செயல் பயனற்ற நிலை


ரொம்ப நாளாக கூடவே ஓடுபவர். அன்றும் ஜிம்மில் பைக்கிங் செய்து கொண்டிருந்தார். நான் ஐந்து நிமிடம் ஓடுவதும் நான்கு நிமிடம் நடப்பதுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன். காதில் தற்போதைய ஹிந்தி ரெஹ்மான் ஒலியை மீறி தடால் சப்தம் கேட்டது.

பக்கத்தில் சாதாரணமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர், கீழே விழுந்திருந்தார். 911 அழைத்தார்கள். அங்கே இருந்த எவருக்கும் முதலுதவி தெரியவில்லை.

ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளேயே உயிர் பிரிந்து விட்டது. வயது 44.

அவர் என்னைப் போல் திடீரென்று ஓட வருபவர் அல்ல. பல வருடங்களாக தினசரி வருபவராம்.

மரணம் கண் முன்னே நிகழ்வதை கையாலாகாமல் பார்ப்பது இரண்டாவது தடவை. முதல் தடவை திருச்சானூர் கோவில் வாசற்படியில் அப்பா வழுக்கியபோது பதைபதைத்ததும் ஓடிப்போய் என்னென்னவோ செய்து பார்த்ததும்; சிரார்த்தம் நம்பிக்கையில்லாமல் போடாமல் இருப்பதும்; ‘நான் கூடப் போறேனில்ல! ஒண்ணுத்துக்கும் கவலை வேண்டாம்’ என்று வாக்குறுதி சுக்கலானதும்; வாழ்க்கை மாயை போன்ற அநித்தியங்கள் தோன்றியதும்; செய்த பாவக்கணக்கின் பட்டியலும்; சில இளையராஜா சோகப்பாடல்களும்; கடவுள் நம்பிக்கையும்; கடவுள் வெறுப்பும்; இலட்சிய வேட்கை கொழுந்துவிட்டெறிவதற்கான தாகசாந்தியும்; எதற்காக சின்னச் சின்ன விசயங்களுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வைகிறோம் என எல்லாம் ஒட்டுமொத்தமாய் வந்து போனது.

எதுவும் நிலைத்து இலயிக்கவில்லை.

8 responses to “செயல் பயனற்ற நிலை

  1. ஜிம்மில் ஒருவர் கூட CPR தெரிந்து வைத்திருக்கவில்லையா? அது சட்டப்படி தப்பாச்சே. நீங்கள் ஓடும்போது உங்கள் இதய துடிப்பு உங்கல் வயதிற்கு எத்தனை அதிகபட்சமோ அதில் 80% மேலே போகாமல் பார்த்து கொள்ளவும்.

    • பத்மா,
      தப்புதான்! அனேகமாக அவரின் குடும்பத்தினர் வழக்குத் தொடுப்பார்கள். வழக்கமாக இருப்பவர் அன்று காணவில்லை.

      வரவேற்பறையில் இருப்பவர் மட்டுமே இருந்தார்.

  2. Very scary:-( Like Padma says, how come nobody knew CPR?

    I learnt CPR. But I haven’t kept up on the cert. I don’t know if I’ll be sued if I try to help and that doesn’t work… Maybe Padma can clarify? (Padma, Can’t help my very Tamil mindset:-).

    • கெ.பி.

      —how come nobody knew CPR?

      அங்கே கேட்டதற்கு ‘நீங்கள் உறுப்பினராகும்போது கையெழுத்திட்ட உரிமைதுறப்பில் “இருக்க வேண்டுமென்பது அவசியமல்ல” என்னும் ஷரத்து இருப்பதாக சொன்னார்கள் 😉

  3. KKPK: You will be sued as yoru certificate is expired. You can get a new CPR certificate from many free workshops offered by Red cross, Medical reserve corp or other organizations and renew it every year.

    We need to be aware of all liabilities before offering help. One passer by acted as a translator and got into trouble for not being able to stay for long.

  4. Thanks, Padma!

    அறியாமையை விட இந்த இயலாமை இன்னும் கொடியது, இல்ல?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.