எங்கேயோ, எப்பொழுதோ, ஃப்ரீயாக கிடைப்பதால் பினாயில் குடிக்கும் தமிழன் ஆகாமல், இரப்பவருக்கு இடவேண்டிய தட்சிணையாக புத்தகத்தை வாங்கிவிட வேண்டும் என்று வாசித்த நினைவு. கருத்தை சொன்னவர் இவராக இருக்கலாம்.
சாருவின் எழுத்து இலவசமாகக் கிடைக்கிறது. அதற்காகவே சாருநிவேதிதாவின் ராஸலீலா வாங்கினேன்.
சாருவின் புதிய புத்தகங்கள் குறித்த அறிவிப்பு பார்த்தவுடன், படித்து முடித்த ராஸ லீலா பற்றி, சமீபத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டு கொணர்ந்த இரண்டு வரி:
பாத்ரூமில் வைத்திருந்த சாருவின் ‘ராஸ லீலா’, சுத்தம் செய்ய பேப்பர் கிழிக்கும் அவசரத்தில் தவறுதலாக குப்பைத் தொட்டியில் விழுந்துவிட்டது. – Mar 5
இவ்வளவு சிறிய விமர்சனம் ஆகாது என்றால், கொஞ்சம் பெரிய அலசல்: வார்த்தைகளின் விளிம்பில்: Rasa Leela review
நானூறு ரூபாயை சாருவிற்கு தர விருப்பமிருந்தால், நேரடியாக டிடி எடுத்து அனுப்பி விடவும். ராச லீலாவிற்கு செலவழிப்பதை புத்தகம் வாயிலாக ஆசிரியர் வார்த்தையில் சொல்வதானால்: (பக்கம் 286)
‘நான் இப்போது ஒரு நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கிறேன்.’
பிங்குபாக்: ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்: புத்தக விமர்சனம் « Snap Judgment
//நான் இப்போது ஒரு நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கிறேன்//
யாரய்யா நம்பிக் கொண்டிருக்கிறார்கள் துரோகம் செய்வதற்கு? ஜெயமோகனை அவர் திட்டிக் கொண்டிருக்கும் வரை கூட்டம் கூடும். அம்புட்டுத்தான் 🙂
‘மண்வாசனை’ படத்தில் ரேவதியும் பாண்டியனும் காசு கொடுத்து திட்ட சொல்வாங்களே! அந்த மாதிரியா 🙂
Self-promotion தேவை. ஏதோ கொஞ்சம் சரக்கு இருந்தாலும் நிறைய விளம்பரத்தை கொடுத்துக்கட்டும்னு ஜூட்டு விடலாம்… இருந்தாலும் சாரு அஜீரணம்!
பிங்குபாக்: ஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல் ஒருவன்: ஒலி அனுபவம் « Snap Judgment
பிங்குபாக்: சாரு நிவேதிதா சந்திப்பு | Snap Judgment