பத்ரியின் எண்ணங்கள்: முஸ்தஃபா தாஹிர் லகடா பதிவைப் பின் தொடர்ந்து:
டில்லியில் இந்த மாதிரி சம்பவங்கள் இன்னும் அதிகம். 90களில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டாவது இந்தியன் எக்ஸ்பிரசில் இடம்பெறும்.
அமெரிக்காவில் இந்த மாதிரி விபத்துகளைத் தவிர்க்க, ஸ்டியரிங் வீலைத் தொடுவதற்கு முன் வாயை ஊதி ஆல்கஹால் இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்கு சட்டம் இயற்ற முயல்கிறார்கள்.
அந்த மாதிரி சாதனம் வைப்பதை ப்ரைவசி குறுக்கீடு என்று ஒரு சாரார் விரும்பவில்லை (மதுபான/சாராயக்க்கடை லாபியிஸ்ட்)
அப்படி சாதனம் இருந்தாலும் 21+க்குத்தான் மது என்பதையே ஒழுங்காக நடைமுறை செய்யாத சமூகத்தில் இதற்கும் மாற்றுவழி வந்துவிடும் என்று இன்னொரு சாரார் கிடுக்கிப்பிடி சட்டத்தைக் கோருகிறன்றனர்.
குடித்துவிட்டு வண்டியோட்டினால், முதல் முறை செய்த தவற்றுக்கு உரிமம் ரத்து. இரண்டாம் முறை கடுங்காவல் சிறை என்று வைக்கலாம்.
அமெரிக்காவில் குடித்துவிட்டு கார் ஓட்டி பிடிபட்டால், உரிமம் ரத்து, காப்பீடு சர்சார்ஜ், காப்பீடு பிரிமியம் அதிகமாகும். 10 வகுப்பு IDRC வகுப்புக்கு செல்ல வேண்டும். இரண்டாம் முரை பிடிபட்டால், 25,000 $ வரை சர்சார்ஜ் செல்லலாம். கம்யூனிட்டி சர்வீஸ், IDRC வகுப்பு தொடரும். இப்போது AA விலும் சேர்ந்து ஒரு பயிறி முடித்து சான்றிதழ் அனுப்ப வேண்டும். மூன்றாம் வர 10 நாட்கள் சிறை, + மேலே சொன்ன எல்லாம்.
இப்போதெல்லாம் காரை கைப்பற்றி அங்கேயே விட்டுவிடுகிறார்கள். சம்பந்த பட்டவர்கள் பெயிலில் வந்து வீட்டிற்கு எடுத்து சென்றால் ஒழிய. முன்பெல்லாம் மார்ஷலில் tow செய்து கொண்டுபோவார்கள்.விபத்து நிகழ்ந்தால், அது criminal குற்றத்தில் வரும். அதியும் விட மதுபான கடைகளும் பொறுப்பேற்க வேண்டும். நண்பர்கள் வீட்டில் குடித்து, கார் ஓட்டி விபத்து நடந்து யாருக்காவது காயம் ஏற்பட்டால் நண்பர்களும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும். குடித்துவிட்டு யாரையும் கார் ஓட்ட அனுமதிக்காதீர்கள்.
தல, அப்படி ஒரு விதிமுறை வந்தா பார் வாசலில் நின்னுக்கிட்டு நாம ஊதி வண்டியை ஸ்டார்ட் பண்ணிக் கொடுக்கும் வியாபாரம் ஒண்ணு ஆரம்பிக்கலாமா?
கொத்ஸ்,
பார் வாசலில் நின்றால், பழக்கதோஷத்தில் உள்ளே பூந்துவிடாமல் இருக்க பழக்கப்படுத்திக்கணுமே 😉
பத்மா,
பதிவாக்குவதற்கு முன் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்திருக்கலாம்.
எனினும், மாஸசூஸட்சில் குடித்துவிட்டு வண்டியோட்டுவதன் சட்டம் கடுமையாக இல்லை.
மாதத்திற்கு ஒன்றாவது (அதுவும் சிறுவர்கள்) இறப்பதாக ‘மெட்ரோ’ பகுதியில் செய்தி வருகிறது 😦