நன்றி: உயிர்மை
பெருவிரைவு ரயிலில்
அரை மணி நேரப்
பயணம்;
பரிச்சயம் செய்துகொண்ட
பக்கத்து இருக்கை பெண்மணி
வங்கி அலுவலராம்;
குழந்தைகள், புத்தகம்
பேச்சு நீண்டது
ஷெண்டன்வே பக்கம்
வந்தால் வங்கிக்கு வர வேண்டும்
விடைபெற்றார்
ஆறு மாதம்
கழித்து வேறு
வேலையாக அந்தப்
பக்கம் சென்றபோது
வங்கியில் நுழைந்தேன்
உணவு இடைவேளையில்
அந்நியமான பார்வை
கண்டு
வழித்துணையாய்
வந்ததை நினைவுபடுத்தியபோதும்
என்னைத் தெரியாமல் போனது
அவருக்கு
‘இப்ப இங்க வேலை எதுவும்
காலி இல்லை’ மெல்லிய
புன்னகையோடு சொன்னார்
அதன்பின்
எத்தனையோ பயணங்கள்
என்றாலும் வழித்துணையாய்
வருபவர் முகவரி கொடுத்தால்
வாங்கிக்கொள்ளத்தான் செய்கிறேன்
மிகவும் தெரிந்தவர்களே ,சமயத்தில் பார்த்தும் பார்க்காதது போல் இருக்கும் காலத்தில் ,நீங்கள் ரயில் சினேகத்தை நம்பி ஏமாந்தீர்களே!!!!!