Blogkut Sangamam Contest: College Life Story: கல்லூரி – போட்டி


கதைக்கான களம் பதிவுகள் அல்ல என்றாலும், சொந்தமாக சிறுகதை/கவிதை எழுதியதை கத்திமுனையில் படிக்க வைக்க வலைப்பதிவு போட்டி உருவாக்குகிறது.

தேன்கூடு போட்டியில் கண்ட ஆர்வம் மீண்டும் spring ஸீஸன் ஆகி அலர்ஜி ஆகும் வீரியத்துடன் பல புனைவுகள் வந்துள்ளன.

அனைத்தையும் ப்ளாக் – குட் / சங்கமம் வலையகம் தொடுத்திருக்கிறது.

அனுபவமும் அனுபவம் சார்ந்த இடுகையும் வலைப்பதிவு எனப்படும். சுஜாதாவும் சுஜாதா நடை சார்ந்ததும் சிறுகதை எனப்படும். பிற்காலத்தில் இந்தக் காலத்தை இப்படித்தான் ஆய்வறிக்கை தரவேண்டும்.

இரண்டையும் சரியாக மிக்ஸ் செய்து காக்டெயில் தந்த ஆசிப்பை பார்த்து தோன்ற வேண்டிய ஏகலைவர்களின் தேவையை சங்கமம் போட்டி நிரூபித்திருக்கிறது.

கலந்துக்கத்தான் வக்கில்லை என்னும் உரிமைதுறப்புடன், சிதறலாகத் தேர்ந்தெடுத்து படித்தவைக்கான கருத்துகள்:

# 10 மாணவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்

மேற்கோள் மூலை:

போனஸ் அடி வாங்கிய இன்னொரு நண்பன் “டேய் அவனே விழுந்த அடியிலே அரண்டு போய் இருக்கான், நீ சட்டை லுங்கி ன்னு கவலைப் பட்டு கிட்டு இருக்கீங்க”

ராம் நாடு நண்பன் ” பின்ன நான் கவலை படமால் இருக்க முடியுமா?, அவன் போட்டு இருந்தது என் சட்டை டா, நான் 10001 ரூபா என் ஆளுக்கு செலவு பண்ணிட்டேன்னு என் காதலி பரிசா எடுத்து கொடுத்த 50 ரூபா சட்டை”

திருச்சி நண்பன் “அவன் போட்டு இருந்தது என் லுங்கி”

நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

Sathia : வம்பே வேண்டாம். ஒரு :-)) மட்டும் போட்டுக்கறேன். – March 11, 2009 4:17:00 PM EDT

# 9 காதல் என்பது… : கெக்கெ பிக்குணி

மேற்கோள் மூலை:

பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன். “நீ திருக்குறள்லாம் படிப்பியாமே” என்று எங்கள் கடலை அஃபிஷியலாகத் தொடங்கியது. எப்போதுமில்லாமல் திருச்சி மிக விரைவில் வந்தாற்போலிருந்தது.

நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

Sridhar Narayanan said…சொல்றாங்க: //கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:‍-)//

இந்த வரி உண்மைன்னா கௌதமும் உண்மை, கதையும் உண்மைதானே. அப்புறம் எப்படி ‘பாதிதான் உண்மை’ன்னு சொல்றீங்க?

அதெல்லாம் நாங்க பாயிண்டை பிடிச்சிருவோமில்ல கரெக்டா :-))

Was just kidding.

கதையில் ஒரு நேர்த்தி இருக்கிறது.

//அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. //

கலக்கல். வாழ்த்துகள்! – 3/23/2009 காலை 10:28

நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

  • இந்த அடைப்புக்குறிக்குள் கதாசிரியர் எட்டிப் பார்ப்பதை விட்டுட்டு வெளியிலேயே சிந்தியுங்கப்பா
  • முடிவு; முடிவு தூக்கி நிறுத்தும் கதை.
  • பெனாத்தல் அவர் கதையில் ‘ஆர் சுந்தரராஜன் பட ஹீரோயின் மாதிரி’ சொன்ன மாதிரி அட்வைஸ் கொடுக்கிறாங்களே! எ.கொ.இ.ச!!

# 8 கல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல்

மேற்கோள் மூலை:

இருக்கை கிடைத்த மாணவிகள் அவர்களது வகுப்பு தோழர்களின் பைகளை வாங்கி காலுக்கு அடியிலும், பிடித்தமானவர்களின் பையை மடியிலும் வைத்து கொண்டார்கள்.
:::
பிசிக்ஸ் லேபிள் ஸ்பெக்ட்ரோமிட்டர் பிரசம் வைக்கும் போது அது முக்கோண வடிவத்திற்கு பதிலாக ஹார்டின் வடிவத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
:::
அழக ரசிக்க கத்துக்கணும்னு நான் சொன்னவுடன், பருவத்துல பன்னிங்க கூட அழகா தாண்டா இருக்கும் என்றான். கண்டிப்பா ஆண் பன்னிகளுக்கு அழகாத்தான் தெரியும் என்று சொல்ல நினைத்து பேக் ஃபையர் ஆகிவிடும் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.

நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

J said… Enakku puriyave illaye… why kesavan is like that in the end?

As others i also thought that u are writing abt the trip to college.Namma college and ooruku pona effect varuthu..but naan padikumpothu mini bus, auditorium ellam illa. 😦 – 10:14 PM

நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

  • முடிவு இயல்பாக இல்லை; பாலா படம் பார்த்துட்டோ, எண்பதுகளின் பாரதிராஜா க்ளைமேக்ஸ் போன்றோ துருத்தி பல்லிளிக்கிறது.
  • சொல்லி வச்சாப்ல எல்லாரும் காதல்னு விழுந்துட்டாங்களே; இட ஒதுக்கீடு, சாதி ரேகிங், தேர்தல், விரிவுரையாளர் அரசியல்னு எம்புட்டு இருக்கு?
  • அத்தனை டிராமாத்தனமான இறுதி பாகம் இல்லாவிட்டால், அல்லது அதை இன்னும் நம்பும்படியாக கொண்டு வந்திருந்தால் #1

# 7 நாற்பது மாத்திரைகள் : பினாத்தல் சுரேஷ்

மேற்கோள் மூலை:

விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து வெளிச்சத்துக்குப் பதில் தூரத்தைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன.
:::
“நான் எங்கே இருக்கேன்? சொர்க்கத்திலயா?”

“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சொர்க்கமா தெரியுதாம்டா.. அந்த மாத்திரை இனிமே மார்க்கெட்லே செம பிக்கப் ஆயிடும்”

நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

சாத்தான் said… வெறி ரொமாண்டிக். 🙂 – March 19, 2009 9:10 AM

நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

  • இத்தனை சிறிய சிறுகதையில் கோபி, லதா, அப்பா, தண்டபாணி, சேகர், சுந்தரமூர்த்தி, தாத்தா, டாக்டர், நர்ஸ், சுரேஷ் என்று இரண்டு கை நிறைய கதாபாத்திரங்கள். எல்லாரும் well defined ஆக ஆகிருதியுடன் உலா வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அறிமுக படலம் என்று வெளிப்படையாக இல்லாத ஆனால் சிறப்பான உருவாக்கம்.
  • பத்து நிமிட குறும்படமாக எடுக்கக் கூடிய அளவு விறுவிறுப்பான கச்சிதமான பாக்யராஜ் ஸ்டைல் மசாலா ஸ்க்ரிப்ட்.
  • அதெல்லாம் கரீட்டுதான்! கடேசில்ல என்னங்க சொல்ல வர்றீங்க பாஸு?

# 6 யார் முட்டாள்? : என். சொக்கன்

நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

  • சொக்கனுடையது.
  • ஏன் #6: இவர் காணாத பரிசா? வெல்லாத போட்டியா? சொந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்காத அலசலா?

# 5 கல்லறை ஆட்டம் : சத்யராஜ்குமார்

மேற்கோள் மூலை:

மனசு தைரிய சலைனை அவன் ரத்தத்தில் ஏற்றியது.

நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

  • மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு பிணவறை மகாத்மியங்கள் கேள்விபட்டிருக்கிறேன். இது வேறு ரகம்.
  • ஆவி இருக்கிறது என்று நம்ப மறுக்கும் அறிவியல் மனதைப் புரட்டிப் போட்டு மீண்டும் புரட்டி போடும் சித்து ஆட்டம்.
  • ஏன் #1 இல்லை: #6க்கு சொன்ன அதே காரணம். மகாதமாக்களை தேர்தலில் நிற்க வைப்பதில்லை; மனதில் மட்டுமே இடம்.

# 4 ஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்

மேற்கோள் மூலை:

அதுல பாத்தீங்கன்னா ஈக்கும் இறக்கை இருக்கு. எரோப்ளேனுக்கும் இறக்கை இருக்கு. (கைதட்டல்). ஈ முட்ட வெக்குங்க. ஏரோப்ளேன்ல கோளாறு இருந்துதுனு வெயுங்க எங்காச்சும் கொண்டு போயி முட்ட வெச்சு ஆக்ஸிடெண்ட் ஆயுருமுங்க. (கூட்டம் ஊளையை நிறுத்திவிட்டுக் கைதட்டி ரசிக்க ஆரமிச்சுது.)

நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

இராகவன் நைஜிரியா said… தாங்க முடியலங்க…

ஈயும் ஏரோப்ளேனும் – மிக அழகான கம்பேரிசன்.

வாழ்க அறுவை திலகம், கடிமன்னர்.

நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

  • சிரிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு நிஜமாவே சிரிப்பை வரவைப்பது கஷ்டம். செய்து காட்டுகிறார்.
  • பரீட்சைக்குப் படித்துக் கொண்டு செல்லாத அம்பேத்கார் குறித்து கட்டுரை எழுத சொன்னால், படித்துக் கொண்டு சென்ற மாட்டைப் பற்றி பத்து பக்கம் எழுதித் தள்ளிவிட்டு, அப்பேர்பட்ட மாட்டை அம்பேத்கார் வளர்த்திருக்கிறார் என்று முடித்த கதையாக, கல்லூரியை விட்டு விட்டு, வேறு எங்கோ லாகவமாக ஏரோப்ளேனை ஹைஜாக்குகிறார். அதற்கு சலாம்.

# 3 கமிஷன் மண்டி சுப்பையா : ஸ்ரீதர் நாராயணன்

மேற்கோள் மூலை:

ஒடுங்கிப் போய் படுக்கையில் படுத்து இருந்தாலும் திடீரென்று உத்வேகத்தோடு எழுந்து சாக்பீஸை விட்டெறிந்து ஏதாவது தேற்றம் விளக்கி சொல்லச் சொல்வாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருந்தது.

நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

ILA said… செம எழுத்து நடை.. 🙂 –March 20, 2009 1:22 PM

நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

  • அது என்ன சொல்வீங்க? ஆங்.. ஜென்டில் ஸ்மைல்; அதேதான்.. மெல்லிய புன்னகை வழி நெடுக
  • சுஜாதாவின் ஆவி சொல்ல சொல்ல இவர் எழுதினாரோ என்று ஏங்கி சொக்க வைக்கும் விவரணை
  • படிச்சா மனசில் உட்கார வேணாம்! குறைந்த பட்ச டெபாசிட்டாக நிக்கணுமாமே? இது இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் வெளியே விழும் குச்சி; Buds போடும்போது கிடைக்கும் சுகம் மட்டுமே இங்கே.

# 2 வாசமில்லா மயிலிறகுகள் : ராமசந்திரன் உஷா

நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

கெக்கே பிக்குணி சொல்வது… உங்க கதைத்தலைப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சி இருந்தது.

நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

  • கல்லூரி நட்பு பல்லாண்டு கழித்து மறந்து போகும் எதார்த்தம்.
  • எல்லாரும் லூட்டி, அரைலூசுத்தனம் என்று அந்தக் கால மலரும் ஜவ்வு மிட்டாய் கொடுக்க, இவருடையது செம crisp.
  • பழங்கால நினைவு இன்றும் பல்லிடுக்கில் மாட்டிய கோழித் துண்டாய் இருப்பதற்கு ஒரு சம்பவம், ஒன்றிரண்டு சுற்றுப்புற வர்ணனை, நடை ஜாலக்கு என்னும் மேக்கப் போட்டிருந்தால் நிச்சயம் #1

# 1புட்டிக்கதை : கார்க்கி

மேற்கோள் மூலை:

இடுகை முழுக்கவே இங்கே இட வேண்டும்.

நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:

ஆதவா said… நான் படிக்கும் உங்களின் முதல் பதிவு… ரகளையா இருக்குனஙக….
அப்படியய அலேக்காக அந்த இடத்தில் கொண்டு போகும் எழுத்துக்கள்…

இது உண்Mஐயா நடந்ததா?? –February 6, 2009 6:05 PM

நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:

  • கொஞ்சம் அசந்தால் மொக்கை ஆகிப் போகும் அபாயம்.
  • எல்லாரும் ஏற்கனவே எழுதிய பழைய ஜோக்குகளின் தொகுப்பாக நின்றுவிடும் பபிள் கம்மாக இல்லாமல், சூப்பர் மேன் தரித்த பூமர் கம்மாக வெடித்திருக்கிறது.
  • பதிவில் போட்டி என்றால் க்ளாசிக் சிறுகதை வேண்டாம்; கொஞ்சம் அனுபவம்; நிறைய நக்கல்; துளி புனைவு மாதிரி நம்பமுடியாமை; ஒன்றரை பக்கம் – எல்லா சாமுத்ரிகா லட்சணமும் பக்கா!

டாப் 10 பதிவைப் படித்து சன் டிவியின் செவ்வியல் தயாரிப்புகளான ‘தீ’, படிக்காதவன் விமர்சிப்பவரா நீங்க? உங்களுக்காக என்னுடைய கல்லூரி: ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)

27 responses to “Blogkut Sangamam Contest: College Life Story: கல்லூரி – போட்டி

  1. டாப் 10 – உங்க பிராண்டிங் ஆக்கிட்டீங்களா? பதிவுகளில் பல புதிய அவதாரங்கள் எடுக்கிறீர்கள்.

    சொக்கன் பாத்து ரொம்ப பயப்படறீங்களே. அப்படி என்ன அவர் மிரட்டி வச்சிருக்காரா என்ன? 🙂

    • ஸ்ரீதர்,

      —டாப் 10 – உங்க பிராண்டிங் ஆக்கிட்டீங்களா? பதிவுகளில் பல புதிய அவதாரங்கள் எடுக்கிறீர்கள்.—

      அவ்தார் 😉

      —சொக்கன் பாத்து ரொம்ப பயப்படறீங்களே. அப்படி என்ன அவர் மிரட்டி வச்சிருக்காரா என்ன?

      சொந்தக் கதை என்றதும் கீபோர்ட் அப்படியே பம்மி விட்டது 🙂

  2. //முடிவு இயல்பாக இல்லை; பாலா படம் பார்த்துட்டோ, எண்பதுகளின் பாரதிராஜா க்ளைமேக்ஸ் போன்றோ துருத்தி பல்லிளிக்கிறது. //

    unga vaazhkaila oru vishayam neenga paathathillaina athu nambum padiya illainu eppadi solreenga?

    Collegela nadakara intha maathiri vishayangalaala vaazhkaiyai thulaichavanga yaarum illaiya?

    naan paathathai vechi thaan naan ezhuthiruken. enga collegela enga setla ithe MSc, Engg sandai nadanthathu. athula oru paiyanuku ithe maathiri adi vizhunthathu. avan half inchla, 27 stitchesoada thappichan. half inch maathi vizhunthiruntha, intha kathai nadanthirukum.

    athuku apparam nadantha prechanaila Police vanthu periya prechanaiyagi 150 members suspend aananga.

    Bala voada Sethu padam nijamalume avar friendku nadanthathu thaan.

    • வெட்டி,

      —unga vaazhkaila oru vishayam neenga paathathillaina athu nambum padiya illainu eppadi solreenga?—

      ஒரு விஷயம் நம்பகமாக இருப்பதை விட நம்பிவிடக் கூடியதாக அமைத்திருப்பதுதான் புனைவு.

      இரண்டு சம்பவத்தைப் பார்ப்போம்; முதலில் ‘நான் கடவுள்’ உச்சகட்டம்: தாண்டவன் தனியே வருகிறார். அதுவரை அவர் கூட இருந்த வாயிற்காப்போன் முதற்கொண்டு எவரும் இல்லாத ஒண்டிக்கு ஒண்டி சண்டை. நம்ப முடிகிறதா? நெஞ்சு பதை பதைக்குதா? இலயித்து ஆழ்ந்து போகிறோமா?

      இல்லை.

      அடுத்ததாக வாரணம் ஆயிரம். ஒரு நாள் காதலிக்காக அமெரிக்கா செல்வானா? ஆம்.

      ஏன்?

      அவன் அப்பா அப்படிப்பட்டவர் என்பதற்கு ‘போய் அடிச்சுச்சு வா’ன்னு பள்ளிச் சிறுவனை அனுப்பி வைப்பதிலேயே கதாபாத்திர அறிமுகம் + குணச்சித்திரம் தெளிவாக உருவாகிறது.

      நடக்க இயலாத ஒன்றுதான்; நம்ப முடியவில்லைதான்; ஆனாலும், புனைவின் வெளிப்பாடு.

      உங்க கதை ‘நான் கடவுள்’ க்ளைமேக்ஸ் மாதிரி சும்மா பிலிம் மட்டுமே; வலுவான பின்னணி இல்லையே!

      —Collegela nadakara intha maathiri vishayangalaala vaazhkaiyai thulaichavanga yaarum illaiya?

      ஒருத்தர் கூட இருக்க வேணாம். பல்லாயிரம் பேர் இருக்கலாம். அதெல்லாம் நிஜம்.

      இந்தக் கதை காதலை சொல்வதா, சோகத்தைப் பிழிந்து சென்ட்டி போடுவதா என்று குழம்பி, படிப்பவரையும் எண்பதுகளின் (மைக்) மோகன் படத்தை மறுவெளியீடு செய்தது போல் சகதி கலந்த கலங்கல் மட்டுமே எழுப்புகிறது.

      எமக்குத் தேவை கலக்கம் நெடுக நிறைந்து இறுதியில் தெளிந்த நீரோடையாகும் ஆக்கம்.

    • நர்சிம் பதிவின் இறுதிப் பாகம் மட்டுமே வாசித்தேன். முழுக்கப் படித்துவிட்டு வருகிறேன். நினைவூட்டலுக்கு நன்றி!

  3. //ஏன் #6: இவர் காணாத பரிசா? வெல்லாத போட்டியா? சொந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்காத அலசலா? //

    Rajini padathuku kodukara build up maathiri iruku…

    appadiye avar enna enna parisu vaangirukarunum list poatirukalam 😉

  4. //சொந்தக் கதை என்றதும் கீபோர்ட் அப்படியே பம்மி விட்டது
    //

    Appa naanga ellam mattum Mandabathula irunthu vaangitu vanthu poatoam 😉

    • Appa naanga ellam mattum Mandabathula irunthu vaangitu vanthu poatoam—

      அது அவரோட சொந்த & (சோக)க் கதை; 😉

      உங்களோடது கற்பனை என்றாலும் கட்டுக்கதை என்றாலும் 😀 உன்னை மறவேன்

  5. //நர்சிம் பதிவின் இறுதிப் பாகம் மட்டுமே வாசித்தேன். முழுக்கப் படித்துவிட்டு வருகிறேன். நினைவூட்டலுக்கு நன்றி!
    //

    appa intha top ten sellathu…

  6. //எமக்குத் தேவை கலக்கம் நெடுக நிறைந்து இறுதியில் தெளிந்த நீரோடையாகும் ஆக்கம்.
    //

    oruthanoada mananilai theliva iruntha thaan Thelintha neeroadaiyana aakathai thara mudiyum.

    avanoada mana nilaiye oru kuzhapamana mananilai thaan. Kadaisiya avan azhuthathu avanoada nambanuka, kaathalikanu theliva sollatha kaaranum athuku thaan.

    ippadi Kesavanum vaazhkaiyai izhunthu, naamalum ella santhoshathaiyum izhanthutamoanu oru iyalamaila azhuvarathu thaan kadaisiya varuthu…

    ellathaiyum Vim poata vilaka mudiyum 🙂

    • ‘தெளிவு’ என்பதை சுபம் என்று கருப்பு/வெள்ளை படங்களில் போடுவதை சொல்லவில்லை.

      கலங்கிய குட்டையில் மீன் சிக்குவது கஷ்டம். அடியில் பொதிந்திருக்கும் மேட்டரை சிறுகதை குளம் காட்டிக் கொடுக்கணும்.

      எப்பா… இந்த உவமை ரொம்ப திகட்டுது.

      சிறுகதை என்பது சுருக்கமானது; ஒரு சம்பவத்தை விவரிப்பது; சிதறலாக கொண்டு சென்றாலும், நேர்க்கோட்டில் பயணித்தாலும், முடிவில் ஓ ஹென்றி அதிர்ச்சி வரவைத்தாலும் அதற்கு முஸ்தீபு ஏற்றவாறு அமையணும். அதுதான் சொல்ல வந்தது.

      உங்க ‘விம் விளக்கம்’ கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

  7. இன்றுதான் பார்த்தேன்.. ரொம்ப நன்றிங்க..

  8. பாலாஜி, லேசுல விடமாட்டீங்க போல இருக்கு !

  9. sila pathivuhalai mattum padithuvittu top ten poduvathu yentha vithathil niyayam?
    neengale solgireerkal…narsim pathivai padikkavillai yendru

    • நேரடியா பதில் வராட்டி விடமாட்டீங்க போல 🙂

      படிக்கல என்றால், மனசில ஒரு துளி கூட நிக்கல என்று அர்த்தம். நான்கு பகுதிகளும் வாசித்தேன்.

      கலந்து கொண்ட மற்றவர்களின் கவிதைகள், ஆக்கங்களுக்கு நர்சிம் எவ்வளவோ தேவலாம் என்றாலும்… காலையில் படுக்கைய விட்டு எழுந்தேன்; பல் தேய்த்தேன்; கக்கா போனேன் என்கிற ரீதியில் இருந்ததால் இங்கே குறிப்பிடவில்லை.

  10. பாலாஜி,

    இப்ப தான் உங்க கமென்ட் படிச்சேன். நிச்சயமா உங்கள சொல்லல ! அது வேற பாலாஜி !

    பாலா சார்,

    நான் எவ்வளவு அருமையா கல்லூரிய பத்தி ஒரு காவியம்/ இலக்கியம் படைச்சேன். அதுக்கு நீங்க 10.5 ரேங்கிங்காவது கொடுத்து இருக்கணும். நீங்க மறுபடியும் ஒரு டாப் 30 எழுதுங்க. அப்ப என்னோடது வந்துதான தீரும் !

  11. Sari.. Sari…

    Innaiku thaane Result?

    BTW,
    antha rendu Judgesla neenga illa thaane?

  12. Baba,
    any guess on Top 3?

    Unga top 5la ethavathu varuma?

  13. இடம் தலைப்பு/பதிவர் நடுவர்-1 நடுவர்-2 மக்கள் முடிவு
    1 கல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல் 10 7.5 7.36 80.55
    2 கல்லறை ஆட்டம் : சத்யராஜ்குமார் 9.5 6.5 8 80
    3 நாற்பது மாத்திரைகள் : பினாத்தல் சுரேஷ் 9 7 6.96 74.8
    4 கமிஷன் மண்டி சுப்பையா : ஸ்ரீதர் நாராயணன் 7.5 7 7.28 72.65
    5 யார் முட்டாள்? : என். சொக்கன் 7 6.5 7.4 70.75
    6 கல்லூரி..கள் ஊறும் நினைவுகள் : நர்சிம் 6 7.5 7.02 68.85
    7 மாணவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன் 6 6.5 7.2 67.25
    8 சொல்லாத-காதல்-எல்லாம் : Sundari 6 6.5 7.08 66.65
    9 வாசமில்லா மயிலிறகுகள் : ராமசந்திரன் உஷா 8 5 6.46 64.8
    10 ஒரு தாயின் கல்லூரிக் கனவு : புன்னகை 4 6 7.18 60.9

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.