கிடைக்கும் என்றால்
இருபது வரியில் கவிதை…
கிட்னிபீஸ் கறியென்றால்
கால்பக்கம் சின்னக்கதை…
சிக்கன், மட்டன் பிரியாணியா?
சிக்கிவிடும் சிறுகதை…
சொக்க வைக்கும் விருந்தா?
நிற்க வைப்பேன் காவியம்…
நூறு ரூபாய் நோட்டுக்கு
ஆறுவகைப் பாட்டுண்டு…
ஊறுகாயும் குவார்ட்டருமென்றால்
ஊடுகட்டி அடிப்பேன் இலக்கியம்…
பெட்டி நிறைய ‘கட்டா’?
தொட்டு விடுவேன் எழுத்துச் சிகரம்!
சட்டென்று சொல்லி விடுங்கள்
சரக்கு எது வேண்டுமென்று!
எட்டுத்திக்கும் எகிறிவரும்
என்னறிவுப் பெட்டகத்தை
துட்டுகுவித்து வாய்கவரும்
தரகர்களுக்கு என்வணக்கம்.
பதவிசான குளிர்காரில்
பவனிவரும் பிரமுகருக்கு
தொட்டுவிடும் கால்வணக்கம்!
வெளியான இதழ்: கல்வெட்டு பேசுகிறது
அக்டோபர் – 2008
ஆசிரியர்: சொர்ணபாரதி
அருமை.