1. ‘காஞ்சிவரம்‘ படத்தில் கம்யூனிஸ்ட்களை கொச்சைப்படுத்தியுள்ளதாக குமுறுகிறார்கள் தோழர்கள். நெசவாளர்களின் வாழ்க்கையை பேசும் இந்தப் படத்தில் கம்யூனிஸ்டாக வரும் பிரகாஷ்ராஜூம், அவரது தோழர்களும் சுயநலமிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனராம். ‘திரையிடட்டும், ஒரு கை பார்க்கிறோம்’ என்று காத்திருக்கிறார்கள் காம்ரேட்டுகள்.
2. டிக்சனரி
- டவரு – வளர்ந்து கெட்டவன்
- புளிப்பு மிட்டாய் – சீரியசாக லவ்வும் அப்பாவி
- கலக்கல் கலா – ஓவர் மேக்கப் பார்ட்டி
- அபி – உம்மணாமூஞ்சி
- கபாலிகான் – ஓவர் சீன் போடுறவன்
- அஞ்சு பிளேடு – அறுவை பார்ட்டி
3. கே: ஏன் நடக்கமுடியாத கன்னுக்குட்டியை தலைவர்கிட்ட கொண்டு வந்துருக்கீங்க?
ப: அரசியல்ல ‘எதுவும் நடக்கலாம்’னு ஒரு நம்பிக்கைதான்!
4. கே: என்னது? உன் பையனை நடுத்தெருவில் நிக்க வைக்கறதுக்கு ஒரு லட்ச ரூபா லஞ்சம் கொடுத்தியா?
ப: ஆமா! டிராபிக் போலீஸ் வேலை ஆச்சே!
5. கே: எதுக்கு அவரோட வாட்சைத் திருடினே?
ப: அவரோட டயம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன்!
கே: ஏன் நடக்கமுடியாத கன்னுக்குட்டியை தலைவர்கிட்ட கொண்டு வந்துருக்கீங்க?
ப: அரசியல்ல ‘எதுவும் நடக்கலாம்’னு ஒரு நம்பிக்கைதான்!
எப்பேர்ப்பட்ட நம்பிக்கை பாருங்கள்:) ஆனால், அப்படி நம்புகிறவர்களை அரசியல் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை.
Supper comedy