புதுப்பிக்கப்பட்டடது: 10.10 AM (IST)
அமெரிக்க சனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளது. இதுவரை செனட்டர் ஓபாமா 338 இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் மக் கெயின் 155 இடங்களுடன் உள்ளார்.
வெற்றி பெற 270 இடங்களை தம்வசமாக்க வேண்டும். அதன் படி ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின சனாதிபதி ஆகின்றார். மக்கெயின் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். ஒபாமாவின் பேச்சு ஒன்று இப்போது நடைபெற உள்ளது. அனைவரும் அதை எதிர்பார்த்து ஆர்வத்துடன் உள்ளனர்.
1960ம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் அதிகளவான அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளார்கள்.
அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை நாங்களும் இருந்து நேரடியாகப் பார்க்க கிடைத்தமை எமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.