அமெரிக்க தேர்தலில் கவனிக்கத்தக்க ஒரு அம்சமாக இருப்பது Ballot Measures என வழங்கப்படும் தேர்தல் மூலம் சட்டங்களை உருவாக்கும் முறை. வாக்குச் சீட்டில் வெறும் வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமன்றி அந்த மகாணத்தில் சில புதிய சட்டங்களை உருவாக்குவதில் வாக்காளர்களுக்கு விருப்பு மறுப்புகளை தெரிவிக்க வசதி செய்யப்படும். பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவை சட்டமாக இயற்றப்படும்.
2008 தேர்தலில் 33 மகாணங்கள் மொத்தம் 150 சட்டங்களை தேர்தல் முறையில் நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. கருக்கலைப்பு, இட ஒதுக்கீடு, ஓரினத் திருமணங்கள், விலங்கு உரிமைகள் என சில முக்கிய சமூகப் பிரச்சனைகளை ஒட்டி உருவாகும் பல சட்டங்களும் இதில் அடக்கம்
குறிப்பிடத்தகுந்தவை சில…
கருக்கலைப்பு
காலராடோ மகாணத்தில் மனிதக் கரு உருவாகியதிலிருந்தே அதை ஒரு ஆளாகக்(Person) கருத வேண்டுமா இல்லையா எனும் கேள்வி வாக்கெடுப்புக்கு வந்துள்ளது. ஆம் என அதிகம்பேர் வாக்களித்தால் கருக்கலைப்பு கொலைக் குற்றத்துக்கு சமமானதாக கருதப்படலாம்.
சவுத் டக்கோட்டா மகாணத்தில் தற்போது 24வாரங்கலாகிய கருவை கலைக்கும் உரிமை உள்ளது. அதை நீக்கி முற்றிலும் கருக்கலைப்பை ஒழிக்கும் சட்டத்துக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கலிஃபோர்னியாவில் கருக்கலைப்பை பெற விரும்பும் மைனர்களின் பெற்றோருக்கு தகவல் வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.
இட ஒதுக்கீடு
அமெரிக்காவில் Affirmative Action என வழங்கப்படும் பெண்கள் உட்பட்ட சிறுபான்மையிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் உள்ளது. அரசு வேலைகளை வழங்குவதில் இதை தொடர வேண்டுமா வேண்டாமா எனும் கேள்வி காலராடோவிலும் , நெபராஸ்கா மகாணத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை
குடியுரிமை அல்லாதவர்களுக்கும், சட்டபூர்வ அனுமதி பெறாதவர்களுக்கும் தெரிந்தோ தெரியாமலோ வேலை வழங்குவதை தடுக்கும் சட்டம் அரிசோனா மகாணத்தில் வாக்கெடுக்குப்பு விடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா தன் குடியுரிமை சட்டத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த வாக்காலர்களின் சம்மதத்தை கேட்கிறது. மிசௌரி மகாணத்தில் ஆங்கிலத்தை மாநில அதிகாரபூர்வ மொழியாக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு சம்மதம் கேட்கிறது. ஆரகான்(Oregon) மகாணத்து அரசு பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாணவருக்கு ஆங்கிலமல்லாத மொழியில் பயிற்றுவிப்பதை தடை செய்யும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.
ஓரினத் திருமணங்கள்
தற்பால் அல்லது ஓரினத் திருமணங்களை அங்கீகரிக்கும் அல்லது நிராகரிக்கும் முடிவை அரிசோனா, கலிஃபோர்னியா , ஃப்ளோரிடா மகாணங்கள் முன்வைத்துள்ளன. ஆர்கன்சாஸ் மகாணத்தில் தற்பால் ஈர்ப்புடையவர்களோ அல்லது திருமணத்திற்கப்பால் சேர்ந்து வாழும் தம்பதிகளோ தத்தெடுப்பதை தடுக்கும்/அனுமதிக்கும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.
எரிசக்தி
கலிஃபோர்னியாவில் அரசின் ஆலைகள் மீள்பயன்(Renewable) எரிசக்தி உற்பத்தியை 2020க்குள் 40%மாகவும் 2025க்குள் 50%மாகவும் உயர்த்தும் சட்டமும், மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க அரசு Bondகள் மூலம் நிதி திரட்டும் நடவடிக்கையும் வாக்கெடுப்பிலுள்ளன.
காலராடோவில் எண்ணை மற்றும் எரிவாய்வு (oil and gas) கம்பெனிகளுக்கு வரி உயர்த்தும் சட்டமும், மிசௌரியில் மீள்பயன் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் சட்டமும் வாக்கெடுப்பில் உள்ளன.
பல மகாணங்களிலும் லாட்டரியை உருவாக்கவும், சூதாட்டங்களை தடை செய்யவும், கட்டுப்படுத்தவும் முறைப்பட்டுத்தவுமான சட்டங்கள் வாக்கெடுப்பின் மூலம் இயற்றப்படவுள்ளன.
தேர்தல் முறைகளை சரிசெய்வது, தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு நிதி வழங்குவதை முறைப்படுத்துவது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியை அனுமதிப்பது , கண்ணியமான முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது என பல விதமான சட்டங்களும் மக்களின் முடிவுக்கு விடப்படுகிறது.
கலிஃபோர்னியா மகாணம் உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளை குறுகிய கூண்டுகளில் அடைத்து வைப்பதை தடுக்கும் சட்டம் ஒன்றை வாக்கெடுப்பில் விட்டிருக்கிறது.
இந்த சட்டங்கள் இயற்றப்படுவதை ஆதரித்தும் எதிர்த்தும் பல தன்னார்வ அமைப்புகளும் பிரச்சாரங்களில் இறங்குவதுண்டு.
வாக்கெடுப்பின் மூலம் சட்டம் இயற்றுவது பல நாடுகளிலும் இருந்துவரும் பழக்கமாகும்.
பி.கு
Ballot Measures என்பதை தமிழில் எப்படிச் சொல்வது என்ற என் வெகுளியான கேள்விக்கு கீழ்கண்ட மிரட்டலான பதில்களை தந்து உதவியவர் பாஸ்டன் பாலா…
வாக்காளர் நடவடிக்கை
வாக்குரை உறை
குடிமக்கள் குடவோலை
வாக்குநீதி
மக்கள் முடிவு
மக்கள் மன்றம்
ஓட்டுக் கருத்து
மேலும் படிக்க: http://en.wikipedia.org/wiki/Ballot_measures, http://www.ncsl.org/statevote/2008_ballot_update.htm
மகேசன் தீர்ப்பு
குடவோலை போதும். குகு எல்லாம் ரைமிங்க பேச நல்லா இருக்கு! 🙂
கடந்த காலத்தில் கேட்ட வாக்குச்சீட்டு கேள்விகள் குறித்த என்னுடைய பதிவுகள்:
1. Massachusetts Ballot Measures
2. American Polls: Corruption is top issue & Some Ballot Measures
கலி. குறித்த சர்வேசன் பதிவு: கலிஃபோர்னியாவுல, இந்த மாதிரி தேர்தலின் போது, மாநிலத்தில் செயல் படுத்தவேண்டிய, மிகப் பெரிய திட்டப் பணிகளுக்கு, மக்கள் கிட்ட வாக்கு