வேர் இஸ் தி பார்ட்டி – பொழிப்புரை


‘நெவர் ஸெ குட்பை’ படத்தில் வந்த பாடலை ‘முயற்சி காதலை கைகூட்டும்’ என்று மொழியாக்கும் சிம்புவின் முயற்சிக்கு தமிழ்ப்படுத்தல்:

ஹே டோளுமியா
ஹே தாரிமியா
ஹை டோலுமியா
தைய்யா

டால்மியா சிமென்ட் விலை ஏறி சரிந்ததே? அது தாராளமான மதிப்பீடல்லவா? (தாரிமியா மரூஉ) அப்பொழுதே வீட்டு விலையும் இறங்கும் என்றறிருந்திருக்க வேண்டும்: பொருளியல்.

Dole வாழைப்பழம் அங்கக (organic) முறையா? அல்லவே! பொருளாதாரத்திற்கு நிகழ்ந்ததுதான் உலகவெம்மைக்கும் நிகழும் என்பது தெளிவு.

ஹே பைய்யா
ஹே பையா
ஹே பையா
ஹை தைய்யா

அண்ணே என்பார்கள்; சின்னப்பய என்பார்கள்; பாக்கெட்டை ரொப்பிக் கொள்ளும் தன்னலக்காரன் என்பார்கள். அவர்களை கண்டுகொள்ளாமல் ‘தைதை’ என்று குதித்து முன்னேறுவாயாக!

ஹே தூமிலே டூமிலே
தும்மா டும்மாங்கொய்யா
ஹே தும்மா தூமா பையா

டுமீல் சத்தம் கேட்டவுடன் உள்துறை அமைச்சராக ப சிதம்பரம் முன்னேறுவார் என்பதை முன்கூட்டிய சொல்கிறார் கவிஞர் சிம்பு.

தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தவுடன் பழனியப்பன் சிதம்பரம் பிசுபிசுக்கும் என்று எண்ணிய மாம்பழ (கொய்யாவும் கனி என்றறிக) பாட்டாளிகளை ‘ஒங்கொய்யால’ என்று சுடுசொல் தாக்குதலும் நடத்தி, உம்மா கொடுத்த ‘பாபா’ பெட்டிக்கு நடந்த அவமதிப்பாளர்களை ‘பையா’ என்று விளிக்கிறார்

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்குப் போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடிப்பாடி ஆடலாம்

பாரதி என்ன சொன்னான்? ஓடி விளையாடி பாப்பா? பாப்பாவில் பப் ஒளிந்திருப்பதை இதுவரை எவரேனும் கண்டீர்களா?

வோட்காவ என்பதை வோட் கா என்று பிரிக்கவும். வாக்கு காப்போம்; சொன்னதைச் செய்வோம் கட்சிக்கு ‘வா

ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும் தானே மூடிப் போச்சு

நேரத்தே அறுவடை செய். பருவத்தே பயிர் செய். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!

வேர் இஸ் தி பார்ட்டி
ஆ… உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் தி பார்ட்டி
ஆ… நம்ம வூட்டுல பார்டி

‘நீ என்பது நானல்லவோ’ என்னும் சூர சம்ஹார கானம் நினைவிருக்கிறதா? உங்க வீட்டில் என்பது என் நமது வீடு. ஆழ்ந்த தத்துவம் என்பதால் ரீப்பீட்டேய்!

சாடர்டே நைட்டு என்னும் க்ளப்தானே
அது 11:30க்கு மூடினா போரிங்தானே
போலீஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக்ட் ஆனது
நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனது

தமிழ்மணம் ’40’ என்னும் பின்னூட்ட உயரெல்லை வந்தபோது கொதித்தார்களே? ஏன்?

அதைத்தான் பாட்டாலே கேட்கிறார்.

ஹவுஸ் பார்டி கூட் இப்போ இல்லவே இல்லியா
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்பத் தொல்லையா
எங்களுது லைப்பு
இது என்சாய் பண்ற வயசு

தனியாக, சுயம்புவாக இருவரால் இயங்க முடியாதா?
கூகிள் என்னும் பெரியண்ணன் தொல்லையா?
எங்களுடைய மொக்கையை, வேஸ்ட் என்று தீர்மானிக்கும் மூத்த பதிவர்களுக்கு கண்டன கீதம்!

வெர் இஸ் தி பார்டி
ஆ… உங்க வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ… நம்ம வீட்டுல பார்டி

இன்று எங்கே கும்மி என்னும் கூக்குரலை பாட்டாக்கி இருக்கிறான் எங்கள் சிலம்பரசன்.
இன்று என்னுடைய பதிவில் நீ மறுமொழிந்தால், நாளை உன் இடுகைக்கு என் பதில் மரியாதை கிடைக்கும்!

வெர் இஸ் தி பார்டி டுனைட்?
ஆ… உங்க வீட்ல
வெர் இஸ் தி பார்டி டுனைட்?
ஆ… எங்க வூட்ல
வெர் இஸ் தி பார்டி டுனைட்?
நடு ரோட்ல
வெர் இஸ் தி பார்டி டுனைட்?
தமில்நாட்ல

அதன் பிறகு ‘ஒன்று எங்கள் சாதியே! ஒன்று எங்கள் நீதியே!! வலைப்பதியும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ என்று ம.கோ.ரா. வேதமாக அனைவருக்கும் இலவச(க்) கும்மி!

முன்னல்லாம் ஒரு பொண்ணு வேனுமின்னா
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டான்டுக்கும் போனமுங்க
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேனுமுன்னா
இந்த க்ளப்புக்கும் பப்புக்கும்வரணுமுங்க

துவங்கிய இடத்துக்கு மீண்டும் வருவோம். பொருளியல் முன்னேற்றம் நடுத்தர மக்களை மட்டுமே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறது. பிராமணப் பெண்கள் ஸ்கூட்டியும் மாருதியுமாக முன்னேறி விட்டார்கள். ஆனால், பாமரர்களின் நிலை எப்போது உயரும்?

வீட்ல இருந்து போகும்போது எல்லாத்தையும் மறைக்கிறாங்க
பப்புல பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
உன்ன குத்தம் சொல்லாதே
சந்தோசத்த கொல்லாதே

என்னதான் நாடு முன்னேறினாலும் திருடர், தாதா, முரடர்களின் பயம் அதிகரித்துள்ளது. அதனால், வீட்டுக் கணினியில் குக்கீ, ஹிஸ்டரி, கேச் எல்லாம் கோவிந்தா. ஆனால், காபிஷாப் கணினியில் மேய்ந்தாலோ, இதற்கு நேர் மாறாக தவணை அட்டையைக் கூட பயன்படுத்தும் உலகம். அங்கே உலாவும் கொந்தர்களிடம் அடையாளத்தை இழத்தல்!

இதன் பிறகு என்னை குற்றம் சொல்லாதே. பாட்டின் அர்த்தத்தைக் கொல்லாதே என்னும் சுய எள்ளலும், பின்நவீனத்துவ, மாந்திரிக எதார்த்தமும் கூடிய தலைசிறந்த பாட்டுக்கு பாராட்டுகள்!

12 responses to “வேர் இஸ் தி பார்ட்டி – பொழிப்புரை

  1. அட சாமி, எனக்கு தலையெல்லாம் சுத்துது பா

  2. nalla polipurai. remix pattilum samudaya munnaetrathai patri sindhikireergal 😉 yeninum simbhuvirko allathu indha pattai eluthiyavarko idhu patriya sindhanai edhuvum irundirukkathu endru adithu sollalam….

  3. ஆவ்வ்வ்வ்வ்…. கிறிஸ்துமஸ் வரைக்கும் ஆணி எதுவும் இல்லையா என்ன? 🙂

    ரொம்பவே ஆய்ந்து தோய்ந்து எழுதியிருக்கீங்களே.

    //பாப்பாவில் பப் ஒளிந்திருப்பதை இதுவரை எவரேனும் கண்டீர்களா?//

    இல்லையே. பாப்பாதான் பப்குள்ளே ஒளிஞ்சிருக்குன்னு சிம்பு சொல்றார்.

    //சிதம்பரம் பிசுபிசுக்கும் என்று எண்ணிய மாம்பழ (கொய்யாவும் கனி என்றறிக) பாட்டாளிகளை ‘ஒங்கொய்யால’ என்று சுடுசொல் தாக்குதலும் நடத்தி, உம்மா கொடுத்த ‘பாபா’ பெட்டிக்கு நடந்த அவமதிப்பாளர்களை ‘பையா’ என்று விளிக்கிறார்//

    வேணாம். வேணாம்.. அவ்வ்வ்வ்வ் :-((

    //வீட்டுக் கணினியில் குக்கீ, ஹிஸ்டரி, கேச் எல்லாம் கோவிந்தா. ஆனால், காபிஷாப் கணினியில் மேய்ந்தாலோ, இதற்கு நேர் மாறாக தவணை அட்டையைக் கூட பயன்படுத்தும் உலகம்//

    ஆஹா! எப்படி இப்படியெல்லாம்?

    //நேரத்தே அறுவடை செய். பருவத்தே பயிர் செய். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!//

    ம்ஹ்ம்ஹ்ம்… நேரம் இருந்த மொக்கைதான் செய்யுறாங்க.

    வருவியா… இனிமே இந்தப் பக்கம் வருவியா… வந்தாலும் இப்படி பின்னூட்டம் போடுவியா… போடுவியா…

  4. Kunday,

    நன்றி!

    எழுதறவன் எல்லாம் உள்குத்து வெச்சா எழுதறான 😉

    நமே அர்த்தம் செஞ்சுக்க வேண்டியதுதான்

  5. ஸ்ரீதர், பாடல் வரிகள் இரட்டுற மொழிதலாக குழப்பமானவை.

    ‘போட்டோவை போடலாம்!’ என்கிறாரா அல்லது வோட்காவை போடலாம் என்கிறாரா என்று மட்டும் நாற்பத்திமூன்று தடவை மறுபடி மறுபடி ஒலிக்க விட்டு கேட்டுக் கொண்டு தயாரான பதிவு இது.

    போட்டோ என்றால், நயந்தாரா அர்த்தமாகும் அல்லவா… அந்தக் குழப்பங்கள் நீங்கிய பதிவு இது.

  6. பிங்குபாக்: Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review « Snap Judgment

  7. பிங்குபாக்: புத்தாண்டு வாழ்த்து « Snap Judgment

  8. பிங்குபாக்: Where is the Party - Silambattam Inspirations « Snap Judgment

  9. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… முடியல.. ரூம் போட்டு யோசிக்கறதுனா, இதுதானா..?

  10. பிங்குபாக்: படைப்பின் உச்சம் எது? ‘நான் கடவுள்’படமா! நாக்க முக்க பாடலா? « Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.