வாக்குசீட்டு & வாக்காளர்


ஒரு அமேரிக்க வாக்காளரின் விபரம், அவர் கடந்த தேர்தல்களில் அளித்த வாக்கு விபரங்கள், இணையத்தில்:

மாதிரி வாக்குசீட்டு – 1/3 முன்பக்கம்:

மாதிரி வாக்குசீட்டு – 2/3 முன்பக்கம்:

வேலையிலிருக்கும் அனைத்து நீதிபதிகளுக்கு (முக்கால்வாசி ஜனநாயக கட்சியினர்) எதிர்த்து அளிக்கப்படும் வாக்காளரின் 2008 வாக்கு.

வாக்களிக்க முடிவு செய்துள்ளவை கரும் கோளத்தில் தெரிகின்றன!

ஒரு அமேரிக்க மாநிலத்தில் நடக்கவிருக்கும் அதிபர் மற்றைய தேர்தல்களின் முழு வாக்குசீட்டை காண ஆர்வமுள்ளோர், இங்கு காணலாம்:

வாக்குசீட்டு

9 responses to “வாக்குசீட்டு & வாக்காளர்

  1. நீதிபதிகளும் தேர்தலில் நிற்பார்களா?

    நியமிக்கப்படுகிறார்கள் என்று நினைத்திருந்தேன். அல்லது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுமா?

    நீதிபதியாவதற்கான பிரச்சாரம் எவ்வாறு இருக்கும்? நேரடியாக சந்தித்து பேசி இருப்பார்களே?

  2. நீதிபதிகள் என்றில்லை, நீர் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு (அமெஃப்கா), public regulation council (PRC), கல்வி ஆணையம் என பல தேர்ந்தெடுப்புகள் உண்டு. படம் 1 ல் விபரம் காணலாம்.

    நீதிபதியாவதற்கு துண்டு பிரசாரங்கள் வீட்டுக்கு வீடு போடப்படுகின்றன; மற்றும் நாற்சந்தி மூலைகளில் அட்டை பலகைகள், அவ்வளவே. நீதிபதிகள் நியமனம் அல்லது தேர்ந்தெடுப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம், கூகிள் தான் சொல்ல வேண்டும்!

    நி.மெ வாக்குசீட்டை பார்த்தீர்களென்றால் பின்பக்கத்தில் பெரிய கதையே இருக்கும். அதுவும் இந்த bond களை படித்து தீர்மானம் செய்வதற்குள் கண் பூத்து போய்விடும்; நார் கிடைத்தால் அரை முழம் தொடுக்கலாம். இந்த வருடம் bond கள் நிறைவேற வரி ஏற்றம் ஏதுமில்லை என்கிறார்கள்.. படித்து முடிவு செய்ய வேண்டும்.

    போன வருடம் (?) நடுத்தேர்தலொன்றில் bond தேர்தலில் – நூலகம் கட்ட, பூங்கா பராமரிக்க, சிறார்களின் கலையுணர்ச்சிகளை வளர்க்க என பல புண்ணாக்கு விடயங்களை வைத்திருந்தார்கள் – அனைத்திற்கு ஒரு பெரிய “நோ” போட்டேன், ஏதோ சூரவர்மனை தீர்த்து கட்டுவது போல.

    ‘துணைவியாருக்கும்’ நீங்களும் இப்படித்தான் வாக்களிக்க வேண்டுமென ‘கேட்காமலேயே’ அறிவுரைத்தேன்! (தமிழனல்லவா)

    ஆனால்…

    வினா தொடுப்பிற்கு நன்றி.

  3. நமக்கான நீதிபதியை நாமே நியமித்துக் கொள்வது! நன்றாகத்தான் இருக்கிறது.

    செனேட்டர்களை/கவர்னரை மக்கள் வாக்கு மூலம் அமர்த்தி, அந்த அரசியல்வாதிகளால் கொண்டுவைக்கப்படும் நீதிமன்றங்கள் ‘பெரும்னான்மை’ கட்சியின் கொள்கைக்குட்பட்டு செயல்படுகிறது என்னும் குற்றச்சாட்டு எழாது.

    நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதை வரவேற்கலாம். ஆனால், நீங்கள் சொல்வது போல் ஒவ்வொருவரையும் அலசி ஆராய (அல்லது நேரில் சந்தித்து அளவளாவ) எவருக்கு நேரம் கிடைக்கிறது?

    ஒபாமா/மகயின் போட்டியை விட இந்த உள்ளூர் தேர்தல்கள் மிக மிக முக்கியமானவை. நம்முடைய வாழ்வை உடனடியாக பாதிப்பவை.
    ——

    துணைவியாரை வாக்குச்சாவடிக்கு செல்லவேண்டிய அவசியத்தை விளக்குவதற்குள்ளே எனக்கு தாவு தீர்ந்துவிடும்.
    ——

    நூலகம்/பூங்கா/கலை போன்ற இன்ன பிற செலவுகள் முக்கியம்; அதனுடன் காவல்துறை/தீயணைப்பு/பள்ளி போன்றவற்றோடு ஒப்பிட்டால், எங்கே/எப்படி நிதி ஒதுக்குவது என்னும் முடிவை நமது கையிலே விட்டு விடுகிறார்களா!?

    தூள். ஆனால், கொஞ்சம் சிரமமான காரியம்.

  4. I was expecting that you would have a post on Murtha accusing his district as ‘racists’ and later “correcting” it to ‘redneck’. 🙂

  5. டைனோ,
    இதென்ன விஷயம்? தெரியாதே!

    சுட்டி போடுங்க

  6. // நமக்கான நீதிபதியை நாமே நியமித்துக் கொள்வது! நன்றாகத்தான் இருக்கிறது.//

    இதெல்லாம் எவ்வளவு நடைமுறையில் நடக்கிறது என்று பார்த்தால்…. கிட்டதட்ட 99% பேருக்கு நீதிபதியின் பேர் கூட தெரிந்து இருக்காது. ….வாய்க்கால் வழியே ஒடி புல்லுக்கும் ஆங்கே போவது போல, ஜனாதிபதி, கவர்னர் தேர்தலில் ஓட்டு பொடும் போது ஒரு நீதிபதி கழுதைக்கு (?) இல்லாட்டி யானைக்கு ஓட்டு போடுவதோட சரி. ஜனாதிபதி, கவர்னர் தவிர அரசியலில் பெரிய ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. !

  7. உள்ளூர் கவுன்சில், ரெப்ரசென்டேடிவ், மாஸசூஸட்சில் இருக்கும் வருமான வரி கேள்வி போன்றவை ஒபாமா x மெகயின் தேர்தலில் அடிபட்டு காணாமல் போவது வருந்தத்தக்கது.

  8. பிங்குபாக்: வட கரோலினா வாக்குச்சீட்டு: குளறுபடியா? « US President 08

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.