மே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
- இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288
- அம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி
- மீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லா – தமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு
- அஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி
- ரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா
- உண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287
- ஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி
- எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104
- என் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு
- தமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80
- கூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
- டேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி
- வெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
- கு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238
- சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216
- கிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75
- கங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-
- வட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300
- ஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160
- வார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438
- நான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152
- மிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223
- பேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-
- சொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200
- பாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208
- மேகமூட்டம்: நிஜந்தன் – உயிர்மை; Rs:90.00
- மரம்: ஜீ. முருகன் – உயிர்மை; Rs:140.00
- கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை; Rs:120.00
- பல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி – உயிர்மை; Rs: 100.00
- வெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் – உயிர்மை; Rs: 120.00
- ஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160
- சாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150
- பள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225
- சில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225
- வடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00
- வாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40
- சாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175
- ஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150
- பொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150
- வேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90
- புனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90
- நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50
- போரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175
- அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75
- உபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175
- ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு: ரூ.100
- ஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40
பட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…
நாலே நாலு J-Mo புத்தகம்தானா? ஔ டிசப்பாயிண்டிங்.
சாத்தான் 🙂
முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்.
திருலோக சீதாராம் எழுதிய “இலக்கியப் படகு”. சீரிய சிந்தனை, பொருள் பொதிந்த சொற்கள், குங்குமச் சிமிழுக்குள் பொதிந்த இலக்கியப் பெட்டகம்.
வெறும் கோஷதாரிகளுக்கு மத்தியில்
ஓசைப்படாமல் மேலோங்கி நிற்கும்
சிந்தனை விருந்து.
நான் அன்று வாங்கியது கவிஞன் பதிப்பகத்தில். இன்று கிடைக்கிறதா இல்லயா என்பது தெரியவில்லை.
தீபனின் “அரும்பிய முல்லை”யையும் விட்டுவிடாதீர்கள்.
நன்று சுந்தர கிருஷ்ணமூர்த்தி. இரண்டையும் வாங்கப் பார்க்கிறேன்
ethu ellam padikava ellai vikavaa….:)
maybe u can try to read malaysian writers boos…:)))
ethu ellam padikava ellai vikavaa….:)
maybe u can try to read malaysian writers book…:)))
சின்டோக், இந்தப் புத்தகமெல்லாம் விலை போகுமா 😉
மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களில் உங்க பரிந்துரை என்ன?
வணக்கம்
பிரபஞ்சனின்
வானம் வசப்படும் வாங்கவும்
நன்றி தமிழண்ணன். வெகு காலம் முன்பு படிக்க எடுத்து, பாதியிலேயே விட்டு வைத்திருக்கிறேன். நல்ல நாவல். நினைவூட்டலுக்கு மீண்டும் நன்றிகள்.
உங்கள் லிஸ்டில் அம்மன் நெசவு, பொய்த்தேவு, சாயாவனம், ஏழாம் உலகம் ஆகியவற்றை சிபாரிசு செய்கிறேன்.
பொய்த்தேவு – http://koottanchoru.wordpress.com/2008/09/14/பொய்த்தேவு/
ஏழாம் உலகம் – http://koottanchoru.wordpress.com/2009/02/18/ஏழாம்-உலகம்-ஜெயமோகன்/
நீங்கள் படித்திராவிட்டால் இவற்றை சிபாரிசு செய்கிறேன் – ஆழி சூழ் உலகு (ஜோ டி குருஸ்), மானசரோவர், கரைந்த நிழல்கள், தண்ணீர் (அசோகமித்திரன்), புயலிலே ஒரு தோணி (ப. சிங்காரம்), உல்லாச வேளை (எஸ்.வி.வி), துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், ஜஸ்டிஸ் ஜகன்னாதன் (தேவன்), சாத்திரம் சொன்னதில்லை, யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, முகம்மத் பின் துக்ளக் (சோ), பர்வா, தாண்டு (எஸ்.எல். பைரப்பா), மகாகவி பாரதியார் (வ.ரா.), முத்துலிங்கம் கதைகள், என் பெயர் ராமசேஷன் (ஆதவன்), சித்திரப் பாவை (அகிலன்), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் (அம்பை), வன்மம் (பாமா), நாளை மற்றொரு நாளே (ஜி. நாகராஜன்), சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் (ஜெயகாந்தன்), விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், காடு (ஜெயமோகன்), புத்ர, பாற்கடல் (லா.ச.ரா.), எம்.வி. வெங்கட்ராம் கதைகள், காலவெளி (விட்டல் ராவ்), ஒளி விலகல் (யுவன் சந்திரசேகர்), நிழல் முற்றம் (பெருமாள் முருகன்), புதுமைப்பித்தன் கதைகள் (அ. இரா. வெங்கடாசலபதி தொகுத்தது), உப பாண்டவம், நெடுங்குருதி (எஸ். ராமகிருஷ்ணன்), வாடிவாசல் (சி.சு. செல்லப்பா), ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், சுந்தர ராமசாமி கதைகள் (சுந்தர ராமசாமி), இந்த நூற்றாண்டு சிறுகதைகள் ஆறு பகுதிகள் (விட்டல் ராவ், அழகிய சிங்கர் தொகுத்தது), புத்தம் வீடு (ஹெப்சிபா ஜேசுதாசன்), புலி நகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்), வெக்கை (பூமணி)
பெரிய லிஸ்ட் கொடுத்துவிட்டேன்!
ஆர்வி, தங்கள் லிஸ்ட் தூள்!
நிறைய முழுக்கவே வாசித்திருக்கிறேன். சிலதை புரட்டியாவது இருக்கிறேன்.
புத்ர, பாற்கடல் (லா.ச.ரா.) மற்றும் விஷ்ணுபுரம் – அணுக முடியுமா என்னும் அச்சம். வி.பு இப்போதைக்கு எடுத்து வாசிக்கும் திட்டமில்லை. லாசரா – எடுக்கிறேன்.
விடுபட்டதால் சேர்த்துக் கொண்டவை கீழே:
1. உல்லாச வேளை (எஸ்.வி.வி)
2. பர்வா, தாண்டு (எஸ்.எல். பைரப்பா)
3. வெக்கை (பூமணி)
4. காலவெளி (விட்டல் ராவ்),
5. ஒளி விலகல் (யுவன் சந்திரசேகர்)
6. புத்தம் வீடு (ஹெப்சிபா ஜேசுதாசன்)
நன்றி
இன்னொரு லிஸ்ட் வரப்போவுது 🙂
இவை எல்லாம் நான் படித்தவை. ஞாபகம் வந்தவற்றை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். :-)) பொன்னியின் செல்வனை மறந்துவிட்டேன். 🙂 இவர்களைத் தவிர கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் (கோபல்ல கிராமம், பல சிறுகதைகள்), கு.ப.ரா. ஆகியவையும் இப்போது ஞாபகம் வருகின்றன. இந்திரா பார்த்தசாரதி எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை – ஆனால் கிருஷ்ணா கிருஷ்ணா என்ற நாடகம் நன்றாக இருந்தது. புத்ர, பாற்கடல் இரண்டும் படிக்க சுலபமானவை. எனக்கே புரிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் எல்லாம் வாங்கி நாலைந்து வருஷம் கழித்துத்தான் படிக்க தைரியம் வந்தது. ஆனால் மிகவும் நன்றாக இருந்தன. பின் தொடரும் நிழலின் குரல்தான் எனக்கு மிகவும் பிடித்த ஜெயமோகன் நாவல்.
பர்வா, தாண்டு இரண்டும் கன்னடத்தில் எழுத்தப்பட்டவை. பாவண்ணன் பர்வாவை மொழிபெயர்த்திருக்கிறார்.
உங்கள் லிஸ்டில் எனக்கும் படிக்க நிறைய இருக்கின்றன. அஞ்சலை, கூளமாதாரி, சுந்தர ராமசாமி: நினைவின் நதியில், கிருஷ்ணப் பருந்து, பல நேரங்களில் பல மனிதர்கள், ஏறுவெயில், பள்ளிகொண்டபுரம், சாய்வு நாற்காலி, வேள்வித்தீ, புனலும் மணலும் மாதிரி. பல நான் கேள்விப்பட்டதே இல்லை. ரப்பர் எனக்கு சுமார்தான். கடலோர கிராமத்தின் கதை நன்றாக இருந்தது, ஆனால் சூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
படித்துவிட்டு பிடித்திருக்கிறதா இல்லையா என்று மறக்காமல் எழுதுங்கள்!
கு.ப.ரா. , கு. அழகிரிசாமி வாசித்தது இல்லை. எனக்கு இந்திரா பார்த்தசாரதி மிகவும் பிடிக்கும். அவரின் பெரும்பான்மையான நாவல்களை என்னுடைய நடுத்தர வர்க்க தடுமாற்றங்களுடன் ஒத்துப் போகும்.
பின் தொடரும் நிழலின் குரல் & காடு – இரண்டுமே என்னைக் கவர்ந்த நடை + கரு.
—படித்துவிட்டு பிடித்திருக்கிறதா இல்லையா—
பிடிக்காவிட்டால் நிச்சயம் புலம்பிவிடுவேன் 🙂
சமீபத்தில் முடித்தது — யுவன் சந்திரசேகர்: குள்ளச்சித்தன் சரித்திரம்: வாசகனை அன்னியமாக்கும் மேதாவிலாசம் வெளிப்படுகிறது; உவமைக் கவிஞரின் மேலோட்டமான சிறுகதை தொகுப்பு.
BB,
I’ve two words for you – “Spring Cleaning”.
Follow these steps and let me know if it answers your question:
1. Go to the room where you have your books. Or if your books are spread all around the house, bring them to one room. Bring all the books, Tamil, English, even magazines are OK.
2. Take the books one by one and just try to sort them based on these questions:
2a. Have I read this book?
2b. Will i read this book in the near future (this year)?
2c. Will this read book 2-3 years from now?
2d. Are there some books that i’ll never read?
3. Based on these questions you may have 4 groups of books – Group 1 – Books you’ve read, Group 2 – Books you’ll read this year, Group 3 – Books you will read 2-3 years from now, Group 4 – Books you’ll never read.
4. Pack Group 4 in a box and donate them to your local library or throw them in recycle bin.
5. Pick a shelf and arrange Group 3 to Group 1 in reverse order – Group 3 being closer to you and Group 1 being farther away from you.
Now just go and have a beer and relax.
After this come back and tell how you feel 🙂
நம்பமாட்டே மாது….
இந்தியா போவதற்கு முன் என்னென்ன பொஸ்தவம் இருக்குன்னு மனசுக்குள் சரிபார்க்க, I had to go and rearrange them by publisher/genre/read/topics in a manner, I could pick them easily.
Went I went thru the whole exercise, I was amazed at the ‘to be read’ list!
Useful suggestions…. Will do it, once I am back with the new saddle.
No english books, no english fiction from india?
bb (original),
one thing at a time. I tried a few like Chetan Bhagat, Anurag Mathur; didn’t impress (rather interest me) that much.
need to graduate to Amitav Ghosh வகையறா!?
Need not Publish
send your id ; i have lists of 100 best books recommended JMo; PaRa; SRa; EraMurugan; GopalRajaram; யெஸ். பா