குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் குறித்து நேற்று மட்டும் (மட்டுமே) வெளியான செய்திகள்.
இவர் மைய அரசு செயல்படும் விதத்தை மாற்றி, வாஷிங்டன் அரசின் செலவைக் குறைத்து, மற்ற அரசியல்வாதியைப் போல் இல்லாமல், வித்தியாசமாக, தன்னை உதாரணமாக முன்னிறுத்தி, தேவையில்லா விரயங்களை நீக்கி இயங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு செலவில் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா
குடும்பத்தோடு செல்ல வேண்டிய விழாக்களுக்கு கணவனையும் குழந்தைகளையும், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்துச் செல்லுதல் இயல்பு. ஆனால், அவ்வாறு அவர்கள் அழைக்கப்படாத இடங்களுக்கும், அவர்களை சாரா பேலின் அழைத்து சென்றிருக்கிறார்.
அழையா விருந்தாளியாக சென்றதை மறைக்க, அசலாக கணக்கு காட்டியதை, வெகு நாள்களுக்குப் பிறகு மாற்றி திருத்தியிருக்கிறார்.
டிசம்பர் 2006- இல் பதவியேற்றபின் பதின்ம வயது மகளும் உல்லாசமாக ஊர்சுற்ற ஏதுவாக 64 ஒரு வழி விமானப் பதிவுகளையும், 12 போக-வர பயணங்களையும் அலாஸ்கா அரசின் தலையில் சுமத்தியுள்ளார்.
செய்தி: Palin billed Alaska for kids’ travel – Los Angeles Times
கட்சி செலவில் $150,000த்திற்கு பேலினுக்கு கிடைத்த பகட்டு ஆடைகள்
அமெரிக்காவில் இந்தியர்களும் ஏழைகளும் வால்-மார்ட்டிலும், நடுத்தர வர்க்கத்தினர் ஓல்ட் நேவியிலும், கொஞ்சம் வசதிப்பட்டவர் சியர்ஸ் / டார்கெட்களிலும், மெகயினிடம் வரிவிலக்கு பெறுபவர் மேசீஸ் / லார்ட் அன்ட் டெய்லரிடமிருந்தும் ஆடைகள், அணிகலன்கள் வாங்குவோம்.
செல்வம் கொழிக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபே போன்றவர்கள் மட்டுமே நீமன் மார்கஸ், சாக்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிப்பு பெற்ற கடை பக்கம் எட்டிப் பார்க்க முடியும்.
உடுத்தும் உடைக்காக, சாதாரண அமெரிக்கர் வருடத்திற்கு $1,874 செலவழித்தால், சாரா பேலினோ கடந்த இரு மாதங்களில் மட்டுமே குடியரசு கட்சியின் புண்ணியத்தில் $150,000 கபளீகரம் செய்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ‘பிரச்சாரம் முடிந்தவுடன் இந்த ஆடைகளை தான தருமத்திற்கு கொடுத்துவிடப் போவதாக’ ஜான் மெகயின் குழு தெரிவித்திருக்கிறது.
செய்தி: Sarah Palin went on some kind of RNC-financed shopping spree, Politico says: Top of the Ticket – Los Angeles Times | Sarah Palin won’t be keeping her GOP-financed clothes
அமெரிக்கா என்பது எங்குள்ளது என்றதற்காக பேலின் மன்னிப்பு கோரினார்
வட கரோலினாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது
‘ஒரு சிலர்தான் உண்மையான அமெரிக்கர்கள். இந்த இடத்தைப் போல் சிற்சில இடங்கள்தான் அமெரிக்கா. மற்ற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் போலிகள்; அமெரிக்கர்கள் அல்ல’
என்று பொருள்பட பேசியதற்கு சாரா பேலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
செய்தி: Palin Apologizes for ‘Real America’ Comments – washingtonpost.com: “Two Congressmen Face Backlash After Their Own Remarks Questioning Others’ Patriotism” | P.S. Palin Apologizes – The Caucus Blog – NYTimes.com
துணை ஜனாதிபதியின் கடமை என்ன – சாரா பேலின் பேச்சுக்கு கண்டனம் எழுகிறது
கேள்வி: ‘துணை ஜனாதிபதி என்ன செய்வார்?’
சாரா பேலின்: ‘ஜனாதிபதியின் திட்டத்தை ஆதரிப்பது; ஜனாதிபதியின் அணியில் குழு உறுப்பினராக அங்கம் வகிப்பது போன்றவை துணை ஜனாதிபதியின் பணி.
அமெரிக்க செனேட்டின் பொறுப்பும் அவர்கள் கையில் உள்ளது. துணை ஜனாதிபதி விருப்பப்பட்டால், செனேட்டுக்குள்ளே நுழைந்து கொள்கை மாறுதல்களை விளைவிக்க முடியும்!’
நூறு உறுப்பினர் கொண்ட செனேட் அவையில் 50-50 என்று இழுபறியாக ஏதாவது வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் மட்டும், தன்னுடைய வாக்கை அளித்து பெரும்பான்மையை கொடுப்பது துணை ஜனாதிபதியின் வேலை. மற்றபடிக்கு, செனேட்டில் சாரா பேலினுக்கு ‘திட்டம்’ முன்னெடுத்து செல்ல எந்தவித அதிகாரமும் கிடையாது.
தற்போதைய துணை ஜனாதிபதி டிக் சேனி இவ்விதமாக துஷ்பிரயோகம் செய்துவருகிறார் என்னும் குற்றச்சாட்டு நிலவுவது குறிப்பிடத்தக்கது.
அறிவுசார் சிந்தனைக்கு எதிரானவரா சாரா பேலின்?
இது கேள்வி: The Corner on National Review Online: “Palin’s Alleged Anti-Intellectualism : [Ramesh Ponnuru]”
இது கட்டுரை: The resentments of Sarah Palin: The New Republic :: Barracuda by Noam Scheiber
இது நச் பதில்: The Daily Dish | By Andrew Sullivan (October 22, 2008) – How Anti-Intellectual Is Palin?
- குடும்பத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்? தனி மனித வாழ்வில் பகுத்தறிவு/படிப்பு/கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்?
- பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மகன்
- கல்லூரிக்கு செல்லும் எண்ணமில்லாத மகள்
- வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு அம்மாவின் பிரச்சார பீரங்கியாக செயல்படும் 13 வயது குழந்தை
- மாநகர வருமானத்தை வைத்து விளையாட்டு மைதானம் கட்ட செலவு செய்தது
- அருங்காட்சியகத்திற்கான நிதியைக் குறைத்தது
- புது நூலகம் கட்ட கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்தது
- அரசியல் சாசனம் குறித்த பேதைமை
கொசுறு
Palin: God will do the right thing on election day – It’s easy to get the sense that Sarah Palin is not a vice presidential candidate sympathetic to the concerns of a religious right activist, she’s a religious right activist running for the vice presidency.
முந்தைய இடுகைகள்:
2. அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’
“எங்க புரட்சித்தலைவி, ஹாக்கி ஆத்தா சாரா பேலினுக்கு எதிராகப் பதிவு போட்ட இடதுசாரி, சோசியலிச, தீவிரவாதியே நான் கேட்கிறேன்…..”
நல்ல வேளை இங்க ஆங்கிலத்துல பேசுறாங்க.
பேலினுக்கு எதிராகவா 😛
இது ஆதரவு பதிவு.
1. மெகயின் பசங்க வளர்ந்துட்டாங்க… ஒபாமாவுக்கு குட்டிப் பொண்ணுங்க! நான் மட்டும்தான் தாய். தாயையும் சேயையும் பிரிக்கலாமா?
அதனால்தான் அழைத்துப் போகிறேன்
2. பெயில் அவுட் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த செலவு. பட்டாடைகளை வாங்கி நிறுவனங்களின் நிலையை உயர்த்துகிறேன்; அதைத் திரும்ப தொண்டு நிறுவனங்களுக்குத் தந்து ஏழைகளையும் வாழ வைக்கிறேன்.
ஒபாமா இப்படி செலவு செய்து கோட் சூட் வாங்கினாரா? அதை இல்லாதோருக்கு விநியோகம் செய்வேன் என்று வாக்குறுதி தந்தாரா?
3. எல்லோரும் எனக்கு வாக்களித்தால் அமெரிக்கள் ஆகிப் போவீர்கள். நீங்களும் அமெரிக்காவில் வசிப்பதாக சான்றிதழும் கிடைக்கும்.
4. வானளாவிய அதிகாரம் கொன்ட பதவியை உபயோகிக்கத் தெரியாத பைடன் தேவையா? அதை பயன்படுத்தி $150,000த்தை வறியோருக்கு விநியோகிக்கும் நான் தேவையா?
5. ரொம்ப யோசித்தால் மண்டை குழம்பும்.
எனவே, சிந்தனை செய்யாத சூழலுக்கு இட்டுச் செல்லும் எனக்கு உங்கள் பொன்னான….
Nj Governer need a 101 with her.
எல்லாருக்கும் ஒரு இலவச HD TV தருவாரா? கேபிளும் சேர்ந்து தரணும்.அப்பதான் ஓட்டு, இல்லாட்ட சங்குதான்.
//3. எல்லோரும் எனக்கு வாக்களித்தால் அமெரிக்கள் ஆகிப் போவீர்கள். நீங்களும் அமெரிக்காவில் வசிப்பதாக சான்றிதழும் கிடைக்கும்.//
Me ready to vote for her.
Will she guarantee my GC?
No 🙂 !
எச்டி டிவிதானே? தருவார்.
பிற கன்னல் எதுவும் வராது. நான்கு கன்னல் மட்டும் ஒளிபரப்பாகும்.
1. ஃபாக்ஸ் நியுஸ்
2. பைபிள் கன்னல்
3. யேசு வருகிறார்
4. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் கன்னல்
ரீடர்,
நீங்க மட்டும் வாக்களித்தால் போதுமா 😛
உங்க மாகாணத்தை குடியரசு பக்கம் திருப்ப வேண்டும்! மொத்த எலெக்டோரல் வாக்குகளும் மெகயினுக்கு விழச்செய்ய வேண்டும்.
ஜோ தி ப்ளம்பர் போல் அதிரடியாக அஸ்திரம் தொடுத்தால், ஒருவேளை குடியுரிமை சித்திக்கலாம் 🙂
//செல்வம் கொழிக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபே போன்றவர்கள் மட்டுமே நீமன் மார்கஸ், சாக்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிப்பு பெற்ற கடை பக்கம் எட்டிப் பார்க்க முடியும்.//
இதெல்லாம் டூ மச்சு!!
அப்புறம் இந்த அம்மாவினால் மெக்கெயினுக்கு ஓட்டுப் போடமாட்டேன் எனச் சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. 🙂
கொத்ஸ்,
—-இதெல்லாம் டூ மச்சு!! —
கொஞ்சம் மிகைப்படுத்தல் உண்டு. எனினும், சாதாரணர்கள் அங்கே செல்வதில்லை.
ஏதோ கல்யாணம் அல்லது முதல் நத்தார் தினம் என்றால் எட்டிப்பார்ப்பார்கள்?
—-இந்த அம்மாவினால் மெக்கெயினுக்கு ஓட்டுப் போடமாட்டேன் எனச் சொல்பவர்கள் —
72 வயசாச்சே அவருக்கு! ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிப் போச்சுனா? 😦
//ரீடர்,
நீங்க மட்டும் வாக்களித்தால் போதுமா 😛 //
கலிபோர்னியாவில் இருக்கும் அத்தனை ஸென்யோர், ஸென்யொரித்தா மற்றும் ஸென்யொராக்கள் வோட்டு கேரன்டி. போதுமா? 🙂
பெருங்கையாகத்தான் இருக்கீங்க!
பேசாம கம்யூனிடி ஆர்கனைசராக வாழ்க்கையைத் துவக்கிடுங்களேன் 🙂