சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”


cholas-pallava-brahmins-history-culture-research-society-booksபர்டன் ஸ்டைனின் ‘பெஸன்ட் ஸ்டேட் இன் மெடீவல் ஸௌத் இண்டியன்’ (Peasant State and Society in Medieval South India By Burton Stein)

ஹவாய் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியராக இருக்கும் ஸ்டைன் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகளிலிருந்து முற்றிலும் புதிய முடிவுகளுக்கு வந்திருக்கிறார். அதே கல்வெட்டுக்கள்தாம், செப்பேடுகள்தாம்; ஆனால் முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவை.

சோழப் பேரரசு என்பதெல்லாம் ரீல். நாடு, கூற்றம் என்ற பிரிவுகளில் விவசாயிகளும் பிராமணர்களும் ஏறக்குறைய தன்னிச்சையாகப் பரிபாலனம் செலுத்திவந்த நிலப் பகுதிகளின் இறுக்கமற்ற சேர்க்கைதான் சோழ மண்டலம் முழுவதும். சோழ மன்னர்களுக்கு அவர்கள் ஒன்றும் அப்படியே சரண் அடையவில்லை. திறை செலுத்தினாலும் சுதந்தரமாகத்தான் இருந்தார்கள் என்று ஆணித்தரமாகக் காட்டுகிறார்.

அவர் சொல்வது நிசமென்றால் நாம் இதுவரை சோழ ராஜாக்கள் பற்றி எழுதியிருக்கும் சரித்திரக் கதைகள் அனைத்தும் ரீல். எல்லாம் கான்ஸல்!

இந்தப் புத்தகத்தைப் பற்றி நம் தமிழறிஞர்கள் எதுவும் கண்டுகொள்ளாதது வியப்பாகவே இருக்கிறது. ஆழமான ஆராய்ச்சியுள்ள புத்தகம்.

இதில் இருக்கும் அடிக்குறிப்புக்களை நோக்கும் போது கலிபோர்னியா, சிகாகோ போன்ற எத்தனையோ அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிலம்பிலிருந்தும் சங்கத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டி எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது.

மற்ற பேராசிரியர்கள் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கும்போது இங்கு ஒரு கோஷ்டி லெமூரியா சரடு விட்டுக்கொண்டிருக்கிறது.

(ஆகஸ்ட் 1989)

முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு): சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்

Table of Contents
cholas-pandiyans-kings-books-research-history-culture-tn-tamil-naduIntroduction
I South India: The Region
II Formation of the Medieval Agrarian Order Brahman and Peasant in Early South Indian History
III Peasant Micro Regions: the Nadu
IV The Coromandel Brahmadeya Village
V Right and Left Hand Castes (valaṅgai and iḍaṅgai)
VI The Transition to Supra-local Integration in the Twelfth and Thirteenth Centuries
VII The Chola State and the Agrarian Order
VIII The Vijayanagara State and Society

From Books Reviews (Excerpts)

1. Stein’s characterization of the Chola empire (and by extension of other traditional Indian kingdoms) as a “pyramidal segmentary state” with a king whose principal function is more ritual than executive has not been universally accepted, it has come to constitute the central focus of subsequent discussion of the subject.

2. In a usage borrowed from Aiden Southall, Stein portrays the medieval South Indian state as an organic structure that gained its power and cohesion directly from local society. The basic units of the state were not administrative divisions, but peasant microregions (nadus – நாடுகள்).

Within these areas of intensive rice agriculture, dominant peasant Sudra cultivators with powerful Brahmin priestly groups ruled by means of local assemblies (நாட்டார் – nattaar).

Within each naadu or ‘discrete social universe’, the respectable Vellalas, Kammas and Reddys patronized Brahmin-managed temples, individual priests and most strikingly the large Brahmin-landlord-run villages (brahmadeyas – பிரம்மதேசங்கள்).

The dominant Sudras gained legitimacy and ritual purity in return.

The Pallava-Chola states rose by agglomerating or ‘massing’ several hundred nuclear or core areas, but these medieval rulers did not use vast royal standing armies to conquer and destroy local institutions. Nor did they deploy vast numbers of paid royal officials to integrate their empire – in contrast to the older view K.A. Nilakanta sastri and other historians. To be sure, within the “circumscribed core territories of their capitals’, the Pallava-Chozha monarchs exercised “compelling coercive power’ (p. 24). Beyond the Kaveri River Zone, however the king ruled by ‘ritual hegemony’ rather than executive authority, that is (following A.M. Hocart’s theory of ‘sacral kingship’), by the recognition of the monarch’s superior royal dharma on the part of local notables.

Each Pallava or Choza ruler buttressed this claim by constructing and endowing huge temple complexes, by patronizing Brahmins and by furthering the royal Siva cult.

3. The ‘segmentary model’ was applied to the Chola state in South India by Burton Stein in his influential work, Peasant State and Society in Medieval South India (New Delhi, 1980). Stein has been severely criticized by several historians, in particular, R. Champakalakshmi, ‘Peasant State and Society in Medieval South India – A Review Article’, IESHR, 18, 3–4 (July–December 1981), 411–26; B. D. Chattopadhyaya, ‘Political Processes and the Structure of Polity in Early Medieval India’, presidential address, (Ancient India) PIHC, 44 session (Burdwan, 1983), New Delhi, 1984, 25–63; and James Heitzman, ‘State Formation in South India, 850–1280’, IESHR, 24 (1987), 35–61.

7 responses to “சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”

 1. பர்டன் ஸ்டெய்ன் எழுதியது பரவலாகத் தெரிந்ததுதான்.என்ன சுஜாதாவிற்கு யாருக்கு என்ன தெரியும் என்று தெரியாது.தொழில்முறை வரலாற்றாய்வாளார்கள் எதில்
  என்ன எழுதுவார்கள் என்று தெரிந்து கொள்ளும் அக்கறை கிடையாது.
  தர்மா குமார் போன்றவர்களை
  அவர் எங்காவது குறிப்பிட்டிருக்கிறாரா
  இல்லை கோசாம்பியை.
  Nature, Science படிப்பதுடன் மற்றும் துறைகள் சார்ந்த cell, JACS போன்றவற்றை படிப்பவர்களும் உண்டு.
  Popular Mechanics அல்லது New Scientist படித்துவிட்டு அதுதான் அறிவியல் என்று நினைப்பவ்ர்களும் உண்டு.

  சுஜாதா New Scientist படித்துவிட்டு
  அதை அரைகுரையாக புரிந்து கொண்டு அதை தமிழில்
  எழுதி அதுதான் அறிவியல் என்று
  சொல்லும் பேர்வழி.

 2. சொன்னால் நம்ப மாட்டீர்கள்!

  அதே பத்தியில் தன் அறிவியல் எழுத்து குறித்தும் (அப்போது கதிரில் தொடராக வந்தது; சிலிகான் சில்லு என்பது போல் ஏதோ!) அதன் மேல் எழுந்த விமர்சனம் குறித்தும் பதில் எழுதியிருக்கிறார்.

  நீங்க சுஜாதாவின் ஆவியோ 😛 😀

 3. நான்
  நான் கடவுளுமில்லை
  நான் பாஸ்டன் பாபாவுமில்லை
  [நாங்க எம்ஜிஆர் இல்லை
  நாங்க நம்பியாரும் இல்லை
  ஸ்டைலில் படிக்கவும் :)]
  பாட்டு சிவா மனசில சக்தியில்

 4. Burton’s arguments are completely false. The reasons are:
  1) Brahmadeyams were territories gifted by kings to brahmins for settlement, not territories occupied and owned by brahmins.
  2) All territories including brahmadeyams had to pay tax to the king (similar to the zamindari system in British India).
  3) Chola conquest of Sri lanka is recorded not only in India but also in the Mahavamsa of Sri lanka. Mahavamsa is well known for its continuous keeping of records (as well as for being the main motivation of Sinhalese hatred towards Tamils).

 5. தகவல்களுக்கு நன்றி சண்முகம்

 6. பிங்குபாக்: 1992: சிறந்த 10 - சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கம்) « 10 Hot

 7. பிங்குபாக்: ராஜ ராஜ சோழன் – தமிழ் புத்தகத் தொகுப்புகள் | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.