மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி


சென்ற பதிவு

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

இப்பொழுது எதுவுமில்லை.

2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.

4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

ஹில்லரி கிளிண்டன்.

(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.

மேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.

குடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.

கட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.

ஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.

சாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.

குறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.

ஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

ஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.

2 responses to “மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

  1. இப்ப ஒபாமா அதிபரா வந்தா அங்கே வசிக்கும் நம் இந்தியர்களுக்கு ஏதாவது பிரச்சினை வருமா? அவரு ஏதோ அமெரிக்காவிலேயே வேலை என்றெல்லாம் சொல்கிறாரே?

  2. //Doubt Kandasamy, மேல் அக்டோபர் 31st, 2008 இல் 1:30 மு.பகல் சொன்னார்:

    இப்ப ஒபாமா அதிபரா வந்தா அங்கே வசிக்கும் நம் இந்தியர்களுக்கு ஏதாவது பிரச்சினை வருமா? அவரு ஏதோ அமெரிக்காவிலேயே வேலை என்றெல்லாம் சொல்கிறாரே?//

    பெரும்பாலான நேரங்களில் அமெரிக்காவிலும் இம்மாதிரியான குரல்களெல்லாம் தேர்தலுக்காக ஒலிக்கப் படுபவையாகத்தானிருக்கும். ஏனெனில் தொழில் நிறுவனங்கள்தான் வேலைகளை அனுப்புவதை முடிவு செய்கின்றன.

    இருப்பினும், பல தொழில் நிறுவனங்களில் பெருந்தலைகள் outsourcing மூலம் பணத்தைச் மிச்சப்படுத்துகிறேன் என்ற போர்வையில் திறமையாகவும், செலவு குறையாகவும் இயங்கிக் கொண்டிருந்த அடிப்படை வேலைகளையெல்லாம் மூட்டை கட்டி அனுப்பி விட்டனர். இதில் இந்தியக் கணினி நிறுவனங்களின் கையூட்டு ஊழல் திறமைகளுக்கும் அதிகப் பங்குண்டு. தற்போதைய பொருளாதார வீழ்ச்சியையொட்டி ஒபாமாவோ, மெக்கெய்னோ நிறுவனங்கள் புதிய அரசின் கண்காணிப்பில் வருமென்றால் சில மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கிறது.

    நன்றி – சொ.சங்கரபாண்டி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.