மலந்துடைக்க தாள்களை கடகடவென பறித்த சமயம் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தது நினைவுக்கு வருகிறது.
– 10:33 AM Nov 20th
அதே போன்ற இன்னொரு மலங்கழிக்கும் இடம். ஆத்மார்த்தமாக தியானித்து நச்சுகளை வெளியேற்றுகையில் கிருஷ்ணனே வந்துசேர்ந்தார்.
‘என்னடா! நீ ‘ஒன்லி விமல்’ சூட்டிங், ஷர்ட்டிங் பார்த்தது இல்லையாடா?’
‘ஏஞ்சாமி?’
‘அங்கே கூட இப்படி துணிக்கட்டுகளை பண்டில் பண்டிலாக அடுக்கி வைத்திருப்பார்கள். எண்பதுகளின் தமிழ்நாட்டு கோ ஆப்டெக்ஸில் இதைப் பார்த்தவன் நீ. இருந்தும் ஏன்டா என்னோட இன்சிடென்ட்டை வம்புக்கு இழுத்தாய்?’
‘உங்கள எங்க சாமி உள்ளே இழுத்தேன்? நான் துச்சாதனன். வெள்ளைப் புடைவையாக பேப்பர். கொடுத்தது காஸ்ட்கோ; வாங்கி வைத்தது நான்; தயாரித்தது ஸ்காட் கம்பெனியாம்’.
‘த்வைதம் பேசுகிறாயா? டாய்லெட் பேப்பருக்காக மரத்தை வெட்டியது தவறு என்பாய். அங்கு மீண்டும் பச்சை தழைக்காவிட்டால் க்ரீன்பீஸ் கொண்டு போராட்டம் நடத்துவாய். தண்ணீரைக் கொட்டி ஃப்ளஷ் செய்யாதே என்றும், அதை அப்படியே வைத்திருந்து உரமாக்கலாம் என்றும் பேதம் பாராட்டுவாய்!’
‘சாமீ! ரொம்ப விக்கிப்பீடியா பக்கம் போகாதீங்க. அப்படியே டெமொக்ரசி நௌ எல்லாம் வேணாம்.’
‘அது இருக்கட்டும். மீண்டும் கேட்கிறேன். அள்ள அள்ளக் கொடுத்தவன் கிருஷ்ணன். பத்து தடவை பீ பெய்தால் தீர்ந்து போகும் உருளையோடு ஒப்பிடலாமா?’
‘முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க சாமீயோவ். கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் த்வைதத்தின் அடிப்படையிலும் புத்தம், ஜெயினம் எல்லாம் கடவுள் அபவாதம் என்னும் அத்வைதம் போதிக்குதா?’
‘முதலில் பிரபத்தியை அணுகு மகனே. சர்வமும் சித்திக்கும்’
‘யூ மீன் பாப்பாத்தி?’
‘பிரபத்தி என்றால் பரிபூரண சரணாகதி அப்பா’.
‘எது எப்படியோ. பிரபத்தி பேர் நல்லாருக்கு. அடுத்த தமிழ் ஹீரோயினுக்கு வெச்சுக்கலாம். அதற்கப்புறம் அவளை சரணாகதி அடைஞ்சா மோட்சம் வருமே.’
‘எனக்கு மீராபாய்தான் சரி. நான் ஜூட்.’
உவ்வே…..
எ கொ இ ச
நீங்களும் இப்படி பீன்நவீனத்துவம் எழுதக்கிளம்பிட்டா எங்க நிலமை என்ன ஆவறது….
எம்சத்யா __/\__
கொத்ஸ்,
உங்க நிலைமையை விட்டுத் தள்ளுங்க! பி.ந.த்தின் நிலையை யோசித்துப் பாருங்க 🙂
‘எது எப்படியோ. பிரபத்தி பேர் நல்லாருக்கு. அடுத்த தமிழ் ஹீரோயினுக்கு வெச்சுக்கலாம். அதற்கப்புறம் அவளை சரணாகதி அடைஞ்சா மோட்சம் வருமே’.
அகில உலகக் கனவு தேவதை
பிரபத்தியின் ரசிகர்களின் உணர்வுகளை
புண்படுத்தியிருக்கும் பாபாவை
அகில உலக பிரபத்தி ரசிகர் மன்றம்
கண்டிக்கிறது :).
அய்யா… நான் கடவுள் அல்ல! உம்மைச் சரணடைந்தேன்! 🙂