பத்மா அர்விந்த் (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு) கொடுக்கும் பருந்துப் பார்வை
பொதுப்பள்ளிகள் இயங்கும் முறை குறித்து எழுத வேண்டும் என்று நீண்ட நாளாகவே ஒரு எண்ணம் உண்டு. ஜனவரி மாதம் மாற்றலாகி வந்தாலும், எந்த வித தடங்கலும் இன்றி இந்த ஊரில் வசிப்பவர் என்ற சான்றிதழ் மட்டும் இருந்தால், பள்ளியில் சேர்த்துக் கொள்வதோடு, பாடபுத்தகங்கள், இசை குழுவில் சேர்ந்தால், கருவி, பள்ளி செல்ல பேருந்து என அனைத்தும் வரிசைக்கிரமமாக நடக்கும்.
யார் தயவும் தேவையில்லை.
இத்தனை ஒழுங்கு இருந்தாலும், பள்ளிகள் நடக்கும் செயல்பாடு வெளியே பலருக்கும் தெரிவதில்லை. அமெரிக்காவில் எதையும் பொதுப்படையாக சொல்ல முடியாது. மாநிலங்கள் இடையே, மாவட்டங்கள் இடையே நகரசபைக்களுக்குள் என திட்டங்கள், சட்ட முறைகள், பள்ளிவிடுமுறைகள் என பலவும் வேறுபடும். இங்கே மாணவர்களுக்கு என்று சில உரிமைகள் உண்டு.
நியுஜெர்சியில் பள்ளி ஆசிரியராக அரசாங்க அங்கீகாரம் உள்ள சான்றிதழ் வேண்டும்.அந்த சான்றிதழ் வருடா வருடம் நீட்டிக்க தேவையான CEs (continued education credit) வேண்டும்.
அதே போல பள்ளி தகுதிக்கான சான்றிதழ் பல காரணிகள் கொண்டு தீர்மானிக்கப்படும். உதாரணமாக பள்ளியின் தொழில் நுட்பம், ஒவ்வொரு மாணவனுக்கும் எத்தனை பொருள் செலவு செய்யப்படும், பாடம் தவிர்த்து மற்ற செயல்பாடுகள் (activities), எத்தனை சதவிகிதம் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் (diversity) எத்தனை சதவிகிதம் மாணவர்கள் advanced placement இல் இருக்கிறார்கள், எத்தனை சதவிகிதம் ஒழுங்குமுறைக்காக பள்ளியைவிட்டு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது போல பலவும் அடங்கும்.
பள்ளிகள் நடக்க வருமானம் எங்கிருந்து வருகிறது?
- மாநிலங்கள்,
- மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி,
- பள்ளிகள் தரக்கூடிய (விற்க கூடிய bonds),
- பெற்றோர்கள் அமைப்பு திரட்டக்கூடிய நிதி,
- மாவட்டம் தரும் நிதி,
- மக்கள் கட்டும் வீடு,
- கடைகள் போன்ற சொத்து வரி (property tax),
- சில மாநிலங்களில் தனியாக கட்டும் school district tax போன்றவை
முக்கியமான வருமான தளங்கள் ஆகும்.
கீழே உள்ள ஒரு மாதிரி திட்டத்தை கவனியுங்கள். சொத்துவரியில் பாதிக்கு மேல் பள்ளிக்காக ஒதுக்கப்படுகிறது.
நீங்கள் வசிக்கும் பள்ளி, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாழும் இடத்தில் இருந்தால், பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, அதற்கேற்ப அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொழில் நுட்பங்கள் குறைவு.
School district tax and property tax get distributed as follows:
55.3% பள்ளி
1.4 % விவசாய நில பாதுகாப்பு, வீடு வாங்கும் முன் நகரசமையால் அங்கே நடப்படும் மரங்கள், பூங்கா போன்றவை பராமரிக்க
1.1% நூலகம்
13.6 % மாவட்டம் (county,)(this helps to run county level charter, academic schools and vocational schools)
28.6% Local purposes (sewage, water, maintenance , to remove snow, spread sand salt etc road etc)
பள்ளி நிதிதிட்டம் :: School Budget: (revenue from property tax(also includes school district tax, state grants, federal grants, PTO fund raisers and some time through bonds)
Personnel : all administrative, teachers’ salaries, benefits 60%
Books, music instruments, orchestra or band expense 10%
Gym – school team expenses (sport shirt etc) 5%
Food: Free food for underserved kids, subsidized food for students 15%
Free breakfast for poor kids
Latchkey program (free before and after care)
Teachers’ professional training, kids participation in interschool competition etc 5%
Free Transportation: If the kid lives in less than 2 miles, cannot use free transportation, but parents get $400 reimbursed per year for this purpose. 5%
Apart from public schools, there are charter schools and academic schools run in each county. They are school for academically talented kids who are sponsored by schools and get selected based on performance in competitive exam,
Vocational schools are also run from the tax that we pay, and they gear to students who want to be trained as baker, carpenter or plumber etc.
இது ஒரு அடிப்படை பட்ஜெட். ஒவ்வொரு முனிசிபாலிட்டியும் தங்களின் கல்வி பட்ஜெட்டை சமர்ப்பிக்க, மேயர், நகரசபை உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. கூடுதல் நிதி தேவையானால், மாவட்டம், மாநிலத்திற்கு விண்ணப்பிக்கப்படுகிறது.
இங்கேயே நிரந்தரமாக தங்காதவர்கள், தாயகம் திரும்பி செல்கிறவர்கள் தங்களின் பள்ளி வரியை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.
பட்ஜெட் குறைக்கப்படும் போது முதலில் விளையாட்டு அல்லது கல்வியல்லாத மற்ற செயல்பாடுகள் (Extra curricular) குறைக்கப்படும். இதற்கும் உறுப்பினர்கள் அங்கீகாரம் தேவை. யார்வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அதே போல யார் வேண்டுமானாலும் பாடதிட்ட குழுவில் சேர்ந்து பரிந்துரைக்கலாம்.
மாவட்ட இணைய தளத்தீற்கு சென்றால் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் இன பங்கீடு (racial distribution), ஆசிரியர்களின் கல்வி, எத்தனை மாணவர்களுக்கு எத்தனை கணினி, ஆய்வக வசதி, பள்ளியின் இணைய தொடர்பு போன்றவை, எத்தனை மாணவர்கள் ஒழுங்காக வந்தனர் போன்ற விவரங்கள் இருக்கும். ஒரு மாணவனுக்கு சராசரியாக எவ்வளவு செலவழிக்கப்படுகிறது போன்ற விவரமும் இருக்கும்.
எ.கா பள்ளியின் செலவறிக்கை: Comparative Spending Guide 2008
எ.கா: பள்ளியின் ரிப்போர்ட் கார்ட்: New Jersey Department of Education :: NEW JERSEY SCHOOL REPORT CARD
மாணவர்கள் பள்ளி விதிகளுக்கு உட்படாமல் இருந்தால் முதலில் எச்சரிக்கப்படுகிரார்கள். மூன்று எச்சரிக்கைகளுக்கு பிறகு detention க்கு அனுப்படுவார்கள். அதற்குள் பெற்றோருடன் பேசுவார்கள். மூன்று detention க்கு பிறகு தற்காலிகமாக நீக்கப்படுவார்கள். குறைகள் சரிசெய்யப்பட்டபின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
சில பள்ளிகளில் மாணவிகளால் restraining order வாங்கப்பட்ட மாணவர்கள் சந்திக்காமல் இருக்க சிரமப்பட்டு வகுப்பு பீரியட்கள் கவனமாக திட்டமிடுவதும் உண்டு.
மாணவர்கள் பேச கலந்தாலோசிக்க நம்பிக்கை உள்ள கவுன்சிலர் உண்டு. மனநல ஆலோசகர்கள் உண்டு.
பெற்றோர்கள் விவகாரத்தால் தாயோடு அல்லது தந்தையோடு மட்டும் இருக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தால் பள்ளியிலும் மற்ற பெற்றோர் வந்து பார்க்காமல் இருக்க வேண்டிய கவனம் தரப்படும். இல்லை என்றால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிய முடியும்.
இதே போல சில மாணவர்கள் பாலியல் தொடர்பான நோயுற்றிருந்தால், இல்லை பாலுறவில் ஈடுபடுபவராக இருந்தால் அவரின் அனுமதி இல்லாமல் பெற்றோரிடம் சொல்ல முடியாது.
அதேபோல பல பள்ளிகள் zero tolerance விதியை செயல்படுத்துவதால் துப்பாக்கி, வன்முறை போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தினாலும் வீட்டுக்கு அனுப்ப முடியும். இது போன்ற பள்ளிகளின் கொள்கை நகரசபைக்கு நகரசபைக்கு இடையே கூட மாறுபடும்.
இந்த கொள்கைகள் தீர்மானிக்கப்படும் குழுவில் பெற்றோர்கள் செயல்பட அனுமதி உண்டு. இது மட்டும் அல்லாமல் பள்ளி பாடதிட்டங்கள் நிர்மாணிக்க கூட பெற்றோர்கள் பங்கு கொள்ளலாம்.
நியுஜெர்சியில் மாவட்டம் வாரியாக சில உருப்பினர் உண்டு. இவர்கள் மாநில அரசுக்கும் county (மாவட்ட) அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். பள்ளி தலைமையாசிரியர் சூப்பிரெண்டன்ட்டிடம், அவர் மாவட்ட சேர்மன் (இங்கே freeholder) இடம் தங்கள் பணி குறித்து விவரம் அளிப்பார்கள். Freeholder தன் தலவரிடம் சொல்ல, அது மாதம் ஒருமுறை கூடும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
எடிசனில் ஒரு சர்தார் மாணவன் டர்பன் அணிந்ததால் ஹெல்மெட் போட முடியாமல், விளையாட்டு குழுவில் சேர்த்துக் கொள்ள மறுத்ததும், அந்த பெற்றோர்கள் நீதிமன்றம் போய் டர்பன் அணிந்ததால், ஹெல்மெட் அணிய தேவையில்லை என்றும் மாணவனை மீண்டும் சேர்த்து கொள்ளுமாறும் அனுமதி பெற்று வந்தனர். இந்த வழக்குகள் உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கப்படும்.
உடல்நல குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமும் உண்டு. இதையெல்லாம் மீறி குறைபாடுகள் நடப்பதும் உண்டு. ஆனால் அது கட்டுரையில் சொல்லி இருப்பதை போல இல்லை.
சில பள்ளிகளில் நிறைய சதவிகித மாணவர்கள் பொறுத்தே விடுமுறைகள் தீர்மானிக்கப்படும். இதே போல no child is left behind, free breakfast, health clinic பற்றி தனிதனியாகவே நிறைய எழுதலாம். குறைகள் இருப்பதும், மாநிலங்களுக்கு மாநிலம் கலவி முறை மாறுபடுதலும் உண்டு என்றாலும் விகடன் கட்டுரை போல மோசம் இல்லை.
அமெரிக்காவில் கல்வித்துறை எதிர்நோக்கும் சமகால சர்ச்சை குறித்த என்னுடைய பதிவு: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்
அருமை.
அநேகமாக எல்லாமே இங்கே நியூஸியில் இருப்பது போலவே உள்லது ஒன்றே ஒன்றைத்தவிர.
வசதி குறைந்தவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அரசு கூடுதல் வசதிகளைச் செய்து தருகிறது.
//நீங்கள் வசிக்கும் பள்ளி, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாழும் இடத்தில் இருந்தால், பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, அதற்கேற்ப அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொழில் நுட்பங்கள் குறைவு.//
அடிப்படை கல்வியில் எவ்வித மாறுதலும் இருக்காது. இந்த ஸ்கூல் டிஸ்ட்ரிக்ட் தகராறு பொதுவாக தேசிக்களுக்கிடையே தவறான ஒரு கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வசதிக்கு / சேமிப்பிற்கு மீறி பிரபல ஸ்கூல் டிஸ்ட்ரிக்டுகளுக்கு குடிபெயர்வர்களுக்கு அது பெரும்பாலும் ஒரு கௌரவ பிரச்சினைதான்.
Very useful, thanks!
அருமையான கட்டுரை. இதனைத் தந்ததிற்கு உங்கள் இருவருக்கும் நன்றி!!
ஸ்ரீதர் – அடிப்படைக் கல்வி ஒரே மாதிரி இருந்தாலும் கூட extra curricular activities ம்ற்றும் மற்ற நடவடிக்கைகள் அதிகம் இருக்கும் கல்வி மாவட்டங்களை நாடிச் செல்கின்றோம். அது மட்டுமில்லாமல் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் இருக்கும் இடத்தில் ஆரோக்கியமான போட்டி இருக்கும் என்பதாலும் இப்படிக் குறிப்பிட்ட கல்வி மாவட்டங்களில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
Video: Stupid in America – How We Cheat Our Kids: “Forty minutes ABC News documentary about the education system in America and how it makes us cheating our kids.”