‘பாலா & ஜெயமோகனின் பத்து க்ளைமேக்ஸ்‘ என்று எழுதியதற்கு புலவர் விக்கிரமாதித்தன் கடவுளை செல்லமாக அழைத்தது போல் என்னையும் கொஞ்சி மறுமொழி வந்தவுடன் நானும் கடவுள் என்று விளங்கியது.
‘அன்பே சிவ’மாக கமல் வந்து இன்னும் ‘நீயும் கடவுள்’ என்று நெக்குருகாதது பாக்கி இருக்கு. நெஞ்சை கனக்க செய்வது கமலின் சாமர்த்தியம். மைக்கேல் மூர் மாதிரி டாகுமென்டரி சிதறல் செய்வது பாலா சாமர்த்தியம்.
நிறைய விமர்சனம் படித்து, எல்லாவற்றிலும் கொஞ்சம் பிரசாதமாய் எடுத்து லட்டு விநியோகம் செய்யும் ஆசையுடன் வலைப்பதிவில் கிடைத்த இடுகையெல்லாம் மேய்ந்ததில் பைத்தியக்காரன் (Naan Kadavul: Paithiyakkaran – Metaphors, Symbolism, Balachander Shots, Intentions) பிரித்துப் போட்டிருந்தார்.
குருவி, சிலம்பாட்டம், ஜி போன்ற படங்களை பாலா என்று பெயர் போட்டவர் இயக்கி இருந்தால், பைத்தியக்காரனிடம் இருந்து இன்னும் பல சுவாரசியமான விமர்சனம் கிடைத்திருக்கும். இயக்குநர் பாலாவும் எழுத்தாளர் ஜெயமோகனும் தங்கள் பெயரை அவுட்சோர்ஸ் செய்தால், அழகுள்ளபோதே ஐந்து ஷிஃப்ட் செய்யும் நடிகையாக பணம் பார்க்கலாம். பைத்தியக்காரனும் நுண்மையான டபுள் மீனிங் கொடுப்பார்.
நான் இது போல் நுட்பமாக அவதானித்து நிறைய எழுதுபவன். சாம்பிளுக்கு: வேர் இஸ் தி பார்ட்ட!?
பெருமாள்முருகனின் ‘நிழல் முற்றம்’ ஆரம்பித்து எல்லோரும் திருட்டு டவுன்லோடிட்டு பார்த்து டெலீட்டிய ஸ்லம்டாக் மில்லியனர் தொட்டு சினிமாவை பார்த்த கதை முதற்கொண்டு இல்லாததையும் இன்னாததையும் கூறல் ஆசை. வயாகரா போட்டவுடன் செயலில் இறங்க வேண்டும். ஆறு வாரம் கழித்து சாந்திமுகூர்த்தம் வைத்துக் கொள்ளக் கூடாது. எனினும், வயாகரா வந்துவிடுகிறேன் என்று வெளிப்படுகிறது இங்கே.
விடுதலை
இந்து மதம் பயமுறுத்தும். ‘உம்மாச்சி கண்ணைக் குத்தும்.’ தற்கொலை தீவிரவாதியானால் இஸ்லாத்தில் மோட்சம். ஃபாதரின் மகளுடன் ஜல்ஸா செய்து பாவ மன்னிப்பு கேட்டாலும் கிடைக்கும்.
ஹிந்துவாக இருந்தால் அன்னியன் வந்து கருட புராணம் தண்டனை கொடுப்பார். ஃபுல்லாகி, பூண்டு ஊறுகாய் ஆகி, புழு ஃப்ரை ஆகி, பறவைக் காய்ச்சல் வரும் ஏழேழு ஜென்மம் உண்டு.
கத்ரீனாவில் அகப்பட்டவருக்கு விடுதலை என்பது நியு யார்க்கில் தஞ்சம் புகல். ஆப்பிரிக்காவில் இன அழித்தொழிப்பில் சிக்கியவருக்கு விடுதலை refugee ஸ்டேட்டஸ்.
பௌத்தத்தின் விடுதலை ‘ஆசை’.
கேபிடலிஸ விடுதலை அப்போதைக்கு பிழைத்துப் போவது; நிஜத்தை விட்டு ஓடிப்போவது; குளிர்ந்தால் பக்கத்துவீட்டு நெருப்பில் கதகதப்பு கோருவது.
கம்யூனிச விடுதலை தலைமைக்கு அடிபணிந்து, கடைநிலை யூனியன் மெம்பராய் உழைத்துக் கொட்டுவது.
இதெல்லாம் படத்தில் இருக்கிறதா என்று அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு வரவேண்டாம். படத்தில் பிச்சைக்காரர் சாஃப்ட்வேர் எஞ்சினியர் போல் கடைநிலை சிப்பந்தி. கொஞ்ச நாள் கழித்து ப்ராஜெக்ட் மேனேஜர் பழனி ஆகிறார். அப்புறம், மேலும் பதவி உயர்வு பெற்று பிச்சைக்காரரை வைத்து பணக்காரர் ஆவது விடுதலை என்கிறார்.
ப்ளாகருக்கு விடுதலை எது? நீண்ட பதிவை பின்னூட்டத்தில் சம்ஹரிப்பது. அகோரிக்கு விடுதலை எது? சம்ஹரிப்பு தனக்கானது என்று சஞ்சரிப்பது.
கொஞ்சம் விளம்பர இடைவேளை: நான் கடவுள் தொடர்பான முந்தைய பதிவுகள்
வாந்தி
மல்டி டாஸ்கிங் கிங் ஆக இருக்கலாம். ஹிந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் என பன்மொழி பண்டிட் ஆக இருக்கலாம். வெள்ளிக்கிழமை கோவிலுக்கு ராகுகாலத்தில் பல ஃபிகர் வரும். ஆனால், உங்க சைட்டு எதுன்னு புரிஞ்சுண்டு, அதை மட்டும் லுக்கு விடுவீங்க இல்லியா?
சொல்ல வந்ததை மட்டும் சொல்வது கலை. தெரிந்ததை எல்லாம் சொல்வது பல்சுவை இதழ்; வலைப்பதிவு; நாவல்/காவியம். ஆனால், சினிமா அல்ல.
இவரோட இப்பொழுது வந்த இன்னொரு படம் ‘அஞ்சாதே‘. நான்கு ட்ராக்கில் செல்லும்:
1. காவல்துறை
2. நட்பு
3. செல்வந்தச் சிறுமி கடத்தல்
4. காதல்
இப்பொழுது அஞ்சாதேவைப் பார்த்து கைக்கிளை கொண்ட நான் கடவுள் கிளை:
1. வறியவர்
2. காசி அகோரி
3. தாய் – மகன்
4. தெய்வம்
முன்னது கோர்த்த விதத்தினால் சிமெண்டும் மணலும் சரியாகக் கலந்த கலவை.
பீரும் விஸ்கியும் வைனும் கலந்து கட்டி அடிக்கலாம்; தப்பில்லை. ‘நான் கடவுள்’ குளுகுளு பியர் ஏற்றுகிறது. அதற்குப் பிறகு கொனியாக், வைன், வெர்மவுத் என்று சகலத்தையும் சர்பத் போல் கலக்கு கலக்க, எனக்கு மைக்கேல் மூர் இயக்கி, பில் மெஹர் ஹீரோவாக, ஆன் கூல்டர் நாயகியாக நடித்து, ரஷ் லிம்பா வசனம் எழுதிய படம் பார்த்த அஜீரணம்.
இப்போது சித்தர் பாடல் ப்ரேக்:
அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே;
உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. (212)தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. (49)சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே. (50)சிவவாக்கியரின் சிவவாக்கியம் 205வது பாடல்.
ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே
அடைவுறுதல்
படம் பார்த்தால் நம்ப வேண்டாம்; மயங்கணும்.
கதையில் லயித்து ஒன்றவேண்டாம்; என்றாவது பிச்சைக்காரரைப் பார்த்தால் ‘வெண்ணிலவே! வெண்ணிலவே!! விண்ணைத்தாண்டி வருவாயா?’னு கனவு கஜோள்ளோடு டூயட்டணும்.
‘ஆளவந்தான்‘ புத்திசாலித்தனம் வேண்டாம்; ‘தசாவதார‘த்தின் பரபரப்பிலோ வித்தை காட்டலிலோ சொக்கணும்.
ஆவணப்படம் எடுத்தால் கூட ஒன்றவைக்கும் சிரத்தையும் தகவலில் உள்ள துல்லியத்திற்கும் புனைவுலக 70 எம் எம்மில் மினுக்கிட வேணாம்; பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் வாரணம் ஆயிரமின் drug பயன்பாட்டின் வீச்சும் வீரியமாவது தைக்க வேணாமோ?
வேணாம்கிறார் பாலா. ஒத்து ஊதுகிறார் சாரு நிவேதிதா.
//குருவி, சிலம்பாட்டம், ஜி போன்ற படங்களை பாலா என்று பெயர் போட்டவர் இயக்கி இருந்தால், பைத்தியக்காரனிடம் இருந்து இன்னும் பல சுவாரசியமான விமர்சனம் கிடைத்திருக்கும். //
Super and true 🙂
தல சுத்துது 🙂
நான் கடவுள் இயக்குனர் பேட்டி ரீடிப்பில் வந்ததே?.படிக்கவில்லையா?.
இயக்குநர் பாலாவுடன் ரீடிஃப் பேட்டி:
rediff.com: Exclusive: Bala on Naan Kadavul, God and faith
The more I try to prove something, the more I fail. Leave films, people never learn from reality. The more they suffer, the more they seek shelter in God. Yet, I am trying to convey my point. People seek a solution to all problems in God — but they never realise they themselves are in the best position to solve the miseries.
Even normal people in some situations — be it the rich or the poor — say that I want to die. So, it comes naturally. Some people forget that phase soon and get onto their lives, thinking optimistically. But think about the people who always suffer. What will they do? How will their sufferings end? When will that end?
கிஷோர் 🙂
சர்வேசன் நன்றி!
ஐ எம் நாட் காட்,
பேச்சில் இதுவே தனக்குப் பிடித்த படம் என்று சொன்னதைப் பார்த்தவுடன் ‘எனக்கு நந்தா இன்னும் பிடித்திருந்ததே’ என்று நினைத்து, எழுதிக் கொட்டியாச்சு 🙂
‘பேச்சில் இதுவே தனக்குப் பிடித்த படம் என்று சொன்னதைப் பார்த்தவுடன் ‘எனக்கு நந்தா இன்னும் பிடித்திருந்ததே’ என்று நினைத்து, எழுதிக் கொட்டியாச்சு’
அடுத்த படம் வந்த பின் அதுதான் தனக்கு பிடித்த படம் என்று சொன்னால் அதற்கு நா.க மேல்
என்று எழுத வேண்டியிருக்குமோ,
என்னமோ :).
ஐ எம் நாட் காட் 🙂
தண்ணியில் கிடைக்கிற நாக்கு; அப்படித்தான் புரளும் 😀