குமுதம் குளறுபடி: தலை பத்து டெக்னாலஜி


patch_problemsஅசல்: Kumudam :: மணிவண்ணன்

(சந்தா இன்னும் செலுத்தாதவர்களுக்கான) நகல்: Science & Technology Advancements: Latest & Greatest from 2008 « Top Ten: “21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான கண்டுபிடிப்புகள் ஒன்று முதல் பத்து வரை.”

#2 ஆக எழுதி இருப்பது:

பர்த் கன்ட்ரோல் பேட்ச்

கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்’ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன்.

இப்பொழுது பத்து ஆபத்து:

  1. ஆணுறைக்கு மாற்றாக இதை உபயோகிக்க வேண்டாம்.
  2. ABC News: Do You Know Birth Control Patch’s Risks?: “Do Users of the Birth Control Patch Know Enough About Its Potential Dangers?”

  3. பிரசவத்தின் போது இறக்கும் வாய்ப்பை விட 15 மடங்கு அதிக விபரீத வாய்ப்பு இந்த பட்டியை ஒட்டிக் கொள்வதால் அதிகரிக்கிறது.
  4. இந்த patchஐ உபயோகித்தவர்களில் இன்றைக்கு மட்டும் இதுவரை 17 பேர் மரணம். 62 பேருக்கு முடக்கம்.
  5. மூட்டு வலி, கால் வீக்கம், மூச்சிறைப்பு போன்றவை உங்களுக்கும் வேண்டுமா? இந்த அதிநவீன தொழில் நுட்பத்தை இன்றே நாடுவீர்.
  6. Birth control patch linked to higher fatality rate – Women’s health- msnbc.com: “Report: Device has three times greater risk of stroke, blood clot than pill”

  7. ஆணுறை தவிர இந்த மாதிரி பேட்ச் போடும் முறை பாதுகாப்பானதல்ல. எஸ்.டி.டி போன்ற பால்வினை நோய் தொற்றிக் கொள்ளக் கூடும்.
  8. உடல் பருமன் அதிகரிக்கும்
  9. இரத்தம் உறைந்து, கட்டிக் கொள்ளும். குறிப்பாக நடுத்தர வயதினருக்கு உறைகட்டிக் கொள்ளுதல் அதிகமாகும்.
  10. அமைச்சர் அன்புமணிக்கு பிடிக்காததை செய்ய இயலாது. சிகரெட்டில் ஒரு தம் கூட இழுக்க முடியாது
  11. பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்க்கவும்.
  12. பாதுகாப்பான பாலுறவிற்கு பர்த் கன்ட்ரோல் பாட்ச் உபயோகம் ஆனதல்ல. எயிட்ஸ் கூட வந்து சேரலாம்.

4 responses to “குமுதம் குளறுபடி: தலை பத்து டெக்னாலஜி

  1. //கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்’ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன்.//

    நான் முதலில் படித்த போது ‘பேச்சு மட்டும் போதும்’ என்று படித்தேன் :)))))

    மும்பை பேண்டிட்டோஸ் என்று ஒரு படத்தில் ராகுல் போஸ் ஒரு மும்பை சாலையோர பாலியல் தொழிலாளியிடம் ‘சும்மா பேச்சு துணைக்கு’ கூப்பிடுவார். அவள் பதிலுக்கு ‘பேச்சு மட்டுமா? அப்படியென்றால் டபுள் ரேட்’ என்று சொல்வாள் :-))))

  2. \\பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்க்கவும்\\ அந்த ஆங்கில செய்தி துணுக்குதான் படமா?

    பாயிண்ட் 5 மற்றும் 10 ஒன்றுதானே?

  3. ஸ்ரீதர்,

    ‘பேச்சு மட்டும் போதும்’ என்று படித்தேன்—

    அதான், சார்ச் புச் போயாச்சே! இனி மக்கள் செயலிலும் இறங்கலாம் 🙂

    Alternative films என்றால் ‘கூப்பிடு ராகுல் போஸை’ என்பார்கள் போல. இனிமேல்தான் அந்தப் படத்தைப் பார்க்கணும்.

  4. சத்யா,

    பல புள்ளிகள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

    ஒற்றை வரியில் ‘கெடுதல்’னு மட்டும் சொன்னால், பத்து/ஆபத்து என்று எதுகை மோனையாக சொல்ல முடியாது.

    இதை விட உடல்நலத்திற்கு கம்மியான கேடு விளைவிக்கக் கூடியதாக கருத்தடை மாத்திரை அல்லது மேலும் உயரிய பாதுகாப்பு வழங்கும் ஆணுறை ஆகியவற்றை விட எந்தவிதத்திலும் லாபமற்ற நுட்பத்தை ‘புதிது’ என்பதால் மட்டும் குமுதம் போன்ற பரவலாக வாசிக்கு இதழ் பிராபல்யம் வழங்குவதற்கு ஒரு ‘கவன ஈர்ப்பு தீர்மானம்’.

    இந்த patch பணக்காரர்கள் மட்டுமே வாங்கக் கூடிய விலையில் இருக்கலாம். எனினும், கவர்ச்சியான விளம்பரங்கள் அனைவரையும் சொக்கி இழுக்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.