டிவிட்டவோ உளறவோ வேண்டியது


பரவாயில்லை. இங்கே இருக்கட்டும். தப்பில்லை.

  • இந்த வருட நாயகராக டைம்ஸ் யாரைத் தேர்ந்தெடுக்கும்? பராக் ஒபாமா என்கிறார்கள். அமெரிக்க அதிபர் பதிவில் இன்னொரு இடுகை தயார்.
  • அமெரிக்காவில் புகழ்பெற்றவர் இருக்கட்டும். இந்தியாவின் இந்த வருட நட்சத்திரம் யார்?
  • இந்த வருடத்தில் மிரட்டிய, ரசித்த, வியந்து போக வைத்த தமிழ்ப் பதிவு: யாழிசை ஓர் இலக்கிய பயணம் :: லேகா
  • ஆர்வமின்மையால் சற்றுமுன் தொய்ந்து விட; அயர்ச்சியினால் கில்லி காணாமல் போக; முடிவு வெளியானதால் அமெரிக்க அதிபர் பதிவும் காலியானது.
  • அடுத்தது விளையாட்டு கதாநயாகர்:

michael-phelps-si-sportsman-year-2008-olympics-swim1

canada-internet-usage-usa-social-media-networking-nyt1

  • ஃப்ளிக்கரில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களை எவ்வாறு எளிதாக மேய்வது? காம்ப்ஃப்ளைட்
  • சகிக்கலை/சலிக்கலை – ஒரேழுத்து வித்தியாசம். ‘தெனாவட்டு’ குறித்த சன் டிவி டாப் 10 விமர்சனம்: சலிக்கலை என்பது சகிக்கலை என்று காதில் விழுந்தது.
  • தமிழ்மணத்தின் சமீபத்திய அறிவிப்புகள் இயல்பாக வந்து விழுகிறது. நன்றாக இருக்கிறது.
  • ஒன்பதாண்டுகள் கழிதந்த பின் திண்ணை.காம், வார்த்தை என்னும் அச்சிதழாக உருவெடுத்த மாதிரி தமிழ்மணத்தின் பூங்கா அச்சாக்கம் காண இன்னும் ஏழாண்டு காலம் காத்திருக்க வேண்டுமா? அதுவரை ட்விட்டர் பதிவர்களை விழுங்காதிருக்குமா!
  • கையில் நகச்சுத்தி. ஆங்கிலத்தில் நகச்சுத்திக்கு என்ன பெயர்? ஏன் எலுமிச்சை வைக்கிறோம்?
  • உளறல்.காம் புதிய வோர்ட்ப்ரெஸில் இயங்குகிறது. ஒவ்வொரு புதிய வெளியீட்டிலும் மிரட்டாமல் எளிதாக்கி அசத்துகிறார்கள்.

இவையெல்லாம் சமீபத்தில் ட்விட்டியது:

  1. அக்காலத்தில் காபி கடை பெஞ்சில் இலவசமாக தினசரி படித்தார்கள். இன்றும் அதே காபி கடையில் அமர்ந்து இலவசமாக இணையத்தில் செய்தி வாசிக்கிறாங்க.
  2. I presume Guru peyarchi is smiling on Asia and frowning on USA while utterly confused with EU.
  3. குயிலப் பிடிச்சி கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்; காரை கொடுத்து தங்க நாற்சக்கர நெடுஞ்சாலையும் தந்து ஸ்பீட் லிமிட்டும் போடுகிற உலகம்!
  4. மனக்கிலேசங்களை கருத்தாக சொல்ல விரும்பி பதிவாக்குவது இயல்பு. அப்பதிவிற்கு கேள்விகளால் எதிர்வினையும் டிஸ்க்ளெய்மர்களால் பதிலும் நிறைவது மரபு.
  5. கம்யூனிஸ்ட்டில் ம்யூஸ் (muse) இருக்கிறது. கேபிடலிஸ்ட்டில் கேடலிஸ்ட் (catalyst) இருக்கிறாரே. முந்தையது கலையூக்கி; இது செயல் ஊக்கி?
  6. அடுத்தவர்களின் வாழ்க்கையை ட்விட்டியே ட்விட்டாளனின் பொழுதுபோகிறது. அவர்களிடம் ‘எழுதாமல் வாழ்வாயாக’ என்று சொல்ல லௌகீகவாதிகள் மறந்துபோனார்கள்.
  7. எதுவும் படிக்காமல் சும்மா இருந்தால் சிந்தனை ஊறுகிறது. வாசித்தால் அறிவு விசாலமாகிறது. சிந்திக்காத அறிவுக்கூர்மையா? அறிவில்லாத சிந்தனையா?
  8. சூழலும் தூண்டுதலும் இல்லாமல் தேடல் இல்லை. வீட்டு நாய்க்கு கறி வராவிட்டால், ரெண்டே நாளில் முயலைத் தேடி வேட்டையாடும்.
  9. கூலிக்கு மாரடித்தவனின் நிரலியை நிறுவனம் விற்று லாபமடையும். எழுத்தாளனின் காலத்தைத் தாண்டி நிற்கும் படைப்பினால், எழுதியவனுக்கு என்ன கிடைக்கும்?
  10. Where did மொக்கை come from? I Mock -> Mock I -> மொக்+ஐ -> 2ஆம் வேற்றுமை உருபு Object ஆனது. #Grammar
  11. தம்மடிக்கும் போது தப்பான திசை நோக்கி பிறர் முகத்தில் புகை விடுவது போல் சாலையை கடனே என்று பார்த்துவிட்டு காரை கவனியாமல் கடக்க ஆரம்பித்தான்.
  12. பஜாமாவிலும் பட்டன், ஜட்டியிலும் பட்டன் என்றிருந்தால், ஒரு பொத்தானை இன்னொரு குழியில் இடம் மாற்றித் தள்ளிவிடும் அபாயம் உள்ளது.
  13. கன்றுக்குட்டி ‘ம்மா’ என்று கத்துவது போல் கதறலுடன் குசு ஒன்று வெளிப்பட்டது.
  14. கனவுகள் மேஜிகல் ரியலிசமாய் இருப்பது ஏன்? ஒபாமா போல் எனக்கொரு செல்லப்பிராணி வந்தது. மீடியம் சைஸ் புலியை சிவாவா போல் கையில் கொண்ட துயில்.
  15. கிளவுஸ் போட்டிருக்கிறவளுக்கு கல்யாணமாயிடுச்சான்னு எப்படி தெரிஞ்சுக்கறது?
  16. நாலு பதிவு எழுதறத விட நாலு பாட்ட எம்பி3ஆ பகிர்ந்தால் எட்டு கமென்ட்டு ‘நன்றி’ சொல்லி வருதே. பேசாம ‘மோகன்குமார்’ ஆயிடலாமா!
  17. ராவுக்கு என்னதான் வயித்துக்கு தீனி போட்டாலும், காத்தால எழுந்தா ஏதாவது கேட்கும். நேத்து பூ வாங்கிக் கொடுத்திருந்தா, அது நேத்தே வாடிப் போயாச்.
  18. டிவி சீரியல் மாதிரி மத்தவன் புலம்பலைக் கேட்பது ‘following’. யூ-ட்யுப் போல் உன்னுடைய கருத்தைக் கேட்பவன் follower. நான் TiVo கட்சி
  19. பொதுவாக என் உடம்பு இரும்பு! உன்னைப் பார்த்தால் ஆகுமே கரும்பு! எதிரிகளெல்லாம் எனக்கு துரும்பு! என்னிக்கும் வச்சுக்காதே வம்பு! #Rajni
  20. உன் கம்ப்யூட்டரில் நான் உலாவியா? ஸ்க்ரீன் ஸேவரா? உன் உலாவியில் நான் புத்தகக்குறியா? Add-onஆ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.