புத்தக விவரம்:
தலைப்பு: நிலா வேட்டை
முதற் பதிப்பு: அக்டோபர், 1998
வானதி பதிப்பகம்
விலை: ரூ. 32.00
ரா.கி. ரங்கராஜன் முன்னுரையில் இருந்து சில பகுதி:
‘ஒளிப் பாம்புகள்’ யதார்த்தத்தில் இருந்து விலகி, அதே சமயம் சுவாரசியமான பயமுறுத்தலைக் கொண்ட கதை. ஒரு கணம் படமெடுத்து ஆடி மறுகணம் சரசரவென்று வழுக்கிக் கொண்டு ஓடும் நாகப் பாம்பு கதையிலும் இருக்கிறது; நடையிலும் இருக்கிறது!
When you turn the last page and feel a little as if you have lost a friend – அதுவே ஒரு நல்ல கதையைப் படித்தோம் என்பதற்கு அடையாளம்.
-oOo-
பா ராகவன் நன்றியுரையில் இருந்து சில பகுதி:
இந்தத் தொகுப்பில் உள்ள இரண்டு குறுநாவல்களுமே மிகவும் நெருடலான விஷயங்களை விவரிப்பவை. கொஞ்சம் பிசகினால் ஒரு விரச உற்சவமே நடந்துவிடும் என்பது போல. ஆனால், எழுத்தில் ஆடையவிழ்ப்புச் செய்யாத ஆணமையை கல்கி எனக்குக் கொடுத்தது.
முற்றிலும் குறியீட்டு வகை சார்ந்த, சம்பிரதாய வடிவமற்ற ‘ஒளிப்பாம்புகளை’யும் கல்கியில்தான் எழுதினேன் என்பது பெரும்பாலானோருக்கு வியப்புத் தரலாம்.
-oOo-
கதையில் கவர்ந்த சில இடம்:
- “விலக்கி வைக்க சரியான வழி, கடந்து போவதுதான்!” என்றார் சாமி. “சொந்தக்காரனா இல்லாமெ, பார்வையாளனா மட்டுமே இருக்கணும்னா, அதுக்கான உபாயம். தந்த்ரம் படிக்கிறவன் ஒரு பாம்பாட்டி. அவன் மனசு ஒரு மகுடி.”
- “கெடைச்சது போதும்னு உட்கார்ந்துடறவன் சித்தன். இன்னும் வேணும்னு போறவன் யோகி. அப்படியே தேடிட்டுப் போக கடேசியிலே மெய்யா ஒண்ணைப் பார்த்துட்டு மிச்சமெல்லாம் ஒண்ணுமில்லேன்னு சும்மா நிக்கறவன் ஞானி!”
-oOo-
இரண்டு வரி விமர்சனம்:
செப்டம்பர் 3, 2004 சங்கர்ராமன் கொலை செய்யப்பட்டார். நல்லவேலை ‘தவத்திரு பிரம்மானந்த சாமி டிரஸ்ட்‘ பள்ளியின் தலைமை ஆசிரியர் தப்பித்து விட்டார்.
பாம்பு என்பது அஃறிணை; சாமியார் என்பது உயர்திணை. பாராவின் நடையில் சாமி திடீரென்று உயர்திணை விகுதியில் உலா வருகிறது; அதே ஆளுக்கு அன்னியோன்யமான அஃறிணையும் இட்டு கௌரவிக்கிறார்.
நாச்சியார் திருமொழியில் அஃறிணைப் பொருளான வெண்சங்கைப் பார்த்து ஆண்டாள் ‘சங்கனாயா’ என்பார். சங்குஅனாயா என்றால் சங்கர்+ஐயா என்றும் பிரிக்கலாம். அஃறிணைச் சங்கு உயர்திணை மரியாதை பெற்றதே நாச்சியார் அனுபவம். தெய்வாம்சம் தருபவர் மனித மாச்சர்யம் பெறுபவது பாரானுபவம்.
வாய்திறந்து பேசுகிற உயிர்கள் உயர்திணை; வாய் பேச இயலாதவை அஃறிணை. மனதிற்குள் ஆசையை வைத்து குமைவது அஃறிணை; வெளிப்படையாக லஜ்ஜையில்லாமால் போட்டுடைத்து ஆசைக்கு அடிமை என ஒப்புதல் வாக்குமூலம் சொல்வதால் உயர்திணை ஆகிவிடுவோமா?
மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். ஆறறிவு படைத்த உயர்திணை மாந்தர் ஆறாவது அறிவு கொண்டு அஃறிணை பாம்புகளை ஒளி என்னும் உயிரற்றவைகளாக ஆக்கினால் உயர்திணை.
அஃறிணை பாம்புகளுக்கு ஒளி கிடைத்தால் மோட்சம்!
பா.ரா.வின் முந்தைய சிறுகதை: உண்ணி – பா. ராகவன்
I have read this novella. It was interesting reading. Pa. Ragavan did make suspension of disbelief possible. However, it isn’t a great work by any standards. More like a better Endamoori Veerendranath.
Thanks RV sir.
Planning to write a short review on the main novel ‘Nila Vettai’ also. Any comments, preview thoughts on that story ?
பிங்குபாக்: வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன் « Snap Judgment