மைத்ரேயன்: ‘நீயும் நானும் வேறல்ல?’


Inequality kills by Peter Wilby :: Politicians take heed: social injustice is, literally, deadly – New Statesman: The WHO report (Closing the Gap in a Generation)

“We traditionally assume that health improvement is delivered by medical advances, better hospitals, more doctors and more spending on health services. Most political argument is about how to achieve these ends, with the role of preventative health – improved lifestyles – now adding a further dimension.

The WHO report is saying something quite different: health is political in the broadest sense because it is influenced by the distribution of power, income, goods and services.

Here are some more facts. US blacks are rich by world standards but, in a highly unequal country, most are very poor by local standards. People from Tunisia, Jamaica, Panama, Libya, Lebanon and Cuba all have higher life expectancies than the US black population.

If black mortality rates were the same as those for US whites 886,202 deaths would have been averted between 1991 and 2000. Over the same period, 176,633 lives were saved by medical advances.”

அசமத்துவம் என்பதை ஒரு தத்துவ, அரசியல், பொருளாதார, அற, பண்பாட்டு ஆய்வுக் கூறாக எடுத்துப் பார்த்து அதோடு சண்டை போடவும், அதே நேரம் அழிக்க முடியாத ஒரு நிரந்தர அம்சமாக, இயற்கையின் தவிர்க்கவியலாத விதியாக அதைப் பார்க்கத் தேவை என்ன என்பதை நிறுவவும் பெருமுயற்சி தேவை என்பது எனக்குத் தெரியும்.

அதைச் செய்யத் தேவையான ஆசை மட்டுமே எனக்கு இருக்கிறது. திறமை இருக்கலாம். முயற்சி இல்லை. அதனால் அரைகுறையாக இதை உங்களிடம் தள்ளுகிறேன்.

Inequality என்கிற இந்த சொற்பிரயோகத்துடன் எனக்கு நிறைய ஜகடா உண்டு. தன்னளவிலேயே தன்னை மோசமாகக் காட்டும் சில சொற்களில் இதுவும் ஒன்று.

ஆங்கிலம் புரிந்த எந்த நாட்டிலும் அனேகமாக எல்லா மனிதரிடமும் இந்தச் சொல்லுக்கு ஒரு இழிவான பார்வைதான் கிட்டும். ஏதோ எல்லா மனிதருக்கும் தாம் மிக நல்லவர் என்று ஒரு எண்ணம்.

நடத்தையிலும், நம்பிக்கையிலும் எத்தனை அசமத்துவத்தை தினமும் அவர்கள் நிறுவிக் கொண்டிருந்தாலும், கருத்தளவில் அசமத்துவத்தைக் கறாராகவும், முழுமூச்சோடும் தாம் எதிர்ப்பவராகவும், சமத்துவத்தை அடைவதுதான் தம், மேலும் மொத்த மனித குலத்தின் குறிக்கோள் எனவும் அபத்தமாக நம்பாத மனிதரை நான் இன்னும் பார்க்கவே இல்லை.

அப்படி யாராவது என் கண்ணில் பட்டிருந்தால், அவரை நான் ஒரு அபத்த மனிதராகவோ, அல்லது கிறுக்கராகவோ, அல்லது அதிகார வெறியராகவோ – அதாவது நார்மல்சி என்பதில் இருந்து விலகிய ஒரு அதீத கோணல் மனிதராகவே நானும் பார்த்திருப்பேன்.

அவர் ஒருவரே முழு எதார்த்த வாதி என்று அவரைப் பார்க்க இத்தனை வருடம் கழித்துச் சமீப வருடங்களில்தான் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது. உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று கூட எனக்குத் தோன்றவில்லை.

ஏன் சமத்துவம் என்பது ஒரு மாரீச மான் மட்டுமல்ல, அதை அடைந்தால் மனித குலம் அந்த மான் ஒரு பேரரக்கன் என்பதை அறியும் என்பதையும் பேசலாம்.

இப்போதைக்கு சில அறிவிப்புகளை மட்டும் தருகிறேன்.

அசமத்துவம் என்பதை எடுக்க முடியாது, அழிக்க முடியாது, அது இருப்பதுதான் மனித படைப்பு சக்திக்கே உந்து சக்தி என்று கருதுபவன் நான். அதற்காக நான் விமானத்தில் போக வேண்டும் வேறு மக்கள் தெருவில் குப்பை அள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்று என் மீது ஈட்டி வீச யாரும் தயாராக வேண்டாம்.

ஒரு அளவுக்கு மேல் inequality அசமத்துவம் என்பதைக் குறைக்க முடியாது.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் சாதாரணமாக 1:4 என்ற விகிதத்தில் அசமத்துவம் இருப்பதாகச் சொல்வார்கள். இதையும் குறைக்க முடியலாம்.

எல்லா மனிதருக்கும் ஒரே சம்பளம் என்றும் அனைவருக்கும் ஒரே தொகைதான் வருடத்துக்கு என்று ஆக்கினாலும் அசமத்துவத்தைக் குறைக்க முடியாது. அப்படிக் குறைத்தால் வேலை செய்ய வருபவர்கள் மிகக் குறைவாகவும், வந்தாலும் துலக்கமாகச் செய்பவர்கள் குறைவாகவும், துலக்கமாகச் செய்தாலும் புது உத்திகள், முன்னேற்றத்துக்கான கண்டு பிடிப்புகள் ஆகியனவற்றிற்காக தம் அனைத்தையும் கொடுப்பவர்கள் மிகக் குறைவாகவும் ஆவர் என்பது என் ஒரு ஊகம்.

எதிர்மறையாக எல்லாரும் அசாதாரண ஊக்கத்துடன் சமூகம் முன்னேற என்று உழைக்கத் துவங்கினால் எனக்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

இது வெறும் உழைப்பு அதற்கான ஊதியம் என்ற ஒரு குறுகிய தளத்தை மட்டும் கருதிப் பேசியது. இதைப் பெருக்கினால் ஏதேதோ விளைவுகள் நம் கண்ணுக்குப் புலப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.