நன்றி: ரவி ஆதித்யா: நான் கடவுள்
அசல்: Raajavin Ramanamaalai – Pitchai Paathiram (Non-Film devotional album)
புதுசு: Pichaipaathiram – Madhu Balakrishnan: Naan Kadavul
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
இந்த வரிகளை தேடிக்கொண்டிருந்தேன்.
மிக்க நன்றி.
அப்படியே பாடலை பதிவிறக்க ஒரு வழிசொல்லீர்!
\\மடற் பதத்தால் தாங்குவாய்\\
இது ‘மலர் பதத்தால்’ என்று இருக்கவேண்டும்.
பிங்குபாக்: நான் கடவுள் - அஹம்ப்ரம்மாஸ்மி « Snap Judgment
பிங்குபாக்: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா « Snap Judgment