பாலபாரதி பவர்பாய்ன்ட் இட்டு கொதிக்கிறார். மாற்றம் வேண்டும் இயக்கம் துவங்குகிறார்கள். பதிவரோ சூடான இடுகைக்கு செய்தி இட்லியும் அலசல் வடையும் பரிமாறுகிறார்.
உங்கள் பொன்னான வாக்கை தேர்தலில் சரியான சின்னம் பார்த்து அமுக்க பத்து காரணம்:
- மதன் பாப்புக்கு வழங்குவது போல் ‘தீ‘ சுந்தர் சி அடிப்பார்.
- கண்ணுக்கு மையழகு. கைக்கு வாக்கு போட்ட மசி அழகு.
- தேவ் அழைத்தவர் எல்லாம் வெளிநாடு. நீங்க உள்நாடு.
- வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம்; வீட்டை தூசு தட்டுகிறோம்; அது போல் இதுவும் எளிது + முக்கியம் + கடமை.
- பாஸ்போர்ட் முதல் பால் வரை பல க்யூவில் நிற்கிறோம். இந்த காத்திருப்பு வரிசை எம்மாத்திரம்?
- எழுபது வயதான என் அம்மா இதுவரைக்கும் எந்தத் தேர்தலையும் தவறவிட்டதில்லை. கால் சரியில்லாதபோதும், எப்படியாவது வாக்களித்து வந்திருக்கிறார்.
- தி ஹிந்து, வலைப்பதிவு, சிஎன்என், காமெடி சென்ட்ரல் எல்லாம் பாத்தால் எதற்கும் நயா சென்ட் பயனில்லை. வாக்குச்சாவடியில் எந்திரத்தை தொட்டால் மட்டுமே மோட்சம்.
- உங்களுக்கு பதில் இன்னொருத்தர் கணவனாக செயலாற்ற விடுவீர்களா? அப்படியிருக்க கள்ளவாக்கு மட்டும் ஏன் விடுகிறீர்கள்?
- அனுபவஸ்தன் சொல்கிறேன். வோட்டு போட்டார்ல் ரொம்ப திருப்தியாக இருக்கும். மனநிறைவு கிடைக்கும்.
- இதே மாதிரி இன்னும் நூறு இடுகை வந்து உங்களைத் தொல்லைக்குள்ளாக்கணுமா? தயவு செஞ்சு போட்டுடுங்க!
→ யாருக்கு போட்டேன் என்று ட்விட்டரில் எனக்கு டைரக்ட் மெஸேஜ் விடவும் மறக்காதீங்க 🙂
→ நான் இந்தியாவில் இல்லையே என்றால், அட்லீஸ்ட் பதிவு மட்டுமாவது போடுங்க தல•…
இதுக்குத் தான் சுப்ரீம் கோர்ட்ன்னு சொன்னோம்…சும்மா பாயிண்ட் பாயிண்ட்டாப் போட்டு தாக்கிட்டீங்களே பாபா
தேவ் __/\__
பாபா,
சும்மா கலக்கலா சொல்லியிருக்கிங்க இந்த செயினை கொஞ்சம் நகர்த்தியதற்கு நன்றி.. அப்படியே நாலு பேரை கோத்து விட்டு இருந்திங்கண்ணா நல்லா இருந்து இருக்கும் 🙂
சந்தோஷ், நன்றி!
என்னால் முடிந்தது… தேர்தல் நாளன்று நினைவூட்ட தொலைபேசி, குறுஞ்செய்தித்து, மடலிடுகிறேன் 🙂
பிங்குபாக்: India Elections 2009: Irrelevant Online Crowd « Snap Judgment