அமெரிக்க அதிபராக நடித்தவர்களுள் ஹாரிஸன் ஃபோர்ட் மிகவும் சிறப்பாக மிளிர்ந்ததாக கருத்துக்கணிப்பு வந்துள்ளது.
குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான் மெகயினுக்கும் ஹாரிசன் போர்டுக்கும் ஆறு வயசுதான் வித்தியாசம். இரண்டாம் நிலையில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமாவை ஒத்த மார்கன் ஃப்ரீமன் வந்துள்ளார்.
செய்தி: Harrison Ford voted best U.S. movie president | Entertainment | Reuters
தலை ஐந்து நடிகர்கள்:
1. Harrison Ford in Air Force One
2. Morgan Freeman in Deep Impact
3. Michael Douglas in The American President
4. Bill Pullman in Independence Day
5. Kevin Kline in Dave.
அது சரி. ‘தமிழக முதலமைச்சர்களாக எவ்வளவு பேர், எந்த எந்தப் படங்களில் நடித்திருக்கிறார்கள்?’ என்று ட்விட்டரில் கேட்டதற்கு வந்த பதில்கள்:
- முதல்வன் :: அர்ஜுன் – gradwolf, archanav, ksnagarajan, jayavasanthan, indyjones
- முதல்வன் :: ரகுவரன் – akaasi, srikan2
- ரமணா :: இரவிச்சந்திரன் – ksnagarajan
- தேசிய கீதம் :: நாசர் – ksnagarajan, vjshankar
- மக்கள் ஆட்சி :: மம்மூட்டி – ksnagarajan, gradwolf
- மகாநடிகன் :: சத்யராஜ் – ksnagarajan
- ஜெய்ஹிந்த் :: சாருஹாஸன் – sudgopal
- ராதிகா – TBCD
- காவல் பூனைகள் :: சோமையாஜுலு – vikrambkumar
//ஜெய்ஹிந்த் :: சாருஹாஸன்//
சாருஹாஸன் முதலமைச்சராகும் ஆசையுடன் இருக்கும் அமைச்சர்தான். வில்லன் பாத்திரம்.
இருவர் – பிரகாஷ்ராஜ் / மோகன்லால் உட்டுட்டீங்கப் போல.
ஸ்ரீவித்யா கூட ஒரு படத்தில் முதல்வராக நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஜென்டில்மேன்-ல் ராஜன் பி தேவ் முதல்வராக வருவார். பிளாஷ் பேக்கில் அவர் ஒரு கல்வி மந்திரி.
காதலனில் கவர்னர்தான் (க்ரீஷ் கர்னாட்) வில்லன். முதலமைச்சரும் படத்தில் வருவார் என்று நினைக்கிறேன். யார் என்று நினைவில்லை.
இன்னமும் சில படங்கள் நினைவில் இருக்கிறது. ஆனால் உறுதி படுத்த முடியவில்லை.